ரேகா ரோதித்யா
ரேகா ரோதித்யா (Rekha Rodwittiya)(பிறப்பு: அக்டோபர் 31, 1958 [1]) பரோடா பள்ளியுடன் தொடர்புடைய ஒரு சமகால இந்திய கலைஞராவார். அடிமன வெளிப்பாட்டியம் மற்றும் மாய யதார்த்தவாதத்தின் பாணியால் சித்தரிக்கப்பட்ட இவரது உருவக கதை ஓவியங்களுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தனது கணவரும் கலைஞருமான சுரேந்திரன் நாயருடன் இணைந்து வடோதராவில் தி கலெக்டிவ் ஸ்டுடியோ என்ற கலை அரங்கத்தை நடத்தி வருகிறார்.
சுயசரிதை
[தொகு]ரேகா 1958 அக்டோபர் 31 அன்று கர்நாடகாவின் பெங்களூர் நகரில் ஒரு தென்னிந்தியப் பெற்றோருக்குப் பிறந்தார்.[1] இவர் வதோதரா நகரில் வளர்ந்தார். அங்கு இவரது குடும்பம் 1967 இல் குடிபெயர்ந்தது. [2][2] ரேகா இரண்டு சகோதரிகளில் இளையவராவார். இவரது தந்தை ஒரு இந்திய விமானப்படை விமானி என்பதால் இவரது தாயால் பெரும்பாலும் வளர்க்கப்பட்டார்.[3]
1976 ஆம் ஆண்டில் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை கழகத்தில் சேர்ந்தார். அந்த நேரத்தில், புபன் காகர், குலாம் முகமது சேக், ஜோதி பட் போன்ற பல சமகால கலைஞர்கள் எழுச்சியைக் கொண்டிருந்தனர்.[2]
திருமணம்
[தொகு]1977 ஆம் ஆண்டில், இவர் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவராக இருந்த தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு நண்பரை மணந்தார். இவர்களுக்கு மிதுன் என்ற குழந்தை பிறந்தது.[3][4] இவர் கருவுற்றிருந்தபோதே இத்திருமணம் முறிந்து, விவாகரத்துக்கு வழிவகுத்தது. மேலும், கல்லூரியில் படிக்கும் போது இவர் ஒரு தாயானார்.[3][4]
கல்வி
[தொகு]1981 ஆம் ஆண்டில், இவர் ஓவியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் ஓவியத்தில் முதுகலையை முடித்து ஜோதி பட் நடத்திய ஒரு தனியார் அரங்கத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.[2] இவர் தொடர்ச்சியான சிறிய கற்பனை உருவப்படத்துடன் சுயாதீனமாக ஓவியம் தீட்டத் தொடங்கினார். தனது திறமையால் விரைவில் அங்கீகரிக்கப்பட்டார்.[2][3] 1982 ஆம் ஆண்டில், பிரித்தானிய அமைப்பு இலண்டனில் உள்ள ஓவியக்கல்லூரியில் ஓவியத்தில் நுண்கலையை முடிக்க உதவித்தொகையை வழங்கியது. இவர் 1984 இல் பட்டம் பெற்றார். [2] பட் தவிர, ராயல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பிரிட்டிசு கலைஞர் பீட்டர் டி ஃபிரான்சியாவாலும், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் "இந்தியாவின் மிகச் சிறந்த சுருக்க கலைஞராக" கருதப்படும் இந்திய கலைஞரான நஸ்ரின் மொகமதி [2] ஆகியோரால் இவர் வழிகாட்டப்பட்டார்.[5] இந்த காலகட்டத்தில், இவரது பெற்றோர் இவரது மகனை கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். இது இவரது கல்வியைத் தொடர அனுமதித்தது.[3]
மறு திருமணம்
[தொகு]இந்தியாவுக்குத் திரும்பியதும், இவர், பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தலை மேற்கொண்டார். ஆனால் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட இவரது வெளிப்படையான பெண்ணியக் கருத்துக்களால் அப்பணி நிலைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர் கலைஞரான சுரேந்திரன் நாயர் என்பவரைச் சந்தித்தார்.[3] இவரும் நெருங்கிய நண்பராகி, 1985 இல் திருமணம் செய்து கொண்டனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Fernando, Benita (2018-11-09). "Rodwittiya's female gaze". மின்ட் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Ayaz, Sheikh (2018-12-05). "Rekha Rodwittiya: The Magical Realist". Open The Magazine (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Milford-Lutzker, Mary-Ann (2002). "Five Artists from India: Gogi Saroj Pal, Rekha Rodwittiya, Navjot, Anupam Sud, Rummana Hussain". Woman's Art Journal 23 (2): 21–27. doi:10.2307/1358704. பன்னாட்டுத் தர தொடர் எண்:0270-7993. https://www.jstor.org/stable/1358704.
- ↑ 4.0 4.1 4.2 Sarma, Ramya (2014-06-14). "Stories in paint" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/features/magazine/stories-in-paint/article6111409.ece.
- ↑ Jumabhoy, Zehra (2013-02-01). "Art | The line of control". மின்ட் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
{{cite web}}
: CS1 maint: url-status (link)