உள்ளடக்கத்துக்குச் செல்

ரெசின் லா

ஆள்கூறுகள்: 33°25′08″N 78°50′58″E / 33.4188°N 78.8494°E / 33.4188; 78.8494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெசின் லா
ரெசின் லா is located in லடாக்
ரெசின் லா
ஏற்றம்5,500 மீ (18,045 அடி)
அமைவிடம்லே மாவட்டம், லடாக், இந்தியா - ருதோக் கவுண்டி, திபெத் தன்னாட்சிப் பகுதி, சீனா
மலைத் தொடர்இமயமலை, லடாக் மலைத்தொடர்
ஆள்கூறுகள்33°25′08″N 78°50′58″E / 33.4188°N 78.8494°E / 33.4188; 78.8494
ரெசிங் லா கணவாய் மற்றும் சமவெளிகளும், ஸ்பாங்கூர் ஏரியும்

ரெசின் லா (Rechin La ) என்பது ஒரு கணவாய் ஆகும். இது இந்தியாவின் லடாக் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதி இடையே இமயமலையில் லடாக் மலைத்தொடரில் 5,500 மீட்டர் உயரத்தில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது. சுசூல் சமவெளி உள்ளது. சுசூல் இராணுவ முகாம் ரெசின் லாவிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

1962 இந்திய-சீனப் போரின் போது, ரெசிங் லாவிற்கு வடமேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சண்டை நடைபெற்றது. இப்பகுதியில் 2020–2021 இந்தியா–சீனா மோதல்கள் போது இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

வரலாறு

[தொகு]
ஜோத்பூர் நகர சதுக்கத்தில் மேஜர் சைத்தான் சிங்கின் சிலை, இராஜஸ்தான்

1962 இந்திய சீனப் போரின் போது கிழக்கு லடாக்கில் ரெசின் லா கணவாயை காக்கும் படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். மேஜர் சைத்தான் சிங். 18 நவம்பர் 1962 அன்று, சீனாவின் பெரும் படைகளை எதிர்த்துப் போராட தனது வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டே போராடினார். உடல் முழுவதும் குண்டுக் காயங்களுடன் சைதான் சிங் வீர மரணமடைந்தார். இவரது மறைவிற்குப் பின் இந்தியக் குடியரசுத் தலைவர் 18 நவம்பர் 1962 அன்று இவரது தியாகத்தைப் பாராட்டி பரம் வீர் சக்கரம் விருது வழங்கினார்.[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Major Shaitan Singh PVC
  2. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசின்_லா&oldid=4045973" இலிருந்து மீள்விக்கப்பட்டது