ரேசுபேல்பாரா
ரேசுபேல்பாரா
ரேசி | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் ரேசுபேல்பாரா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 25°53′40″N 90°35′59″E / 25.8943300°N 90.5997800°E | |
| நாடு | |
| மாநிலம் | மேகாலயா |
| மாவட்டம் | வடக்கு காரோ மலை மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | ரேசுபேல்பாரா நகராட்சி மன்றம் |
| மக்கள்தொகை (2011[1]) | |
| • மொத்தம் | 1,04,514 |
| மொழிகள் | |
| • வட்டார மொழி | காரோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 794108 |
| தொலைபேசி குறியீடு | 913659 |
| வாகனப் பதிவு | ML - 13 |
| இணையதளம் | https://northgarohills.gov.in/ |

ரேசுபேல்பாரா (Resubelpara), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் மேற்கில் உள்ள வடக்கு காரோ மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.. தாம்ரிங் ஆறு பாயும் இவ்வூரில் காரோ மொழி பேசும் காரோ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவ்வூர் மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு கிழக்கே 255.5 கிலோமீட்டர் தொலைவிலும், அசாம் மாநிலத்தின் குவகாத்திக்கு தென்மேற்கில் 133.4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 3,491 குடியிருப்புகள் கொண்ட ரேசுபேல்பாரா நகரத்தின் மக்கள் தொகை 19,595 ஆகும். அதில் 9,725 ஆண்கள் மற்றும் 9,870 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.33% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1026 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.66 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 93.88 % ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 12.92% , இசுலாமியர் 2.59%, கிறித்தவர்கள் 84.00%, மற்றும் பிற சமயத்தினர் 0.50 % வீதம் உள்ளனர். [2]