உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணு குசாவாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணு குசாவாகா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1999–2004
முன்னையவர்சாகுனி சொளத்ரி
பின்னவர்இரபீந்திர குமார் ராணா
தொகுதிககாரியா, பீகார்
வேளாண் துறை அமைச்சர்-பீகார் அரசு
பதவியில்
2009–2010
தொழில்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்-பீகார் அரசு
பதவியில்
2010–2014
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2010–2014
தொகுதிபீகாரிகஞ்ச்[1]
பதவியில்
2005–2010
தொகுதிகிசன்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஆகத்து 1962 (1962-08-29) (அகவை 63)
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்விஜய் குமார் சிங்
பிள்ளைகள்3 மகள்கள்
வாழிடம்ககாரியா
முன்னாள் மாணவர்பட்னா பல்கலைக்கழகம்
மூலம்: [1]

ரேணு குசாவாகா (Renu Kushawaha) என்பவர் ரேணு குமாரி சிங் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2][3] இவர் பீகாரின் முன்னாள் மாநில அமைச்சராகப் பதவிவகித்துள்ளார். இவர் ககாரியாவைச் சேர்ந்தவர்.[4] சமதா கட்சி[5] ஜனதா தளம் (ஐக்கிய) முதல் பாரதிய ஜனதா கட்சி வரை, கடந்த காலத்தில் பல அரசியல் கட்சிகளில் இவர் பயணித்துள்ளார்.[6][7][8] 2015ஆம் ஆண்டு, ரேணு சமசுதிபூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, ஆர்ஜேடி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

குசாவாகா 1962ஆம் ஆண்டு சமசுதிபூரில் பிறந்தார்.[9][10] இவரின் கணவர் விஜய் குமார் சிங், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அரசியல்வாதியும் ஆவார்.

குசாவாகா 2010-ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.[9] மதேபுரா மாவட்டத்தில் உள்ள பிகாரிகஞ்ச் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] பின்னர், நிதிசு குமார் முதலமைச்சராக இருந்த பீகார் அரசாங்கத்தில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் தொழில்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை வகித்தார். நிதிசு குமார் அமைச்சரவையிலிருந்த ஒரே பெண் அமைச்சராவார்.[10][12] 2014-ஆம் ஆண்டில், இவரின் மகன் விபின் குமார் ஐம்பது லட்சம் பணத்திற்காகக் கடத்தப்பட்டு, கடத்தலுக்குப் பிறகு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டார்.[13]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

குசாவாகா தனது அரசியல் வாழ்க்கையில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இது மட்டுமல்லாமல், நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கத்தில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக ரேனு குசாவாகா, ககாரியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இராச்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் ஆர். கே. இராணாவின் மனைவி நயனா ராணாவை 31,822 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2004 தேர்தலில் ரேணு ஆர்ஜேடியின் ஆர். கே. இராணாவிடம் தோற்றாலும். முன்னதாக பிப்ரவரி 2005-இல், ரேணு, மதேபுராவில் உள்ள உத்கிஷுங்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்டு, ஆர்ஜேடியின் வலிமையானவரும் அப்போதைய மாநில அமைச்சருமான இரவீந்திர சரண் யாதவை தோற்கடித்தார். மீண்டும், ரேணு குசாவாகா நவம்பர் 2005 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2009-ஆம் ஆண்டு, பீகார் அரசில் வேளாண் அமைச்சரானார். இதன் பிறகு, 2010-ஆம் ஆண்டு, புதிய சட்டமன்றத்தின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இவர் பிகாரிகஞ்சிலிருந்து போட்டியிட்டார். இந்த முறை தனது செல்வத்தின் துணையுடன், ரேணு, மூத்த வீரரான பப்பு யாதவின் மனைவி ரஞ்சீத் ரஞ்சனை தோற்கடித்தார். பின்னர் இவர் தொழில் மற்றும் பேரிடர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரின் கணவர் விஜய் குமார் சிங் 2014-இல் பாஜகவில் இணைந்த பிறகு, இவர் ஜேடியு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

