ரேகா வர்மா (உ. பி.)
ரேகா வர்மா (Rekha Verma)(பிறப்பு சூலை 1,1961) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஔரையா மாவட்டத்தில் உள்ள பிதூனா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். வர்மா சமாஜ்வாதி கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]வர்மா பிதூனாவினைச் சேர்ந்தவர். இவர் கான்பூரில் மறைந்த தனியம் மற்றும் மறைந்த இராம் தேவிக்கு மகளாகப் பிறந்தார்.[2] இவர் ஔரையாவில் உள்ள ஆதர்ஷ் கன்யா இடைநிலைக்ல் கல்லூரி பூர்வா சுஜானின் முதல்வராக பணியாற்றினார். இவர் மகேசு சந்திரா என்பவரை 11 மார்ச்,1978 அன்று திருமணம் செய்து கொண்டார்.[1] இவரது கணவர் மகேசு சந்திரா இறந்துவிட்டார்.[3]
அரசியல்
[தொகு]2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக பிதுனா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வர்மா வெற்றி பெற்றார்.[4][5] இவர் 92,757 வாக்குகளைப் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் ரியா சக்யாவை 3,265 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Retrieved 2024-06-18.
- ↑ "Rekha Verma, SP MLA from Bidhuna - Our Neta" (in ஆங்கிலம்). Retrieved 2024-06-18.
- ↑ "REKHA VERMA(SP):Constituency- BIDHUNA(AURAIYA) - Expense Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-06-18.
- ↑ "Winner Candidate List 2022 | Samajwadi Party". samajwadiparty.in. Retrieved 2024-06-18.
- ↑ 5.0 5.1 "Bidhuna Election Result 2022 LIVE Updates: Rekha Verma of SP Wins". News18 (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2024-06-18.
- ↑ "Rekha Verma from SP Won Bidhuna Assembly Election Result 2022: Candidates List and Winner in Bidhuna Constituency". indiatoday.in (in ஆங்கிலம்). Retrieved 2024-06-18.