ரேசுமா குரேசி
Reshma Qureshi | |
---|---|
பிறப்பு | ரேசுமா பனோ குரேசி |
தேசியம் | Indian |
பணி | வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2016 - present |
வடிவழகுவியல் தகவல் | |
முடியின் நிறம் | கருப்பு |
ரேசுமா குரேசி (Reshma Qureshi) ஓர் இந்திய வடிவழகி, அமில எரிப்பிற்கு எதிரான சமூக செயற்பாட்டாளர் ஆவார். இந்தியாவில்,தில்லியினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேக் லவ் நாட் ஸ்கேர்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தில் முக்கிய பங்காற்றுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தாக்குதல்
[தொகு]குரேசி இந்தியாவின் கிழக்கு மும்பையைச் சேர்ந்த வாடகை மகிழுந்து ஓட்டுநரின் இளைய மகளாகப் பிறந்தார்.[1] அவர்கள் இரண்டு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தனர், அந்தக் குடியிருப்பில் தான் குடும்பத்தின் பத்து உறுப்பினர்களும் இருந்தனர்.[2] இவர் பள்ளியில் வணிகவியல் பிரிவினைப் பயின்றார்.[3]
19 மே 2014 அன்று, தனது பதினேழாம் வயதில், குரேசி கந்தக அமிலம் கொண்டு தாக்கப்பட்டார்.தேர்வு எழுதுவதற்காக அலகாபாத்திற்கு பயணம் செய்து கொண்டு இருந்த போது தனது மைத்துனன் மற்றும் அவருடன் வந்த இரண்டு நபர்களால் அவர் தாக்குதலுக்கு ஆளானர். இந்த தாக்குதல் உண்மையில் அவளுடைய சகோதரி குல்சனை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது ஆகும். ஆனால் அவருக்குப் பதிலாக குரேசி தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலுக்குப் பிறகு மற்ற இரண்டு தாக்குதல்காரர்களும் கைது செய்யப்படவில்லை என்றாலும், அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டார். [4]
தாக்குதலுக்குப் பிறகு, அவரது முகம் மற்றும் கைகளில் பல வடுக்கள் இருந்தது, ஒரு கண் பார்வையினை அவர் முழுவதுமாக இழந்து இருந்தார் இதனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்.[சான்று தேவை]
குணமடைந்த பிறகு, குரேசி அமிலத் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவில் அமில விற்பனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டார். "தாக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதை" நோக்கமாகக் கொண்ட மேக் லவ் நாட் ஸ்கார்ஸ் பிரச்சாரத்தின் முகமாக ஆனார். [5] அமில விற்பனைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கான ஒரு வழியாக அவர் வலைத்தளங்களில் அழகிற்கான பயிற்சிகளை உருவாக்கத் தொடங்கினார். [6] அகலுவகக் குடிமகாரர்கள் இந்த நிகழ்படங்களை "அபத்தமான அதிகாரம்" என்று அழைத்தனர். [7]
செப்டம்பர் 2017 இல் இந்தியா நியூ இங்கிலாந்து செய்திக்கு அளித்த பேட்டியில், குரேசி தன்னைத் தாக்கியவரிடம் பேசினாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. ஆதற்கு அவர் ,"நான் தாக்குதல் நடத்தியவர் அல்லது அவரது குடும்பத்தினரிடம் பேசவில்லை, ஆனால் நான் அவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சந்தித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் நான் அவனது தொண்டையைப் பிடுங்க விரும்பினேன், அவர் என்னைப் பார்த்ததும், அவர் தனது வழக்கறிஞரிடமும் மக்களிடமும் கூறினார், "அவள் தற்போது முக்கிய நபராகவும் , ஒரு வடிவழகியாகவும் இருக்கிறார், சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கிறாள், அதனால் என்னை விடுவிக்கவும் அல்லது விடுவிக்க எனக்கு உதவுங்கள் என்று அந்த நபர் கூறியதாகக் கூறுகிறார்".
