உள்ளடக்கத்துக்குச் செல்

ரெட்டிபகரி மாதவி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்டிபகரி மாதவி ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்அம்சத் பாசா சேக் பேபரி
தொகுதிகடப்பா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

ரெட்டிபகரி மாதவி ரெட்டி (Reddeppagari Madhavi Reddy)(பிறப்பு 1974) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். கடப்பா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆன இவர், ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்தில் கடப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் கடப்பா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

கல்வி

[தொகு]

கடப்பாவின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாதவி. இவர் சிறீனிவாச ரெட்டி ரெட்டெப்பகரியை (தெலுங்கு தேச கட்சி தலைமைக்கழக உறுப்பினர்) மணந்தார். 1995-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[3]

அரசியல்

[தொகு]

மாதவி 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் கடப்பா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் அம்சத் பாசா சேக் பெபரியை 18860 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][1] மேலும் 2024 நவம்பர் 12 அன்று சட்டமன்ற கொறடாவாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kadapa Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
  2. "Constituencies Wise LIVE Election Results of Andhra Pradesh Pradesh 2024 |AP Election Winning Candidates". ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  3. "Madhavi Reddappa Gari(TDP): Constituency- KADAPA(KADAPA) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
  4. "Kadapa, Andhra Pradesh Assembly Election Results 2024 Live Updates: TDP's Madhavi Reddappa Gari leading with 84535 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டிபகரி_மாதவி_ரெட்டி&oldid=4230432" இலிருந்து மீள்விக்கப்பட்டது