ரேணு தேவி
ரேணு தேவி | |
|---|---|
![]() | |
| 7ஆவது பீகார் துணைமுதலமைச்சர் | |
| பதவியில் 16 நவம்பர் 2020 – 9 ஆகத்து 2022 Serving with தர்கிசோர் பிரசாத் | |
| முன்னையவர் | சுசில் குமார் மோடி |
| பின்னவர் | தேஜஸ்வி யாதவ் |
| பீகார் பீகார் அரசு | |
| பதவியில் 16 நவம்பர் 2020 – 9 ஆகத்து 2022 | |
| முன்னையவர் | பினோத் குமார் சிங் |
| பீகார் பீகார் அரசு | |
| பதவியில் 9 பிப்ரவரி 2021 – 9 ஆகத்து 2022 | |
| முன்னையவர் | தர்கிசோர் பிரசாத் |
| பீகார் பீகார் அரசு | |
| பதவியில் 16 நவம்பர் 2020 – 9 பிப்ரவரி 2021 | |
| முன்னையவர் | சியாம் ராஜக் |
| பின்னவர் | சையது ஷாநவாஸ் உசைன் |
| பீகார் பீகார் அரசு | |
| பதவியில் 16 நவம்பர் 2020 – 9 பிப்ரவரி 2021 | |
| முன்னையவர் | கபில் தியோ காமத் |
| பின்னவர் | சாம்ராட் சவுத்ரி |
| பீகார் பீகார் அரசு | |
| பதவியில் 13 ஏப்ரல் 2008 – 26 நவம்பர் 2010 | |
| முன்னையவர் | ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் |
| பின்னவர் | சுகதா பாண்டே |
| உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2020 | |
| முன்னையவர் | மதன் மோகன் திவாரி |
| தொகுதி | பெத்தியா |
| பதவியில் 2000–2015 | |
| முன்னையவர் | பிர்வால் யாதவ் |
| பின்னவர் | மதன்மோகன் திவாரி |
| தொகுதி | பெத்தியா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 நவம்பர் 1959[1] பெத்தியா, பீகார், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | துர்க்கா பிரசாத் |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் | பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம் |
ரேணு தேவி (Renu Devi)(பிறப்பு: நவம்பர் 1, 1959) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகாரின் 7வது துணை முதல்வராக 2020 நவம்பர் 16 முதல் 2022 ஆகத்து 9 வரை பணியாற்றினார்.
ரேணு தேவி 2020ஆம் ஆண்டில் பீகாரிலிருந்து இந்தியாவின் ஐந்தாவது பெண் துணை முதல்வரானார்.[2] பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரான இவர், தற்போது பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னாள் சட்டமன்றத் தலைவராகவும் உள்ளார்.[3][4][5][6][7][8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரேணு தனது பெற்றோரின் மூன்று மகன்கள் மற்றும் ஐந்து மகள்களில் மூத்தவர் ஆவார். இவர் மிகவும் பின்தங்கிய வகுப்பு சமூகமான நோனியா இனக்குழுவினைச் சேர்ந்தவர். இவர் 1977-இல் பீகாரில் உள்ளபாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார்.
ரேணு 1973ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த துர்கா பிரசாத் என்ற காப்பீட்டு ஆய்வாளரை மணந்தார்.[9] இருப்பினும், திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் இவரின் கணவர் திடீரென இறந்ததால், இவர் தனது தாயின் சொந்த ஊரான பெட்டியாவுக்குத் திரும்பி, அதைத் தனது கர்ம பூமியாகத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[10] இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ரேணு தேவியின் தாயார் சங்கப் பரிவார் அமைப்புடன் தொடர்புடையவர். இது இவரை மிகவும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. ரேணு தேவி, விசுவ இந்து பரிசத்தின் பெண்கள் பிரிவான துர்கா வாகினியின் இணைந்து செயல்பட்டார்.[11]
1981ஆம் ஆண்டு சமூக செயல்பாடு மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் 1988ஆம் ஆண்டு பாஜக மகிளா மோர்ச்சா எனும் பாஜக மகளிர் பிரிவில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, சம்பாரண் பிராந்தியத்தில் பிரிவின் தலைவராக இவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் இவர் 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் இரண்டு பதவிக்காலங்களுக்குப் பிரிவின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1995ஆம் ஆண்டு நவுதன் சட்டமன்றத் தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான பெட்டியாவிலிருந்து (2000–2015; 2020–தற்போது வரை) பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 தேர்தலில் மகாகட்பந்தன் வேட்பாளரிடம் தோல்வியடைந்தபோதிலும், அவரிடமிருந்து 2020-இல் மீண்டும் அந்த இடத்தை மீட்டெடுத்தார்.
