ரெஜாங் நடனம்
ரெஜாங், பாலி புனித நடனம் | |
| பூர்வீக பெயர் | தாரி ரெஜாங் நடனம் |
|---|---|
| வகை | பாலி புனித நடனங்கள் |
| நேர கையொப்பம் | ==== |
| கருவி(கள்) | செப்புத் தாள இசைக்கருவி, மணி ஓசை கருவி, மிருதங்கம் |
| கண்டுபிடிப்பாளர் | பாலி மக்கள் |
| தோற்றம் | இந்தோனேசியா |
| Three genres of traditional dance in Bali | |
|---|---|
| நாடு | இந்தோனேசியா |
| மேற்கோள் | 00 |
| இடம் | ஆசிய பசிபிக் |
| கல்வெட்டு வரலாறு | |
| கல்வெட்டு | 2015 (10th அமர்வு) |
| பட்டியல் | Representative |
ரெஜாங் நடனம், இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பாலி இந்துக்களின் பாலி புனித நடனங்களில் ஒன்றாகும். இதில் பெண்கள் தங்களைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கும் ஒரு தியாக நடனம் ஆகும்.[1]இது பொதுவாக இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் வாழும் குளுங்குங் ரீஜென்சி மற்றும் கரங்காசெம் ரீஜென்சியில் உள்ள இந்து கோவில்களில் நடத்தப்படுகிறது. "ரெஜாங்" என்றால் "காணிக்கை", பூமிக்கு வரும் கடவுள்களை வரவேற்கும் நடனம். இந்த நடனம் புனித காணிக்கை விழாக்களின் ஒரு பகுதியாகும், இவை அனைத்தும் பாலியின் சடங்கு நாட்காட்டியில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நடக்கும்.
இதன் முக்கிய நிகழ்வு பேல் அகுங்கின் கிராம மண்டபத்தில் மூன்று நாள் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடனக் கலைஞர்களுக்கு எந்த முன் பயிற்சியும் தேவையில்லை. நங்காயாவின் ஆவி அவர்களை நடன அசைவுகளை இணக்கமாக நிகழ்த்த வழிநடத்தும் என்று நம்பினர். இரண்டு அல்லது மூன்று வயதுடைய பெண்களை ஊர்வலத்தில் சேர்க்கலாம்.[2] இந்த நடனம் நெங்கெராஸ், சிமி அல்லது சூத்ரி என்றும் அழைக்கப்படுகிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcoming Gods with 'Rejang' dance". The Jakarta Post. https://www.thejakartapost.com/multimedia/2019/01/28/welcoming-gods-with-rejang-dance.html.
- ↑ "Romancing the Rejang – Bali’s Dance of Enchantment". Now Bali இம் மூலத்தில் இருந்து 14 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170514061139/http://nowbali.co.id/romancing-the-rejang-balis-dance-of-enchantment/.
- ↑ "Tari Rejang". Archived from the original on 2019-08-02. Retrieved 2019-01-28.