ரேணு சுகேஜா
ரேணு சுகேஜா Renu Sukheja | |
|---|---|
| பிறப்பு | 25 திசம்பர் 1959 கொல்கத்தா, மேற்கு வங்காளம், India |
| உயரம் | 1.78 m (5 அடி 10 அங்) |
| வாழ்க்கைத் துணை | ராஜ் சுகேஜா |
| பிள்ளைகள் | ரோகித் சுகேஜா ரேகா சுகேஜா |
ரேணு சுகேஜா (Renu Sukheja) பிறப்பு 25 டிசம்பர் 1959) என்பவர் ஓர் இந்திய பெண் தொழிலதிபர், சமூகப் பிரமுகர் மற்றும் முன்னாள் மாடல் ஆவார். [1] இவர் ஆந்தம் கன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்தின் ஃபேஷன் (புதுப்பாணி) மற்றும் ஊடக ஆலோசனை பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.[2] ஃபேஷன்(புதுப்பாணி) துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தொழில் வாழ்க்கையைக் கொண்ட இவர், தென்னிந்தியாவின் ஃபேஷன், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் முன்னணி நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [3][4][1]
தேசிய மற்றும் சர்வதேச அழகுப் போட்டிகளில் பங்கு பெறும் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக,இந்தியா முழுவதும் மற்றும் ஐதராபாத்தில் எண்ணற்ற ஆளுமை மேம்பாட்டுப் பட்டறைகளை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.[5] அவர் தனது கணவர் ராஜ் சுகேஜா மற்றும் 'ஐ ஆம் ஷீ - உலக அழகி இந்தியா' புகழ் பெற்ற இந்திய மேலாண்மை ஆலோசகர் நீரஜ் காபா ஆகியோருடன் இணைந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதுபோன்ற பல்வேறு ஆளுமை மேம்பாட்டுப் பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளார். [6] இந்த அகில இந்திய ஆளுமை மேம்பாட்டு அலைக்கு ஐதராபாத் முதல் நகரமாக இருந்தது. இந்த நிகழ்வை ஆந்தம் கன்சல்டிங் தனியார் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஆந்தம் பொழுதுபோக்கு நிறுவனத்தை நிர்வகித்தது.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரேணு சுகேஜா 1959 டிசம்பர் 25 அன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். அவர் கொல்கத்தாவில் வளர்ந்து, தனது பள்ளிப்படிப்பையும் கல்வியையும் அங்கேயே முடித்தார். ராஜ் சுகேஜாவைத் திருமணம் செய்த பிறகு, அவர் ஐதராபாதுக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு ரோகித் சுகேஜா மற்றும் ரேகா சுகேஜா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரேகா சுகேஜா ஒரு வெற்றிகரமான இந்திய மாடல் மற்றும் ஐ ஆம் ஷீ – மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். [8][9] லக்மே ஃபேஷன் வீக்கில் இடம்பெற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த முதல் மாடல் ரேஹா ஆவார். [10]
தொழில்முறை வாழ்க்கை
[தொகு]ரேணு சுகேஜா, ஆந்தம் கன்சல்டிங் தனியார் நிறுவனத்தின் ஃபேஷன் (புதுப்பாணி) மற்றும் ஊடக ஆலோசனை பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். அவர் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பல்வேறு அழகுபடுத்தும் பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளார் மற்றும் கலாமந்திர் மிஸ் ஹைதராபாத் [6][11] பின்னணியில் பல அழகுப் போட்டிகளுக்கு ஆதரவளித்துள்ளார். [12] இந்திய திரைப்பட இயக்குனர் சேகர் கம்முலாவின் தெலுங்கு திரைப்படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்) இல் அழகுப் போட்டி காட்சியை நிர்வகிப்பதற்கும் அமைப்பதற்கும் அவர் ஒரு ஆலோசகராக இருந்துள்ளார். [2]
லிம்கா உலக சாதனை
[தொகு]
2010 ஆம் ஆண்டில், 50 வயதில், ரேணு சுகேஜா எலிப்டிகல் மராத்தானில் நெடும் ஓட்டம் உலக சாதனை படைக்க வெற்றிகரமாக முயற்சித்தார். ஐதராபாத்தில் உள்ள ஹீலியோஸ் உடற்பயிற்சி கூடத்தில் எலிப்டிகல் கிராஸ் டிரெய்னரில் நீள் வட்ட குறுக்கு பயிற்சி சதானம் (இருதய உடற்பயிற்சி சாதனம்) 15 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததற்காக ரேணு சுகேஜா இப்போது லிம்கா சாதனைப் புத்தகத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 You and I interview [தொடர்பிழந்த இணைப்பு]
- 1 2 Renu Sukheja Professional Profile
- ↑ "Miss-Hyderabad-Jury-02/163102". Archived from the original on 3 May 2018. Retrieved 16 December 2012.
- ↑ Neeraj Gaba Workshop
- ↑ "Grooming Workshop in Hyderabad". Archived from the original on 7 February 2011. Retrieved 16 December 2012.
- 1 2 "Miss-Hyderabad-Jury-01/163101". Archived from the original on 4 March 2016. Retrieved 16 December 2012.
- ↑ Grooming Expert Press Meet
- ↑ "I AM She 2010 Winners". Archived from the original on 22 November 2012. Retrieved 17 December 2012.
- ↑ I Am She 2010 Reha Sukheja [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Lakme Fashion Week Reha Sukheja". Archived from the original on 20 April 2012. Retrieved 17 December 2012.
- ↑ "Kalamandir Miss Hyderabad Grooming". Archived from the original on 3 May 2018. Retrieved 16 December 2012.
- ↑ "Kalamandir Miss Hyderabad Image Consultant". Archived from the original on 12 December 2012. Retrieved 16 December 2012.
- ↑ Limca Book of Records
