ரெஜினா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெஜினா பேகம் (பிறப்பு: அக்டோபர் 23 1968), தமிழ்நாடு தாளந்திருவாசல் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்ஜுனிட் தொடக்கப்பள்ளியிலும், பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் புலமைவாய்ந்தவர்.

தொழில் நடவடிக்கை[தொகு]

வி. ஐ .பி.டிராவல் அண்ட் டுவர்ஸ் எனும் பயணத்துறை நிறுவனத்தைத் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராக பணியாற்றிவருகின்றார்.

இலக்கியப் பணி[தொகு]

1982ல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை பல சிறுகதைகளையும், நாடகங்களையும், மரபுக் கவிதைகளையும், புதுக் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1994ல் வானொலியில் இவரின் முதல் படைப்பு ‘விகடகவி தெனாலிராமன்' எனும் தலைப்பில் ஒலிபரப்பாகியது. இதுவொரு நாடகமாகும்.

வகித்த பதவிகள்[தொகு]

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராகவும், ஈராண்டுகள் அதன் பொருளாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சிண்டா, பொத்தோங் பாசிர் இந்திய நற்பணிச் செயற்குழு, தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம் ஆகியவற்றிலும் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜினா_பேகம்&oldid=2713102" இலிருந்து மீள்விக்கப்பட்டது