ரூப் சிங் பயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூப் சிங் பயஸ்
பிறப்புசெப்டம்பர் 8, 1908(1908-09-08)
ஜபல்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 திசம்பர் 1977(1977-12-16) (அகவை 69)
குவாலியர்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுவளைதடிப் பந்தாட்டம்
உயரம்6 அடி
பெற்றோர்சாமேசுவர் தத் சிங்
உறவினர்கள்தியான் சந்த் (ஹாக்கி வீரர்)
வென்ற பதக்கங்கள்
ஆடவர் ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1932 லாஸ் ஏஞ்சலஸ் ஹாக்கி அணி விளையாட்டு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1936 பெர்லின் ஹாக்கி அணி விளையாட்டு

ரூப் சிங் பயஸ் (Roop Singh Bais (8 செப்டம்பர் 1908 – 16 டிசம்பர் 1977) ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். 1932 மற்றும் 1936-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இவர் தனது அண்ணன் தியான் சந்த்துடன் இந்திய அணியின் சார்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்றவர்.[1] [2][3]

ரூப் சிங் பயஸ், 1932 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில், ஐக்கிய அமெரிக்க அணிக்கு எதிராக ரூப் சிங் 10 கோல்களையும், ஜப்பான் அணிக்கு எதிராக 3 கோல்களையும் அடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். ரூப் சிங் பயஸ் குவாலியர் இராச்ச்சியத்தின் மன்னர் ஜிவாஜி ராவ் சிந்தியாவின் இரணுவத்தில் அதிகாரியாகவும், பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய இராணுவத்திலும் பணிபுரிந்தவர்.

மரபுரிமைப் பேறுகள்[தொகு]

ரூப் சிங் பயசின் சொந்த ஊரான குவாலியரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கிற்கு ரூப் சிங்கின் பெயர் சூட்டப்பட்டது. 1936 ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் பெர்லின் நகரத்தின் ஒரு தெருவிற்கு ரூப் சிங் பயஸ் தெரு எனப்பெயரிடப்பட்டது, அதே போன்று 1972-இல் மன்சென் நகரில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் உள்ள ஒரு தெருவிற்கும் ரூப் சிங் பயஸ் தெரு என பெயர் சூட்டப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் லண்டனில் உள்ள குழாய் நிலையங்களுக்கு மறுபெயரிடப்பட்ட மூன்று இந்திய வீரர்களில் ரூப் சிங்கும் பெயரும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூப்_சிங்_பயஸ்&oldid=3217440" இருந்து மீள்விக்கப்பட்டது