உள்ளடக்கத்துக்குச் செல்

ரெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்ரோ
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்புகார்த்திகேயன் சந்தானம்
கல்யாண் சுப்பிரமணியம்
ஜோதிகா
சூர்யா
கதைகார்த்திக் சுப்புராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுசிரேயாசு கிருசுணன்
படத்தொகுப்புசபீக்கு முகமது அலி
கலையகம்இசுடோன் பெஞ்சு கிரியேசன்சு
2டி என்டேர்டைன்மென்ட்
விநியோகம்சக்தி பிலிம் பேக்டரி
வெளியீடு1 மே 2025 (2025-05-01)
ஓட்டம்168 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு65 கோடி[2][3]
மொத்த வருவாய்235 கோடி[4]

ரெட்ரோ (Retro) என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது சூர்யா நடிக்கும் 44-ஆவது திரைப்படமாகும். இப்படம் 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியானது.[5] ரெட்ரோ நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இது 235 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.[6]

கதைச் சுருக்கம்

[தொகு]

1960களில் தூத்துக்குடியில், கொள்ளைக்காரன் திலகனின் மனைவி சந்தியா, வயிற்றில் ஈட்டி வடிவ வடு கொண்ட அனாதைக் குழந்தையை "பாரி" என்று பெயரிட்டுத் தத்தெடுக்கிறாள். சந்தியாவின் மரணத்திற்குப் பிறகு, திலகனைக் காப்பாற்றி அவரது மரியாதையைப் பெறுகிறான் பாரி. கால்நடை மருத்துவர் ருக்மிணியை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். திருமணத்தின்போது குற்ற வாழ்க்கையை விடுவதாக அறிவிக்கும் பாரி, "கோல்ட் ஃபிஷ்" என்ற ஆயுத வர்த்தகத்தை சீர்குலைத்ததாக திலகனால் குற்றஞ்சாட்டப்படுகிறான். திலகனுடனான மோதலில் பாரி சிறையில் அடைக்கப்படுகிறான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தமான் தீவுகளில் இருக்கும் ருக்மிணியை மீண்டும் அடைய, நகைச்சுவை சிகிச்சையாளராக மாறுவேடமிடுகிறான். தீவை ஆளும் கொடுங்கோலன் மில்டனின் மகன் ருக்மிணியை தொந்தரவு செய்கிறான். மில்டனின் ஆட்களால் பாரியின் உண்மை அடையாளம் அம்பலமாகிறது.

பாரி தனது உண்மையான வரலாற்றை அறிகிறான். பாரியின் பெற்றோர்கள் இட்ட பெயர் ஜடாமுனி, அவனது தந்தை பசுபதி, தாய் பல்லவி. தீவின் கொடூர ஆட்சியாளர் ராஜவேலை அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. திலகன், மைக்கேல் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பாரியைத் தேடி வருகின்றனர். பாரியின் கதை, கோல்ட் ஃபிஷின் மர்மம், மற்றும் அந்தமான் தீவின் எதிர்காலம் ஆகியவை பிற்பாதி கதை.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பும் பின்னணி இசையும் செய்துள்ளார். சூரியாவுடன் முதல் முறை பணிபுரிகிறார். கார்த்திக் சுப்புராஜுடன் எட்டாவது முறை இணைகிறார்.[9][a] "கனிமா" பாடல் மிகவும் வரவேற்பு பெற்றது. அந்தப் பாடலில் வரும் ஒரு சிறிய துணுக்கிற்கு பல பிரபலங்கள் நடனம் ஆடி சிறிய நிகழ்படங்களை வெளியிட்டதால், பாடல் மிகவும் பிரலமானது.[10]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "லவ் டீடாக்சு"  அருண்ராஜா காமராஜ்புன்யா செல்வா, சூர்யா 3:30
2. "எதற்காக மறுபடி"  விவேக்புன்யா செல்வா 4:17
3. "தி ஒன்"  விவேக், சான் வின்சென்ட் டி பால்சித் ஸ்ரீராம், சந்தோஷ் நாராயணன், சான் வின்சென்ட் டி பால் 4:00
4. "கண்ணாடி பூவே"  விவேக்சந்தோஷ் நாராயணன் 4:22
5. "லூசு யுவர்"  808கிருசுணாசந்தோஷ் நாராயணன், 808கிருசுணா 1:43
6. "கனிமா"  விவேக்சந்தோஷ் நாராயணன், இந்தியன் கோரல் என்செம்பல் 4:04

வெளியீடு

[தொகு]

திரையரங்கம்

[தொகு]

2025 மே 1 மே நாளன்று வெளியிடப்பட்டது.[11][12]

வீட்டு ஊடகம்

[தொகு]

இணைய பாய்வு உரிமத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு நெட்ஃபிளிக்சு 80 கோடி (ஐஅ$9.3 மில்லியன்) ரூபாய்க்கு வாங்கியுள்ளது.[13][14] இந்தி உரிமத்தை 25 கோடி (ஐஅ$2.9 மில்லியன்) ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.[15][16] செயற்கைகோள் உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.[17]

வரவேற்பு

[தொகு]

