ரேகா ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா ராஜ்
Rekha Raj
தாய்மொழியில் பெயர்രേഖ രാജ്
பிறப்பு5 மே 1978 (1978-05-05) (அகவை 45)
கோட்டயம், கேரளம், இந்தியா
பணி
  • எழுத்தாளர்
  • தலித் செயற்பாட்டாளர்
  • உதவிப் பேராசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990–முதல்
வாழ்க்கைத்
துணை
எம். ஆர். ரேணு குமார்

ரேகா ராஜ் (Rekha Raj; மலையாளம்: രേഖ രാജ്; பிறப்பு: 5 மே 1978) என்பவர் தலித் மற்றும் பெண்ணிய சிந்தனையாளர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சாதி மற்றும் பாலினப் பிரச்சனைகள் குறித்து எழுதிய ஆரம்பக்கால தலித் பெண்ணியவாதிகளில் இவரும் ஒருவர்.[1]

இளமை[தொகு]

ரேகா, கேரளாவின் மத்திய மாவட்டமான கோட்டயத்தில் 5 மே 1978-ல் கே. பி. நளினாக்ஷி மற்றும் எஸ். ராஜப்பனுக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது கணவர் எம். ஆர். ரேணுகுமார் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். "பாலினம் மற்றும் தலித் அடையாளத்தின் அரசியல்: கேரளாவில் சமகால தலித் சொற்பொழிவுகளில் தலித் பெண்களின் பிரதிநிதித்துவம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் பள்ளியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கேரள உயர் நீதிமன்றம் இவரது நியமனத்தை ரத்து செய்தது.[2]

பணி[தொகு]

ராஜ் 2015-ல் தலித் பெண் இடைபடல்கள்[3] என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது 2017-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் 2013-ல் தலித் பெண்கள் பற்றிய சிறப்பிதழான சங்கதிதா இதழின் பதிப்பாசிரியராக இருந்தார்.[4] எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி , மாத்ருபூமி, சமகாலிக்க மலையாள வாரிகா , மத்யமம் வீக்லி மற்றும் இந்தியாவில் உள்ள தற்போதைய பத்திரிகைகள் உட்படக் கல்வி மற்றும் பிற இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.  இவரது ஆர்வம் பாலினம், மேம்பாடு, இனம், கலாச்சாரம், தலித் மற்றும் கீழ்நிலைப்பணியாளர் ஆய்வுகள் குறித்ததாகும்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • 2012: மோச்சித ஸ்த்ரீ பதன கேந்திரம், ஆலப்புழாவில் இருந்து ரஹ்னா விருது.[சான்று தேவை]
  • ராஜ் அமெரிக்க அரசாங்கத்தின் பன்னாட்டு பார்வையாளர்கள் தலைமைத்துவ திட்டத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "HeToo: Poda Vedi: Women give it back | Kochi News - Times of India". 4 August 2018. https://timesofindia.indiatimes.com/city/kochi/poda-vedi-women-give-it-back/articleshow/65267261.cms. 
  2. "HC annuls appointment of Dalit activist Rekha Raj in MG University". English.Mathrubhumi. Retrieved 2022-08-26.
  3. "'Dalit Sthree Idapedalukal' released".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Women's world". Times of India Blog. 12 August 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_ராஜ்&oldid=3702548" இலிருந்து மீள்விக்கப்பட்டது