ரெடி பிளேயர் ஒன் (திரைப்படம்)
ரெடி பிளேயர் ஒன் (Ready Player One) 2018 இல் வெளிவந்த அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும்[1]. இந்தத் திரைப்படம் எர்னஸ்ட் க்ளென் எழுதிய ரெடி பிளேயர் ஒன் அறிவியல் புதினகதைப் புத்தகத்தின் கதையை அடிப்படியாக கொண்டது. இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை 2045 ஆம் ஆண்டு நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. வார்னர் புரோஸ் நிறுவனத்தால் 11 மார்ச் 2018 இல் வெளியிடப்பட்டது. ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இந்த திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் .[2]
கதை சுருக்கம்[தொகு]
2045 ஆம் ஆண்டு நிறையபேர் விளையாடும் மெய்நிகர் இணைய கணினி விளையாட்டாக அயாசிஸ் என்ற விளையாட்டு இருந்து வருகிறது. இந்த விளையாட்டைத் தயாரித்த உரிமையாளர் இந்த விளையாட்டில் மூன்று புதிர்களை விட்டுச்சென்றுள்ளார். அந்த புதிர்களைக் கண்டுபிடிப்பவருக்கு இந்த விளையாட்டின் உரிமை வழங்கப்படும். இந்த மொத்தக் கணினி விளையாட்டில் நிறைய குறுவிளையாட்டுகள் இருப்பதால் யாருமே அந்த புதிர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பேர்சிவல் என்ற பயனர் பெயருடன் விளையாடும் வேட் வாட்ஸ் ஒரு கட்டத்தில் முதல் புதிரைக் கண்டுபிடிக்கிறார். அவரது நண்பர்களுடன் இணைந்து இரண்டாவது புதிரையும் கண்டுபிடிக்கிறார். இந்நிலையில் இந்த கணினி விளையாட்டின் உரிமையை அடைய நினைக்கும் தனியார் நிறுவன உரிமையாளரால் நிஜவாழ்க்கையில் இந்த புதிர்களைக் கண்டுபிடிக்கும் குழு துரத்தப்படுகிறது. இதனால் சக விளையாட்டாளர்களின் பெருவாரியான உதவியுடன் மூன்றாவது புதிரை வேட் வாட்ஸ் அடைகிறார். ஆனால் இந்த மூன்றாவது புதிருக்கான குறுவிளையாட்டின் முடிவில் வில்சன் இந்த கணினி விளையாட்டு வெற்றி தோல்விகள் என்பதைக் கடந்து ஒரு சாகசமாக மற்றும் நிஜவாழ்க்கையில் இல்லாத ஒரு உலகத்தை எல்லோருக்கும் கிடைக்கப்பெறவே உருவாக்கப்பட்டது என்ற தகவலை சொல்லும் காணொளியைப் பார்க்கிறார். நிறைய சவால்களைக் கடந்து கடைசியாக வாட்ஸ் அயாசின் உரிமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வசூல் நிலவரம் :[தொகு]
பாக்ஸ்ஆபிஸ் மோசோ இணையதளத்தின் தகவலின் படி இந்த திரைப்படம் 582 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ready Player One (ஆங்கிலம்), 2019-01-19 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Ready Player One, 2019-01-19 அன்று பார்க்கப்பட்டது
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரெடி பிளேயர் ஒன் (திரைப்படம்) |