ரேச்சல் ஹாரியட் பஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேச்சல் ஹாரியட் பஸ்க் ( Rachel Harriette Busk ) (1831-1907) ஒரு பிரித்தானிய பயணியும், நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.[1]

இவர் 1831 இல் இலண்டனில் ஹான்ஸ் பஸ்க் மற்றும் அவரது மனைவி மரியாவின் ஐந்து மகள்களில் இளையவரராகப் பிறந்தார். இவர் இத்தாலி, எசுப்பானியா, மங்கோலியா மற்றும் பிற இடங்களில் இருந்து கதைகளை சேகரித்தார். இவரது சேகரிப்பில் நாட்டுப்புறக் கதைகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், புனிதர்களின் புனைவுகள் மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இத்தாலிய நாட்டுப்புறக் கதைகள் மீதான இவரது பணி கியூசெப் பிட்ரே என்பவரின் படைப்புகளால் வலுவாக பாதிக்கப்பட்டது.[2]

இவர் 1858 இல் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறி 1862 க்குப் பிறகு உரோமில் வாழ்ந்தார் .[3]

இறப்பு[தொகு]

இவர் மார்ச் 1, 1907 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் இறந்தார். மேலும் டன்பிரிட்ஜ் வெல்ஸுக்கு அருகில் உள்ள பிரான்ட்டில் உள்ள குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

பணிகள்[தொகு]

  • Patranas or Spanish Stories (1870)
  • Household Stories from the Land of Hofer, or Popular Myths of Tirol (1871)
  • Sagas from the Far East: Kalmouk and Mongol Tales (1873).
  • The Folk-lore of Rome (1874)
  • The Valleys of Tirol (1874)
  • The Folk-Songs of Italy (1887)

சான்றுகள்[தொகு]

  1. W. Gordon Gorman, தொகுப்பாசிரியர் (1910). Converts to Rome: a biographical list of the more notable converts to the Catholic Church in the United Kingdom during the last sixty years. London: Sands & Co.. பக். 43. https://archive.org/details/a583403600gorduoft. பார்த்த நாள்: 2011-03-02. 
  2. "Hans Busk, Radnorshire squire". Radnorshire Society Transactions (Cylchgronau Cymru (Welsh Journals online)) 8: 47. 1938. http://welshjournals.llgc.org.uk/browse/viewpage/llgc-id:1191402/llgc-id:1191946/llgc-id:1191995/get650. பார்த்த நாள்: 2011-03-01. 
  3. Lee, Linda J. (2008). "Busk, Rachel Harriette". The Greenwood encyclopedia of folktales and fairy tales 1 (A–F). Ed. Donald Haase. Westport, Connecticut: Greenwood Press. 149–50. ISBN 978-0-313-33442-9. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேச்சல்_ஹாரியட்_பஸ்க்&oldid=3667461" இலிருந்து மீள்விக்கப்பட்டது