2014 மக்களவைத் தேர்தலில், விஜய் குமார் சிங் மாதேபுரா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2019-ஆம் ஆண்டில், ககாரியாவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார்.[14][15] முன்னதாக, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரும் மற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய ஜனதா கட்சியினால் இடைநீக்கம் செய்யப்பட்டதால், பாஜகவில் சேர ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[16] பின்னர் இவர் லோக் ஜனசக்தி கட்சியில் சேர்ந்து ஏப்ரல் 2024-இல் ராஜினாமா செய்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Husband joins BJP, minister sends resignation letter to Nitish Kumar". Live mint. Archived from the original on 4 December 2020. Retrieved 2020-12-04.
  2. 2.0 2.1 "LJPR को बड़ा झटका, रेणु कुशवाहा-रवींद्र सिंह सहित कई नेताओं ने छोड़ा चिराग का साथ, पैसा लेकर टिकट बेचने का लगाया आरोप - Renu Kushwaha And Ravindra Singh". etvbharat. Retrieved 3 April 2024.
  3. "All eyes on 4 seats in Khagaria district". N P Thakur. The Times of India. 30 October 2020. Archived from the original on 31 October 2020. Retrieved 1 November 2020.
  4. "Bihar Elections: BJP leaders hitting out at LJP due to pressure from Nitish Kumar, says Chirag Paswan". Financial Express. Archived from the original on 5 November 2020. Retrieved 2020-12-04.
  5. "Samata Party to move Delhi HC against Thackeray faction's 'flaming torch'". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-10-14. Retrieved 2022-11-26.
  6. "पांच सालों में 169 फीसदी बढ़ी LJP उम्मीदवार रेणु कुमारी की संपत्ति, गाड़ी और गहनों पर खर्च किए 24.5 लाख रुपये". Jansatta. Archived from the original on 4 December 2020. Retrieved 2020-12-04. translation : Renu Kumari has also been an MLA from JDU. In 1999, she also reached Parliament after winning the Lok Sabha elections from Khagaria on a Samata Party ticket
  7. "Renu Kumari Singh Lok Sabha Profile". Lok Sabha. Archived from the original on 4 December 2020. Retrieved 1 June 2016.
  8. "Partywise Comparison since 1977 Khagaria Parliamentary Constituency". Election Commission of India. Archived from the original on 10 May 2017. Retrieved 1 June 2016.
  9. 9.0 9.1 "Nomination paper affidavit - Bihariganj" (PDF). 28 September 2010. Archived from the original (PDF) on 8 August 2022. Retrieved 6 February 2022.
  10. 10.0 10.1 "Husband joins BJP, minister Renu Kushwaha sends resignation letter to Nitish Kumar". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/husband-joins-bjp-minister-renu-kushwaha-sends-resignation-letter-to-nitish-kumar/articleshow/31799612.cms. 
  11. "Bihar minister Renu Kushwaha resigns, likely to join BJP". http://www.firstpost.com/politics/bihar-minister-renu-kushwaha-resigns-may-join-either-ljp-or-bjp-1428597.html. 
  12. "Bihar Leader's Abducted Son Killed". The New Indian Express. 2014-04-19. Archived from the original on 4 December 2020. Retrieved 2015-09-26.
  13. "Kushwaha's son killed after Abduction". https://news.biharprabha.com/2014/04/ex-bihar-minister-renu-kushwahas-son-killed-after-abduction/. 
  14. "Lok Sabha elections 2019: Renu Kushwaha's resignation heats up politics". Livehindustan. Archived from the original on 4 December 2020. Retrieved 2020-12-04.
  15. "Member of Lok Sabha". Lok Sabha. Archived from the original on 4 December 2020. Retrieved 2020-12-04.
  16. "Suspended JDU MLA approaches the court" இம் மூலத்தில் இருந்து 20 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220320074926/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/suspended-jdu-mla-renu-kushwaha-approaches-patna-high-court/articleshow/36664685.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_குசாவாகா&oldid=4466132" இலிருந்து மீள்விக்கப்பட்டது