ரெனானா ஜாப்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெனானா ஜாப்வாலா ( Renana Jhabvala ) என்பவர் ஆமதாபத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும், ஏழை எளிய பெண்களைத் தொழிற்சங்கம் மற்றும் இயக்க ரீதியாக வழிநடத்துபவரும் ஆவார். சேவா என்னும் சுயவேலை பெண்கள் சங்கத்தில் பல ஆண்டுகளாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெண்மணி ஆவார். திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேந்தராக 2012 ஏப்பிரலில் ஆனார். 1990 இல் இவருக்குப் பத்மசிறீ விருது இந்திய அரசு வழங்கியது.[1] இவருடைய கணவர் பிரபல பத்திரிகையாளரான அரீசு காரே ஆவார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

ரெனானா ஜாப்வாலா தில்லியில் பிறந்தார். இவருடைய தந்தை சைரஸ் ஜாப்வாலா ; தாயார் ஆங்கில எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான ரூத் பிராவர் ஜாப்வாலா ஆவார். ரெனானாவின் தாத்தா, பாட்டி இருவரும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள். இந்திய தொழிற்சங்கத்தில் தாத்தா செயல்பட்டார்.பாட்டி மீராபென் ஜாப்வாலா பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுடன் ஈடுபட்டு இயங்கினார்.

ரெனானா பள்ளிப் படிப்பைத் தில்லியில் முடித்தார். 1972 இல் கல்லுரிக் கல்வியை தில்லி பல்கலைக்கழகத்தில் இந்துக் கல்லூரியில் முடித்தார். பின்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் அதன் பின்னர் யேல் பல்கலைக் கழகத்தில் பொருளியல் கல்வியும் பயின்றார்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 மே 2013.
  2. Jhabvala, Renana (27 February 2012). "Celebrating Women's Leadership". India International Centre. Archived from the original on 14 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனானா_ஜாப்வாலா&oldid=3588054" இலிருந்து மீள்விக்கப்பட்டது