ரெடென்டோ டி. பெரான்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெடென்டோ டி. பெரான்டி
Redento D. Ferranti
பெரான்டி தனது மனைவி இடாவுடன், திரிவி இத்தாலி
பிறப்பு(1923-03-04)4 மார்ச்சு 1923
சுல்மோனா, இத்தாலி
இறப்பு29 மார்ச்சு 2008(2008-03-29) (அகவை 85)
நியு ஹெவன், கானெக்டிகட்
கல்லறைதிரிவி, இத்தாலி
தேசியம்இத்தாலியர்
மற்ற பெயர்கள்தினோ பெரான்டி
குடியுரிமைஐக்கிய நாடுகள்
பணிநுரையீரல் நிபுணர்
வாழ்க்கைத்
துணை
இடா பெரான்டி
பிள்ளைகள்6

ரெடென்டோ டி. பெரான்டி (மார்ச் 4, 1923 - ஜூலை 29, 2008) என்பவர் நீண்டகால சுவாச நோயாளிகள் மற்றும் நுரையீரல் மறுவாழ்வுக்கான பராமரிப்பில் அமெரிக்காவில் முன்னோடியாக மருத்துவர் ஆவார். இவர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சிறந்த அணுகுமுறையான பிராணவாயு சிகிச்சையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரெடென்டோ டி. பெரான்டி இத்தாலியின் சுல்மோனாவில் 1923ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் மரிய அசுண்டா கோலோமோசுக மற்றும் மார்கோ பெராண்டி. இவர்கள் தையற்காரராகவும் இரயில்வே ஊழியராகவும் பணியாற்றினர். 1952ல் ரோமில் உள்ள மருத்துவப் பள்ளியில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர், கிங்ஸ் கவுண்டியில் சிறிதுகாலம் உறைவிட மருத்துவராக பணியாற்றியப் பின்னர், நியூயார்க்கில் உள்ள தூய் வின்செண்ட் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். அங்கு மயக்கமருந்து நிபுணராக பணியாற்றிய இடா பிரிசியோவினை மணந்தார்.[1]

மருத்துவப்பணி[தொகு]

திருமணத்திற்குப் பின்னர் கனெக்டிகட்டிற்கு குடிபெயெர்ந்து, வாலிங்போர்டில் உள்ள கெய்லார்ட் மருத்துவமனையில் 1969 முதல் 1997 வரை மருத்துவராக பணியாற்றினார். இங்குள்ள பல மருத்துவ மனைகளிலும் சேவை புரிந்த இவர், சுவாச மருத்துவம் தொடர்பான மருத்துவ பள்ளியினை தூய ராபெல் மருத்துவமனையில் துவக்கியதில் துணை புரிந்தார். இவர் நீண்டகால சுவாச நோயாளிகள் மற்றும் நுரையீரல் மறுவாழ்வுக்கான பராமரிப்பில் அமெரிக்காவில் முன்னோடியாக இருந்தார். நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சிறந்த அணுகுமுறையான பிராணவாயு சிகிச்சையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர், பெராண்டி. மேலும் சிறிய கொள்கலன்களில் திரவ ஆக்ஸிஜனின் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மருத்துவர்களில் முதன்மையானவர்களில் இவரும் ஒருவர்.[2] நுரையீரல் துறையில் இவரது ஆரம்பக்கால பணிகளால் இவர் "நவீன நுரையீரல் மறுவாழ்வின் தந்தை" என்ற பட்டத்தைப் பெறுகிறார். இவர் நுரையீரல் மருத்துவராகவும் மற்றும் மருத்துவ இயக்குநராகவும், யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இணைப் பேராசிரியராகவும் இருந்தார்.[3] கெயிலார்ட் மருத்துவமனையின் நுரையீரல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரான்டி முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். மேலும் தூக்க ஆய்வின் காரணகர்த்தாவாக இருந்தார். இது நியூ இங்கிலாந்தில் மருத்துவமனையின் மிகப்பெரிய தூக்க ஆய்வு திட்டத்திற்கு வழிவகுத்தது மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும்.

விருது[தொகு]

அமெரிக்க நுரையீரல் கழகம் மற்றும் கனெக்டிகட் மார்பக சங்கம் வழங்கிய மனிதாபிமான விருது, கெயிலார்ட் பதக்கம் வழங்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.celentanofuneralhome.com/obits/obituary.php?id=403403
  2. "Redento Ferranti Obituary (2008) - Hartford Courant". www.legacy.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  3. "R Ferranti's research works | Yale University, CT (YU) and other places". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடென்டோ_டி._பெரான்டி&oldid=3136234" இலிருந்து மீள்விக்கப்பட்டது