ரெ. கார்த்திகேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெ. கார்த்திகேசு

தொழில் எழுத்தாளர்
நாட்டுரிமை மலேசியா
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
அந்திம காலம்

ரெ. கார்த்திகேசு (1940 - அக்டோபர் 10, 2016) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும். இணைப் பேராசிரியராகவும், பொதுமக்கள் தொடர்புத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1952-ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதை 'தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரி'ல் பிரசுரமாகியது. அதிலிருந்து தொடர்ச்சியாக 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், உரைவீச்சுகள், நாவல்கள், வானொலி நாடகங்கள், குறுநாடகங்களையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய தேசிய பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முற்போக்கு இலக்கிய ஏடுகளான 'தீபம்', 'கணையாழி', 'கல்கி' போன்றவற்றிலும். 'இந்தியா டுடே' இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இணையத்தின் வழியாகவும் இவரது ஆக்கங்கள் வெளி வந்தன.

இவர் மலேசிய எழுத்தாளரும், கவிஞரும், நடிகருமான காலஞ்சென்ற ரெ. சண்முகம் அவர்களின் இளைய சகோதரர் ஆவார்.

மலேசிய வானொலியில்[தொகு]

இவர் மலேசிய வானொலியில் ஒலிபரப்பாளராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

இவரால் வெளியிடப்பட்ட நூல்களில் சில கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நாவல்கள்[தொகு]

  • வானத்து வேலிகள் - 1980-இல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • தேடியிருக்கும் தருணங்கள் - 1993
  • அந்திம காலம் - 1998
  • காதலினால் அல்ல - 1999

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • புதிய தொடக்கங்கள் - 1974
  • மனசுக்குள் - 1995
  • இன்னொரு தடவை 2001

ஆய்வு நூல்[தொகு]

  • 'மலேசியத் தொலைக்காட்சியின் வரலாறு' (மலாய் மொழி) 1994

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி, பல பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெ._கார்த்திகேசு&oldid=2894521" இருந்து மீள்விக்கப்பட்டது