"சூர்யாவின் சமீபத்திய படங்களுடன் ஒப்பிடுகையில், இப்படம் 'much better' என்ற வகையிலும், சூர்யாவின் நடிப்பும் உழைப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதாலும், 'ரெட்ரோ'அவருக்கு ஒரு 'கம் பாக் என்று உறுதியாக சொல்லலாம்" என்று கல்கி இதழ் விமர்சனம் எழுதினர்.[18] "கங்குவாவின் தோல்விக்குப் பின், சூர்யாவுக்கு நல்ல படம் அமைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், இதுவும் கலவையான எண்ணங்கள் கொண்ட படமாகவே உருவாகியிருக்கிறது" என்று தினமணியில் விமர்சனம் எழுதினர்.[19] தினமலர் நாளிதழ் "ரெட்ரோ - முதல் பாதி மெட்ரோ; இரண்டாம் பாதி எலக்ட்ரிக் டிரெய்ன்" என்று கூறி அளவீட்டை வழங்கினர்.[20]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S, Goutham (17 April 2025). "Retro: Release date, certification, plot, runtime, and cast; everything to know about Suriya and Pooja Hegde starrer" (in en). https://www.pinkvilla.com/entertainment/south/retro-release-date-certification-plot-runtime-and-cast-everything-to-know-about-suriya-and-pooja-hegde-starrer-1383113. 
  2. Kumar, Rsiva (21 February 2025). "சூர்யா 45 படப்பிடிப்பில் புதிய சிக்கல் – போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு: என்ன நடந்தது?". Asianet News. Archived from the original on 21 February 2025. Retrieved 21 February 2025.
  3. "തിരിച്ചുപിടിക്കേണ്ടത് 65 കോടി ! രണ്ടും കൽപ്പിച്ച് സൂര്യ; റെട്രോ കേരളത്തിലെത്തിക്കാൻ വൈക മെറിലാൻഡ്". Asianet News (in மலையாளம்). 1 April 2025. Archived from the original on 1 April 2025. Retrieved 1 April 2025.
  4. வினோத்குமார், S (19 May 2025). "இனிதே துவங்கும் சூர்யா 46 ..முடிவான ரிலீஸ் தேதி..வெளியான அப்டேட்". Samayam. Retrieved 19 May 2025.
  5. "ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-24.
  6. வினோத்குமார், S (19 May 2025). "இனிதே துவங்கும் சூர்யா 46 ..முடிவான ரிலீஸ் தேதி..வெளியான அப்டேட்". Samayam. Retrieved 19 May 2025.
  7. Exclusive Interview with Aavni Anjali Nair | Suriya 44 | Veera Dheera Sooran | Vikram | Phoenix (in மலையாளம்). Silly Monks Mollywood. 27 December 2024. Archived from the original on 11 January 2025. Retrieved 30 December 2024 – via யூடியூப்.
  8. A Manu, Hridyambika (28 August 2024). "Shriya Saran to make a special appearance in Suriya 44? Here's what we know". Desimartini (in ஆங்கிலம்). Archived from the original on 28 August 2024. Retrieved 28 August 2024.
  9. Nasreen, Raisa (16 May 2024). "Music Composer Santhosh Narayanan Joins Suriya 44". Times Now (in ஆங்கிலம்). Archived from the original on 20 May 2024. Retrieved 1 June 2024.
  10. Bharat, E. T. V. (2025-05-02). "ஊரே கொண்டாடிய கனிமா பாடலை கலாய்த்து தள்ளிய சந்தோஷ் நாரயணன்!". ETV Bharat News. Retrieved 2025-05-02.
  11. Rajpal, Roktim (8 January 2025). "Retro release date: Suriya, Pooja Hegde's film to hit the screens on this day with a special Ajith Kumar connect". Indiatimes. Times Internet. The Times Group. Archived from the original on 18 January 2025. Retrieved 17 January 2025.
  12. Kumar, Akshay (8 January 2025). "Suriya-Karthik Subbaraj's Retro gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 8 January 2025. Retrieved 8 January 2025.
  13. "ചിത്രീകരിച്ചുകൊണ്ടിരിക്കുന്ന ആ സൂര്യ ചിത്രത്തിന് കോടികള്‍, വൻ ഡീല്‍". Asianet News (in மலையாளம்). 4 September 2024. Archived from the original on 4 September 2024. Retrieved 4 September 2024.
  14. Raina, Aarushi (13 April 2025). "Retro OTT: Suriya And Pooja Hegde's Tamil Movie To Stream On THIS Platform Post Theatrical Run; Know Cast, Plot And More" (in en) இம் மூலத்தில் இருந்து 13 April 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250413143954/https://english.jagran.com/entertainment/retro-ott-suriya-and-pooja-hegde-tamil-movie-to-stream-on-this-platform-post-theatrical-run-know-cast-plot-and-more-10230165. 
  15. "Retro  – Will The Pan-India Plan Work Out?". India Herald (in ஆங்கிலம்). 9 February 2025. Archived from the original on 13 February 2025. Retrieved 13 February 2025.
  16. Joy, Prathibha (15 January 2025). "Suriya-Karthik Subbaraj's Retro post-theatrical OTT rights sold". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 16 January 2025. Retrieved 13 February 2025.
  17. Siva, S (8 April 2025). "'ரெட்ரோ' பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?" (in ta) இம் மூலத்தில் இருந்து 10 April 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250410050808/https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surya-s-retro-set-for-may-1-release-audio-launch-and-ott-rights-create-buzz-125040800047_1.html. 
  18. ராகவ்குமார் (2025-05-02). "விமர்சனம்: ரெட்ரோ - படத்தின் மிகப்பெரிய பலம் 'சூரியா'!". Kalki Online. Retrieved 2025-05-02.
  19. சிவசங்கர் (2025-05-01). "வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!". Dinamani. Retrieved 2025-05-02.
  20. "ரெட்ரோ - விமர்சனம் {3/5} : ரெட்ரோ - முதல் பாதி மெட்ரோ; இரண்டாம் பாதி எலக்ட்ரிக் ட்ரெயின் - Retro". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-02.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்ரோ&oldid=4284447" இலிருந்து மீள்விக்கப்பட்டது