உள்ளடக்கத்துக்குச் செல்

ரெசாங் லா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெசாங் லா போர் நினைவிடம், லே மாவட்டம், லடாக், இந்தியா
ரெசாங் லா போர் நினைவிடம், ரேவாரி, அரியானா, இந்தியா

ரெசாங் லா சண்டை (Battle of Rezang La), 1962 இந்திய-சீனப் போரின் ஒரு பகுதியாகும். 18 நவம்பர் 1962 அன்று இந்தியாவின் கிழக்கு இலடாக்கு பகுதியில் உள்ள ரெசின் லாவிற்கு வடமேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெசாங் லா கணவாயின் நகரிப்பகுதியில் உள்ள 8 & 9 எண்களிட்ட இந்தியப் பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை கைபற்ற வந்த சீனப் படைகளுக்கு எதிராக, மேஜர் சைத்தான் சிங் தலைமையில் இந்திய வீரர்கள் நடத்திய சண்டையாகும்.

சீன ஆதாரங்களின்படி இதனை பாங்கோங்லுவோ சண்டை என்பர். [5] சீன இராணுவத்தின் 11வது காலாட்படை படைப்பிரிவின் வலுவூட்டப்பட்ட 3வது பட்டாலியன் 2 மணி நேரத்திற்குள் பீரங்கித் தாக்குதல் மூலம் ரெசாங் லாவைக் கைப்பற்ற முடிந்தது.[1]

இந்திய ஆதாரங்களின்படி, 120 இந்திய வீரர்கள் "3,000க்கும் மேற்பட்ட சீன வீரர்களை" எதிர்கொண்டு லடாக்கில் உள்ள ரெசாங் லாவின் மூலோபாய மலைப்பாதையை "வெற்றிகரமாகப் பாதுகாத்தனர்" என்று அறியப்படுகிறது. 16,000 அடி (4,900 மீ) உயரத்தில், பெரும் சீனப் படைகளுக்கு எதிராகப் போராடிய இந்தப் போரில் 1400க்கும் மேற்பட்ட சீனப் படையினரின் உயிரிழப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது.

இந்தியப் பாதுகாப்புப் படைக்குத் தலைமை தாங்கிய மேஜர் சைத்தான் சிங்கிற்கு, அவரது அசாதாரண துணிச்சலுக்காக, இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இச்சண்டையில் பங்கேற்ற பல அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு மரணத்திற்குப் பின் பல விருதுகள் வழங்கப்பட்டது.[2] அக்டோபர் 1962 இல், சீனா இந்தியாவின் எல்லைப் பகுதிகளான அக்சாய் சின் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் (அப்போது வடகிழக்கு எல்லைப்புற முகமை) மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியது. போதுமான அளவு எண்ணிக்கை மற்றும் தயாரிப்பு இல்லாத இந்தியத் தரைப்படை உயரமான, பனிபடர்ந்த மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டது. லடாக்கின் சுசூல் செக்டாரில் அமைந்துள்ள ரெசாங் லா, சுசூலில் உள்ள முக்கிய வான்படை தளத்தைப் பாதுகாத்ததால், அது ஒரு முக்கிய பாதுகாப்புப் புள்ளியாக மாறியது.[3]

ரெசாங் லாவின் பாதுகாப்பு மேஜர் சைத்தான் சிங்கின் கட்டளையின் கீழ் குமாவுன் கோட்டம்|குமாவோன் படைப்பிரிவின் 13வது பட்டாலியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் படைப்பிரிவு, போதுமான பீரங்கி ஆதரவு அல்லது வலுவூட்டல்கள் இல்லாமல், கணவாய்ப் பகுதியின் தரிசு முகடுகளில் நிலைநிறுத்தப்பட்டது.[4]

போர்

[தொகு]

1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போரின் போது, 120 இந்திய வீரர்களைக் கொண்ட 13 குமாவோனின் சார்லி "சி" கம்பெனியின்[5][6][7] கட்டுப்பாட்டில் ரெசாங் லா கணவாய் இருந்தது. போரின் அதிகாரப்பூர்வ இந்திய ஆதாரங்களின்படி, அஹிர்வால் பகுதி முழுவதும் சார்லி கம்பெனியின் கட்டுப்பாட்டில் ரெசாங் லா கணவாய் பகுதியில் 5,500 மீட்டர் (18,000 அடி) உயரத்தில் நிறுத்தப்பட்டது.[8] ரெசாங் லாவில் ஒரு குறைபாடு இருந்தது, அது பீரங்கி செயல்பாட்டைத் தடுத்தது..[9] இதனால் இந்திய காலாட்படை பீரங்கி பாதுகாப்பு இல்லாமல் சண்டை செய்ய வேண்டியிருந்தது. இந்தியப் படைக்கு மேஜர் சைத்தான் சிங் தலைமை தாங்கினார்.[10]அவர் போரில் உயிரிழந்தார். மேலும் அவரது வீரதீரச் செயல்களுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.[11][12][9]

அலை அலையாக வந்த சீன வீரர்கள் இந்தியப் படை நிலைகளை தாக்கினர்.[13][14][15] இறுதியில், இந்திய நிலைகளின் எண் 8 மற்றும் 9 சீனர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்தியப் படைகள் உயரமான மலை நிலைகளுக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போர் முடிந்த பிறகு, இந்தியர்களின் வீரத்தை சீனர்கள் அங்கீகரித்தனர். அவர்கள் இந்திய வீரர்களின் உடல்களை போர்வைகளால் மூடினர்.[16]

