ரெக் மாவட்டம்
ரெக் மாவட்டம்
ریګ ولسوالی | |
|---|---|
ரெக் மாவட்டத்தின் வான்பரப்புக் காட்சி | |
ஆப்கானித்தான் நாட்டின் ரெக் மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 30°13′39″N 65°12′42″E / 30.22750°N 65.21167°E | |
| நாடு | |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| தலைமையிடம் | ரெக் அலாக்காதரி |
| அரசு | |
| • வகை | மாவட்டம் |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 7,900 |
| நேர வலயம் | ஒசநே+04:30 (ஆப்கானிய நேரம்) |
ரெக் மாவட்டம் (Reg District), ஆப்கானித்தான் நாட்டின் தெற்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிடம் ரெக் அலாக்காதரி கிராமம் ஆகும். பரப்பளவில் ரெக் மாவட்டம், கந்தகார் மாகாணத்தில் பெரிய மாகாணமாக இருப்பினும் சிறிய அளவில் மக்கள் தொகை கொண்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]கந்தகார் மாகாணத்தின் தென்மேற்கில் அமைந்த ரெக் மாவட்டத்தின் மேற்கில் ஹெல்மெண்ட் மாகாணம், வடக்கில் பஞ்ச்வாய் மாவட்டம் மற்றும் தாமன் மாவட்டங்களும், கிழக்கில் சோராபாக் மாவட்டம், தெற்கில் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
பிற விவரங்கள்
[தொகு]மிகவும் வறட்சியான, பாலைவனம் போன்ற ரெக் மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7,900 மட்டுமே. இம்மாவட்டத்தில் பலூச்சி மக்கள் மற்றும் பஷ்தூன் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் ஆப்கான்-பாகிஸ்தான் நாடுகளின் சிறிய எல்லைச்சாவடி உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Border checkpoint". Google Earth.