ரேடார் எச்சரிக்கை கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரேடார் எச்சரிக்கை கருவி (Radar Warning Receiver) என்பது ரேடாரின் மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளைப் பெற்று ரேடாரின் இருப்பிடத்தை அறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இந்தக் கருவி பொதுவாகப் பாதுகாப்புத் படைத்துறையில் பயன்படுத்தப் படுகிறது. போர் விமானங்களிலும், போர் கப்பல்களிலும், தரைவழி ஊர்திகளிலும் அதன் பதுகர்ப்பிற்காக இக்கருவி பயன்படுத்தப் படுகிறது. இந்தக் கருவி எதிரிகளின் ரேடார் சமிக்ஞைகலை கொண்டு அதன் இருப்பிடத்தை மட்டுமல்லாது, அது எந்த வகை ரேடார் என்றும், அதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த எச்சரிக்கையைக் கொண்டு, எவ்வாறு அந்த ரேடாரிடம் இருந்து தப்பித்துச் செல்லலாம் என்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உதவுகிறது. இக்கருவி மின்னணு போர்முறையின் ஓர் அங்கமாகும்.[1]

மேற்கோள்[தொகு]

  1. Online. http://www.ausairpower.net/TE-RWR-ECM.html (பார்த்த நாள் 14/12/2017).