ரேடப்பர்டைசேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரேட்அப்பர்டைசேசன் (Radappertization) என்பது கதிர்வீச்சால் உணவுப்பதனம் செய்து டப்பாவில் வைத்துக் காக்கும் ஒரு முறையாகும். 1810 ஆம் ஆண்டில் நிக்கலசு அப்பர்ட் என்னும் பிரெஞ்சு அறிவியலாளரும் பொறியியலாளருமான நிக்கலசு அப்பர்ட் என்பவரின் நினைவாக இம்முறைக்கு ரேட்அப்பர்டைசேசன் எனப் பெயரிடப்பட்டது. நிக்கலசு அப்பர்ட் முதலாம் நெப்போலியனின் படைவீரருக்கு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.

சில உணவுப்பொருட்கள் சில பருவங்களில் மட்டுமே கிடைக்கின்றன. வேறுசில உணவாகும் பொருட்கள் சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இவைகளை எல்லாப் பருவங்களிலும் எல்லா இடங்களிலும் பயன்படுமாறு செய்வதே இம்முறையின் சிறப்பு. விதைகள் முளைவிடுவதைத் தாமதப்படுத்துதல் போன்ற விளைவுகளைக் குறைக்கவும் கதிர்வீச்சு உதவுகிறது.

இம்முறையில் நுண்ணுயிரிகளின் செயற்பாடுகளை முடிந்த வரை மிகச் சிறிதாகக் குறைக்க அயனியாக்கும் கதிரின் ஒரு குறிப்பிட்ட அளவு பிரயோகிக்கப்படுகிறது. இவ்வளவு பொதுவாக 25-45 கிலோகிரேகள் ஆகும்.[1]

use of ionising radiation in food processing application -.ISRP Kalpakkam 1989.

மேற்கோள்கள்[தொகு]

  1. J.F. Diehl, Safety of Irradiated Foods, Marcel Dekker, 1995, p. 99
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடப்பர்டைசேசன்&oldid=2747653" இருந்து மீள்விக்கப்பட்டது