ரெல்லி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெல்லி ஆறு (Relli River) என்பது இந்திய மாநிலங்களான சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஓடும் சிறிய ஆறாகும். இது இமயமலையில் தோன்றுகிறது. காளிம்பொங்கிற்கு அருகில் பாயும் இந்த ஆறு[1] சுமார் 2,400 மீட்டர்கள் (8,000 அடி) ) உயரத்தில் அழகரா-லாவா வனத் தொடருக்கு இடையில் ஓடுகின்றது. இது திபின் தாரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆறு டீஸ்டா ஆறுடன் கலக்கின்றது.[2] ரெல்லி ஆறு 10 கிலோமீட்டர்கள் (6 mi) மத்திய காளிம்பொங்கிலிருந்து பயணிக்கின்றது. வழியில் தியோலோ மலையால் பிரிக்கப்படுகிறது.[1] இதன் முக்கிய துணை ஆறுகள், கானி ஆறு மற்றும் பாலா ஆறு. இந்த ஆறுகளுடன் இணைந்து 32 கி. மீ. ஓடி டீஸ்டா ஆற்றில் மத்திய காளிம்பொங்கின் தெற்கே இணைகிறது.[1]

சிக்கிமில் உள்ள மேல் எச்சாய் செர்பகானில் ஓடும் ரெல்லி ஆற்றின் வடக்கு சரிவுகளில் சுமார் 50 செர்ப்பா குடும்பங்கள் உள்ளன.[3] ரெல்லி கிராமம் காளிம்பொங் கீழ்ப்பகுதியில் ரெல்லி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி சாலை மற்றும் தொடருந்து மூலம் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]

சுற்றுலா[தொகு]

ரிஞ்சிங்பாங், கலிம்போங்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா இடமாகும். காளிம்பொங்கினை சார்ந்தவர்களுக்கு ரெல்லி பொழுதுபோக்கும் இடமாகும். இங்கு உள்ளூர் உணவு வகைகள், பொழுது போக்கும் இடங்கள், படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் வார இறுதி சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது. மேற்கு வங்க சுற்றுலாத் துறையால் நிர்வகிக்கப்படும் ஓர் சாலையோர விடுதியும் அமைந்துள்ளது.[1][5]

ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விடுமுறையில் (சனவரி 14) ரெல்லியில் கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. [5]

வரலாற்று தளங்கள்[தொகு]

கோம்பாசு அல்லது மடாலயங்கள், செலப் லா கணவாய் காட்சி முனை ஆகியவை இந்த ஆற்றின் அருகே அமைந்துள்ளன.[6]

மேற்கு வங்காளத்தில் உள்ள பூட்டான் இல்லம், ஆழமான பள்ளத்தாக்கிற்குக் கீழே ரெல்லி ஆற்றினை நோக்கி அமைந்துள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "About Relli River Information-Kalimpong". West Bengal. Hop Around India online. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
  2. A. B. Willoughby; John R. Walter; F. A. Fowlie (1973). "Rediscovering Cymbidium macrorhizon Lindl. in the Teesta Valley". The Orchid Digest (Orchid Digest Corporation) 37: 42. https://books.google.com/books?id=e69LAQAAIAAJ. பார்த்த நாள்: 2012-11-06. 
  3. Proceedings of the Indian Statistical Institute Golden Jubilee International Conference on Human Genetics and Adaptation: Human genetics. 1. Indian Statistical Institute. 1984. பக். 309. https://books.google.com/books?id=fOfaAAAAMAAJ. பார்த்த நாள்: 2012-11-06. 
  4. The Rough Guide to India. Penguin. 2011. பக். 790. https://books.google.com/books?id=A32I8DTLoFMC. பார்த்த நாள்: 2012-10-30. 
  5. 5.0 5.1 "Relli River". Kalimponglive online. 2011-05-15. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
  6. Bindloss, Joe (2009). Lonely Planet Northeast India. Regional Guide Series (2d ). Lonely Planet. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1741793192. https://books.google.com/books?id=D_bYWjJOe9cC. பார்த்த நாள்: 2012-10-30. 
  7. Hilker, Deb Shova Kansakar (2005). Syamukapu: The Lhasa Newars of Kalimpong and Kathmandu. Vajra Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99946-644-6-8. https://books.google.com/books?id=hbgVAQAAMAAJ. பார்த்த நாள்: 2011-08-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெல்லி_ஆறு&oldid=3390665" இலிருந்து மீள்விக்கப்பட்டது