ரெய்க்ஸ்வியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெய்க்ஸ்வியர் கொடி (1921–1935).

ரெய்க்ஸ்வியர் Reichswehr என்ற பெயரில் 1919 முதல் 1935 வரை இயங்கிய ஜெர்மனியின் தேசிய இராணுவம் அழைக்கப்பட்டது. அதன் பின் வியர்மாக்ட் எனப் பெயர்மாற்றப்பட்டது.

முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் பேரரசு (German Empire) முற்றிலுமாக சிதையுண்டது. பலர் தங்கள் இருப்பிடங்களை தாங்களே அமைத்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். பலர் தொண்டர்ப் படைப்பிரிவு (Free Corps) என்று ஒன்றை தொண்டு அமைப்பாக அமைத்து அதன் மூலம் புரட்சிகளில் ஈடுபட்டனர். புதியதாக அமைந்த வெய்மர் குடியரசுக்கு இராணுவ அமைப்புத் தேவைப்பட்டது. மார்ச் 6, 1919 இல் சட்டவரைவின் மூலம் ரெய்க்ஸ்வியர் என்ற இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டுப் பிரிவாக ரெய்க்சீர் மற்றும் ரெய்க்மெரைன் பிரிக்கப்பட்டது. ரெய்க்சீரில் 4 இலட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

செப்டம்பர் 30, 1919 இல் இவ்வமைப்பு இடைக்கால இராணுவப்பிரிவாக செயல்பட்டது. ஜனவரி 1, 1921 இல் இந்த இராணுவ அமைப்பு கலைக்கப்பட்டு வெர்செய்ல் உடன்படிக்கை]யின்படி (1 இலட்சம் வீரர்களே இருக்க உடன்படிக்கை அனுமதித்தது) ரெய்க்ஸ்வியர் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.

இது இரண்டு படைப்பிரிவை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது.

  1. 7 காலாட்படைப் பிரிவை (Infantry Division) கொண்டது.
  2. குதிரைப்படைப் (Cavalry) பிரிவு.

மற்றப் பிரிவுகளான ரெய்க்மெரைன், கடற் படை, படைக்கலன்கள் போன்ற பிரிவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. 1933 முதல் 1934 வரையில் இட்லர் ஜெர்மனியின் வேந்தரான காலத்தில் இப்படைப்பிரிவின் அதிகாரம் நாசிகளின் கைகளுக்குக் கிடைக்கும் வகையில் நீள் கத்திகளுடைய இரவு என்ற இரகசிய நிகழ்வு ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ) தலைவர் எர்னஸ்ட் ரோம் எனபவருக்கு எதிராக நடத்தப்பட்டு அதன் முடிவில் எர்னஸ்ட் ரோம் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1935 ல் இது விய்ர்மாக்ட் எனப் பெயர் மாற்றம் பெற்று மக்களால் அறியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்ஸ்வியர்&oldid=2004189" இலிருந்து மீள்விக்கப்பட்டது