உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணுகா சிங் தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணுகா சிங் தாக்கூர்

ரேணுகா சிங் தாக்கூர் (Renuka Singh) இந்திய தேசிய அணிக்காக விளையாடும் ஓர் இந்திய துடுப்பாட்ட வீராங்கனை ஆவார்.[1] உள்நாட்டுப் போட்டிகளில் இமாச்சலப் பிரதேச அணிக்காக விளையாடுகிறார்.[2] ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார்.[3] 1996ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

தொழில்

[தொகு]

2019–20 பருவத்தில் மூத்த மகளிர் ஒருநாள் போட்டியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி சிங் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார்.[4] 2021ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய மகளிர் துடுப்பாட்ட அணியில் சிங் தனது முதல் அழைப்பைப் பெற்றார்.[5][6] 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.[7]

2022ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நியூசிலாந்தில் நாட்டில் நடைபெற்ற 2022 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[8] 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக தனது மகளிர் ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[9]

2022ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பாட்டப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[10] 11 விக்கெட்டுகளுடன் போட்டியில் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தார், அதே போல் தனது அணியுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.[11][12] 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று 2023 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி20 போட்டிய ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.[13]

2023ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்துநாள் போட்டியில் அறிமுகமானார். 2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[14] 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[15]

2024ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் ஐந்து விக்கட்டு பந்துவீச்சை நிகழ்த்தினார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renuka Singh". ESPNcricinfo. Retrieved 16 September 2021.
  2. "Meet Renuka Singh; Fast Bowler From Himanchal Picked For Indian Women Cricket Team's Australia Tour". She the People. Retrieved 16 September 2021.
  3. "Her father's dream: Himachal pacer gets maiden call-up for women's T-20 cricket team". New Indian Express. 25 August 2021. Retrieved 16 September 2021.
  4. "Who are the Uncapped Indian Players on the Australian Tour for ODI, T20I and D/N Test?". Female Cricket. 13 September 2021. Retrieved 16 September 2021.
  5. "India Women's squad for one-off Test, ODI and T20I series against Australia announced". Board of Control for Cricket in India. Retrieved 24 August 2021.
  6. "India Women call up Meghna Singh, Yastika Bhatia, Renuka Singh for Australia tour". ESPNcricinfo. Retrieved 24 August 2021.
  7. "1st T20I (N), Carrara, Oct 7 2021, India Women tour of Australia". ESPNcricinfo. Retrieved 7 October 2021.
  8. "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad". ESPNcricinfo. Retrieved 6 January 2022.
  9. "3rd ODI, Queenstown, Feb 18 2022, India Women tour of New Zealand". ESPNcricinfo. Retrieved 18 February 2022.
  10. "Team India (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced". Board of Control for Cricket in India. Retrieved 11 July 2022.
  11. "Records/Commonwealth Games Women's Cricket Competition, 2022/Most wickets". ESPNcricinfo. Retrieved 8 August 2022.
  12. "Mooney, Gardner and Schutt lead Australia to gold in pulsating final". ESPNcricinfo. Retrieved 7 August 2022.
  13. "Nat Sciver-Brunt leads England past India despite Renuka Singh five-for". ESPNcricinfo. Retrieved 15 January 2025.
  14. "INDIA HANDS DEBUT AGAINST 3 PLAYERS IN TEST MATCH AGAINST ENGLAND". Pro IQRA. Archived from the original on 14 December 2023. Retrieved 14 December 2023.
  15. "India's Squad for IDFC First Bank ODI Series against New Zealand announced". BCCI. Retrieved 9 November 2024.
  16. "Renuka Singh Thakur produces maiden fifer to rattle Windies in India's 211-run opening ODI win". Female Cricket. Retrieved 22 December 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சிங்_தாக்கூர்&oldid=4394894" இலிருந்து மீள்விக்கப்பட்டது