2005 மற்றும் 2009க்கு இடையில் பீகார் மாநில அரசில் விளையாட்டு, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 2014 மற்றும் 2020க்கு இடையில் பாஜகவின் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். மேலும் அமித் சாவால் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.[11] 2020ஆம் ஆண்டில் பீகாரின் துணை முதல்வராக அவர் நியமிக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[12][13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Nitish Kumar takes oath as Bihar CM for fourth consecutive term; Renu Devi first woman deputy CM". https://www.newindianexpress.com/nation/2020/nov/16/nitish-kumar-takes-oath-as-bihar-cm-for-fourth-consecutive-term-renu-devi-first-woman-deputy-cm-2224191.html.
- ↑ "Thakur, Chaurasia dropped from Shah's team". The Times of India. 14 August 2014. Archived from the original on 4 September 2014. Retrieved 21 October 2014.
- ↑ "BJP chief Amit Shah announces new team, Varun Gandhi dropped as general secretary". Hindustan Times. 16 August 2014. Archived from the original on 21 October 2014. Retrieved 21 October 2014.
- ↑ "Bhartiya Janata Party National Office Bearers". Bhartiya Janata Party. Archived from the original on 22 October 2014. Retrieved 21 October 2014.
- ↑ "New Team BJP: BSY is VP, Ram Madhav G. Sec, Varun Dropped". Outlook. 16 August 2014. Archived from the original on 23 August 2014. Retrieved 21 October 2014.
- ↑ "Sitting and previous MLAs from Bettiah Assembly Constituency". elections.in. Archived from the original on 7 November 2014. Retrieved 21 October 2014.
- ↑ "Nitish Kumar allocates Bihar portfolios: Here's the full list of cabinet ministers | freepressjournal". m.freepressjournal.in. Archived from the original on 13 September 2021. Retrieved 2020-11-18.
- ↑ "1st woman dy CM, RSS veteran to be the second-in-command in Bihar". https://m.hindustantimes.com/india-news/1st-woman-dy-cm-rss-veteran-to-be-the-second-in-command-in-bihar/story-VsbXVKK8ZAQubTcRDaEjxO.html.
- ↑ "Renu Devi From Extremely Backward Caste Becomes First Woman Deputy CM of Bihar". https://www.jansatta.com/rajya/renu-devi-chosen-bjp-legislature-deputy-leader-is-rss-connected-can-become-deputy-cm-with-tarkishore-prasad-who-has-been-chosen-leader-news-and-updates/1571735/.
- ↑ 11.0 11.1 "From Durga Vahini to Deputy Chief Minister of Bihar: The Journey of Renu Devi". News18. 2020-11-16. Retrieved 2020-11-18.
- ↑ "Renu Devi, Bihar's first woman Deputy CM is RSS women's wing leader; BJP's counterweight to Nitish's clout". Times Now. 18 November 2020. Retrieved 2020-11-18.
- ↑ "Who is Renu Devi: BJP's surprise pick as Bihar's deputy Chief Minister". India Tv. 16 November 2020. Retrieved 2020-11-16.
- ↑ "Meet Renu Devi, First Woman To Be Deputy CM of Bihar". Femina (in இந்தி). Retrieved 2020-11-17.
