ரேணுகா ரவீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேணுகா ரவீந்திரன்
Renuka Ravindran
Renuka Ravindran.jpg
பிறப்பு மே 11, 1943 (1943-05-11) (அகவை 75)
வாழிடம்
தேசியம் இந்தியர்
பணியிடங்கள் இந்திய அறிவியல் கழகம்

ரேணுகா ரவீந்திரன் (Renuka Ravindran, இராஜகோபாலன்), இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பீடாதிபதியாகப் பணியாற்றியவர்.[1]

கல்வி மற்றும் பணி[தொகு]

ரேணுகா இராஜகோபாலன் சென்னை வேப்பேரி பிரசண்டேசன் கான்வென்ட்டின் மாணவியாக இருந்தார். பின்னர் சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார்.[2] இவர் இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி ஆச்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4][,4]. 1967 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்து கணிதவியல் பிரிவில் பேராசிரியராகவும், பின்னர் இந்திய அறிவியல் கழகத்தின் பீடாதிபதியாகவும் பணிபுரிந்தார். செருமனியில் கெய்செர்சிலாப்டன் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்..[5] அவர் நேரியல்சாரா அலைகள் மற்றும் நியூட்டன் விதிக்கு உட்படாத திரவங்கள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "PROFILE OF PROF. RENUKA RAVINDRAN". .ias.ac.in. பார்த்த நாள் 26-04-2015.
  2. "DISTINGUISHED ALUMNAE". Women's Christian College. பார்த்த நாள் 26-04-2015.
  3. "Renuka Ravindran Education". math.iisc.ernet.in. பார்த்த நாள் 26-04-2015.
  4. "Renuka Ravindran". RWTH Aachen University. பார்த்த நாள் 26-04-2015.
  5. "Passionate about taking science to young minds". The Telegraph (21 May 2004). பார்த்த நாள் 26 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_ரவீந்திரன்&oldid=2554860" இருந்து மீள்விக்கப்பட்டது