வடிவமைப்புத் துறை
[தொகு]குரேஷி இந்தியாவில் மேக் லவ் நாட் ஸ்கார்ஸ் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறார். [8] செப்டம்பர் 2015 நிலவரப்படி, அவரது நிகழ்படங்கள் 900,000 பார்வைகளைப் பெற்றுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது [9]
2016 நியூயார்க் பேஷன் வீக்கிற்காக, இவர் இந்திய வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிவமைத்த சிறப்பான ஓராடையினை அணிந்தார். [10] குரேசியின் ஒப்பனையினை சிக்கா சான் என்பவரும் அவரது தலைமுடி சரி செய்யும் பணியினை ஆப்ரி லூட்ஸ் ஆகியோரும் மேற்கொண்டனர். [11] "இந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்பது எனக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் என்னைப் போன்ற பல பெண்கள் அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள், இது அவர்களுக்கு தைரியத்தை அளிக்கும். மேலும், ஒரு புத்தகத்தை அதன் அட்டையின் மூலம் நீங்கள் மதிப்பிடக் கூடாது அதேபோல ஒருவரின் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடும் நபர்களுக்கு எனது பங்களிப்பு ஒரு புதிய கண்ணோட்டத்தினை அளிக்கும் - நீங்கள் அனைவரையும் ஒரே கண்களால் பார்க்க வேண்டும்." என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி கூறினார். [12]
சான்றுகள்
[தொகு]- ↑ Ashraf, Shara (9 Sep 2016). "11 things you didn't know about acid attack survivor Reshma Qureshi". Hindustan Times. http://www.hindustantimes.com/fashion-and-trends/11-things-you-didn-t-know-about-acid-attack-survivor-reshma-qureshi/story-JaSMIZ4bziVoDqgc9yNNsJ.html. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Gill, Harsimran (10 Mar 2016). "Indian acid attack victims share their stories". Aljazeera. http://www.aljazeera.com/indepth/features/2016/03/indian-acid-attack-victims-share-stories-160309074926141.html. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ "No respite for India's acid victims despite promised compensation". The National. 13 Oct 2014. http://www.thenational.ae/world/south-asia/no-respite-for-indias-acid-victims-despite-promised-compensation. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Rogers, Katie (9 Sep 2015). "With Red Lipstick, Indian Acid Attack Victim Makes a Bold Statement". New York Times. https://www.nytimes.com/2015/09/10/world/asia/with-red-lipstick-indian-acid-attack-victim-makes-a-bold-statement.html?_r=0. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Buncombe, Andrew (8 Sep 2016). "Indian acid attack survivor walks the runway at New York Fashion Week". The Independent. https://www.independent.co.uk/news/world/americas/indian-acid-attack-survivor-reshma-qureshi-walks-the-runway-at-new-york-fashion-week-a7232856.html. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ "Reshma Qureshi: Model, campaigner, acid attack survivor". BBC. 6 Sep 2016. https://www.bbc.com/news/world-asia-india-37274925. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Mei, Gina (9 Sep 2016). "Acid Attack Survivor Reshma Qureshi Slays the New York Fashion Week Runway". Cosmopolitan. http://www.cosmopolitan.com/style-beauty/fashion/news/a63886/acid-attack-survivor-reshma-qureshi-new-york-fashion-week/. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Joshi, Sonam (9 Sep 2016). "Acid Attack Survivor Reshma Qureshi Steals The Show At New York Fashion Week". Huffington Post. http://www.huffingtonpost.in/2016/09/09/indian-acid-attack-survivor-reshma-qureshi-steals-the-show-at-th/. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Rogers, Katie (9 Sep 2015). "With Red Lipstick, Indian Acid Attack Victim Makes a Bold Statement". New York Times. https://www.nytimes.com/2015/09/10/world/asia/with-red-lipstick-indian-acid-attack-victim-makes-a-bold-statement.html?_r=0. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Lui, Kevin (9 Sep 2016). "Acid-Attack Survivor Reshma Qureshi Hits the Catwalk at New York Fashion Week". TIME. http://time.com/4485099/reshma-qureshi-new-york-fashion-week-acid-attack/. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Buncombe, Andrew (8 Sep 2016). "Indian acid attack survivor walks the runway at New York Fashion Week". The Independent. https://www.independent.co.uk/news/world/americas/indian-acid-attack-survivor-reshma-qureshi-walks-the-runway-at-new-york-fashion-week-a7232856.html. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ Mei, Gina (9 Sep 2016). "Acid Attack Survivor Reshma Qureshi Slays the New York Fashion Week Runway". Cosmopolitan. http://www.cosmopolitan.com/style-beauty/fashion/news/a63886/acid-attack-survivor-reshma-qureshi-new-york-fashion-week/. பார்த்த நாள்: 7 October 2016.