இரு தரப்பினரும் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்தனர். இருப்பினும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதில் இரு நாடுகளும் உடன்படவில்லை. மொத்தம் 120 பேரில் 114 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[17][18]இருப்பினும், ரெசாங் லாவில் மட்டும் 1,300க்கும் மேற்பட்ட சீன துருப்புக்கள் கொல்லப்பட்டதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.[18][19][20]

பின்விளைவு

[தொகு]

ரெசாங் லாவில் குமாவோன் படைப்பிரிவின் பாதுகாப்பு இந்திய இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் போது மேஜர் சைத்தான் சிங்கின் தலைமை மற்றும் செயல்களுக்காக மேஜர் சைத்தான் சிங்கிற்கு மரணத்திற்குப் பின் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.[21] ரெசாங் லா மற்றும் குருங் மலைச் சண்டைகள் ஒரே நேரத்தில் நடந்ததால், சீன ஆதாரங்களில் பாங்கோங்லுவோ போர் என்று அழைக்கப்பட்டது.[22]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. People's Liberation Army Academy of Military Sciences 1993, ப. 262.
  2. Singh 2016, ப. 203.
  3. Palit 1991, ப. 275.
  4. Singh 2016, ப. 198.
  5. Brig Chitranjan Sawant (2021). Living Life Loving Life. Prabhat Prakashan. pp. 150–151. ISBN 9788184303995.
  6. Bisht, Rachna (2014). The Brave Param Vir Chakra Stories (in ஆங்கிலம்). Penguin Books Limited. p. all. ISBN 9789351188056. Retrieved 15 Aug 2014.
  7. Arora, Dr. N. D. (2017). Political Science for Civil Services Mains (in ஆங்கிலம்). McGraw-Hill Education. p. all. ISBN 9789352604906. Retrieved 15 March 2017.
  8. Sinha & Athale 1992, ப. 334.
  9. 1 2 Mohan Guruswamy (20 November 2012). "Don't forget the heroes of Rezang La". The Hindu. http://www.thehindu.com/opinion/lead/dont-forget-the-heroes-of-rezang-la/article4112584.ece.
  10. Raj, Neha (2023-12-01). "Remembering Major Shaitan Singh Bhati: The Hero of Rezang La". PUNE.NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-02.
  11. Press Information Bureau, Government of India (7 January 2007). "Remembering Rezang La heroes". Sainik samachar. http://sainiksamachar.nic.in/englisharchives/2007/oct01-07/h4.htm.
  12. Col Dilbag Dabas (Retd) (15 December 2018). "Heroes of Rezang La 1962". The Tribune. https://www.tribuneindia.com/news/archive/haryanatribune/heroes-of-1962-rezang-la-battle-698535.
  13. "Soldier who won respect of enemy; tale of Rezang La 1962 battle". TOI. 30 October 2022. https://timesofindia.indiatimes.com/city/lucknow/soldier-who-won-respect-from-enemy/articleshow/95174853.cms.
  14. "The 1962 War at Rezang La: A Story of Raw Courage and Spirit". Quint. 21 November 2020. https://www.thequint.com/opinion/india-china-war-1962-heroic-stories.
  15. "Rezang La, 1962: When 120 Indian soldiers fought to the end & wiped out over 1,000 Chinese troops". Print. 22 October 2022. https://theprint.in/world/rezang-la-1962-when-120-indian-soldiers-fought-to-the-end-wiped-out-over-1000-chinese-troops/1176198/.
  16. "BHARAT RAKSHAK MONITOR Volume 3(3)". 2001-02-09. Archived from the original on 9 February 2001. Retrieved 2024-08-02.
  17. Gen Dalbir Singh (20 November 2014). "Coas Paid Homage to Heroes of Battle of Rezangla". https://indianarmy.nic.in/Site/NewsDetail/frmNoticeDetails.aspx?ParentID=7/x1LDTCjEC27tHLLhKSLg==&MnId=7x1LDTCjEC27tHLLhKSLg==&n=bniEtbbo9LN7kb4q3kupGg==&NewsID=YPthZ5C+a0gvZXWTGROrIw==.
  18. 1 2 Shekhar Gupta (30 October 2012). "'Nobody believed we had killed so many Chinese at Rezang La. Our commander called me crazy and warned that I could be court-martialled'". The Indian Express. http://www.indianexpress.com/news/-nobody-believed-we-had-killed-so-many-chinese-at-rezang-la.-our-commander-called-me-crazy-and-warned-that-i-could-be-courtmartialled-/1023745/0.
  19. Wortzel 2003, ப. 340–341
  20. Feng, Cheng; Wortzel, Larry M. (2003). "PLA Operational Principles and Limited War". In Ryan, Mark A.; Finkelstein, David Michael; McDevitt, Michael A. (eds.). Chinese warfighting: The PLA experience since 1949. M. E. Sharpe. pp. 188–. ISBN 978-0-7656-1087-4. Archived from the original on 7 January 2019. Retrieved 14 April 2011.
  21. Palit 1991, ப. 278.
  22. People's Liberation Army Academy of Military Sciences 1993, ப. 258-260.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசாங்_லா_சண்டை&oldid=4603225" இலிருந்து மீள்விக்கப்பட்டது