ரெட்னோ மர்சூதி
ரெட்னோ மர்சூதி | |
---|---|
![]() | |
2021 இல் ரெட்னோ மர்சூதி | |
17வது வெளியுறவு அமைச்சர் 27 அக்டோபர் 2014 | |
குடியரசுத் தலைவர் | ஜோக்கோ விடோடோ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ரெட்னோ லெஸ்தாரி பிரியன்சாரி மர்சூதி 27 நவம்பர் 1962 செமாராங், இந்தோனேசியா |
அரசியல் கட்சி | கட்சி சாராதவர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | அகஸ் மர்சூதி |
பிள்ளைகள் | தயோட்டா மசூதி பகஸ் மசூதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கட்ஜா மடா பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) ஹாக் பல்கலைக்கழகம் (பயன்பாட்டு அறிவியல்) (சட்டத்தில் முதுகலைப் பட்டம்) |
ரெட்னோ லெஸ்தாரி பிரியன்சாரி மர்சூதி ( Retno Lestari Priansari Marsudi ) (பிறப்பு: நவம்பர் 27, 1962) ஒரு இந்தோனேசிய இராஜதந்திரி ஆவார். இவர் 2014 முதல் ஜோகோ விடோடோவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். மேல்லும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்ணாவார். [1] முன்பு 2012 முதல் 2014 வரை நெதர்லாந்திற்கான இந்தோனேசிய தூதராகவும், 2005 முதல் 2008 வரை ஐசுலாந்து மற்றும் நோர்வேக்கான தூதராகவும் இருந்தார் [2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
செமாராங்கில் பிறந்த மர்சூதி, சுமான் 3 செமராங்கில் பட்டம் பெற்றார். பின்னர், சர்வதேச உறவுகளில் தனது படிப்பைத் தொடர்ந்தார், 1985 இல் கட்ஜா மடா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் டென் ஹாக் பலகலிக்கழகத்தில் பயன்பாட்டு அறிவியலில் சர்வதேச ஐரோப்பிய சட்டம் மற்றும் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார். நெதர்லாந்து கிலிங்கெண்டேல் சர்வதேச நிறுவனத்தில் வெளியுறவு அமைச்சக பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றினார். [3]
இராஜதந்திர சேவையில் தொழில்[தொகு]
மர்சூதி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தார். 1997 மற்றும் 2001 க்கு இடையில், நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான முதல் செயலாளராக பணியாற்றினார். 2001 இல், ஐரோப்பா மற்றும் அமெரிக்க விவகாரங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2003 இல் மேற்கு ஐரோப்பா விவகாரங்களுக்கான இயக்குநராக பதவி உயர்வு பெற்றார் [4]
2005 இல், நோர்வே மற்றும் ஐசுலாந்துக்கான இந்தோனேசிய தூதராக நியமிக்கப்பட்டார். பதவிக் காலத்தில், இவருக்கு டிசம்பர் 2011 இல் நோர்வேயின் அரச கழக விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தோனேசியரானார். [5] ஓசுலோ பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். ஜகார்த்தாவுக்குத் திரும்பிய பின்னர், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விவகாரங்களுக்கான தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு நெதர்லாந்திற்கான இந்தோனேசிய தூதராக குடியரசுத்தலைவர் சுசீலோ பாம்பாங் யுதயோனோவால் நியமிக்கப்பட்டார். [6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Joko Widodo appoints Indonesia's first female foreign minister, Retno Marsudi". https://www.theguardian.com/world/2014/oct/27/joko-widodo-appoints-indonesias-first-female-foreign-minister-retno-marsudi.
- ↑ "Ambassador Retno Marsudi to Strengthen Indonesia-Netherlands Special Ties". 2012-01-13. Archived from the original on 2016-09-17. https://web.archive.org/web/20160917221654/http://www.kemlu.go.id/thehague/en/arsip/siaran-pers/Pages/Ambassador-Retno-Marsudi-to-Strengthen-Indonesia-Netherlands-Special-Ties.aspx.
- ↑ "RI, Dutch extend diplomatic training to 2016". The Jakarta Post. 8 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Menlu Retno Marsudi Sudah Siapkan Program Kerja". kompas.com. 20 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Retno Marsudi, Menlu Perempuan Pertama Indonesia". bisnis.com. 11 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "President installs 26 RI ambassadors". Antara News. 2011-12-21. https://en.antaranews.com/news/78604/president-installs-26-ri-ambassadors. பார்த்த நாள்: 2022-07-13.