உள்ளடக்கத்துக்குச் செல்

ரூபிள் நாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rouble Nagi at a social event
ஒரு சமூக நிகழ்வில் ரூபிள் நாகி

ரூபிள் நாகி (Rouble Nagi) (பிறப்பு: 1980 சூலை 8) சிற்பங்கள், கலை நிறுவல்கள் மற்றும் ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர் ஒரு இந்திய கலைஞராவார். ரூபிள் நாகி இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கான கலைப் பட்டறைகளை நடத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ரூபிள் நாகி கலை அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். இந்த அறக்கட்டளை கலை மூலம் சமூகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1]

ரூபிள் நாகி வடிவமைப்பு அரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் 800 க்கும் மேற்பட்ட சுவரோவியங்களைக் வரைந்துள்ளா. மேலும், உலகளவில் 150க்கும் மேற்பட்ட கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் இந்தியா வடிவைமைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ளார். மும்பையை அழகுபடுத்த்டல் திட்டத்தில் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள 'கலை நிறுவல்களுடன்' தொடங்க இவர் ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

ரூபிள் நாகி ஒரு கலைஞரும் மற்றும் சமூக சேவகியுமாவார் . இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் இளம் மற்றும் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதில் இவரது பணி முக்கியமானதாகும். இந்தியாவில் ரூபிள் நாகி கலை அறக்கட்டளை மூலம், இவர் நாடு முழுவதும் பட்டறைகளை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் 62க்கும் மேற்பட்ட பால்வாடியுடன், கலை மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இவர் பாடுபடுகிறார். [2]

இவரது சமீபத்திய முயற்சி "மிசால் மும்பை" என்பது இந்தியாவின் முதல் சேரி ஓவிய முயற்சியாகும். இதன் மூலம் இவர் இன்றுவரை 24000 வீடுகளுக்கு மேல் வரைந்துள்ளார். மும்பையில் சேரிகளிலுள்ள வீடுகளில் வரைவதற்கு ஒரு திட்டம் சேரிக்கு உயிர் கொடுக்கும் மற்றும் அதை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் திட்டமாகும். [3] இவரது தனித்துவமான ஓவியங்கள் பெருநிறுவனங்கள் , பிரபலங்கள், இந்திய அரசு மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட பலரால் சேகரிக்கப்படுகின்றன.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ரூபிள் நாகி 1980இல் இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் லண்டனில் உள்ள ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்டில் நுண்கலை பயின்றார் . சோதேபியின் லண்டனில் ஐரோப்பிய கலையையும் பயின்றார்.

தொழில்

[தொகு]
ஜாஃபர் பாபா காலனி, மார்ச் 2019 இல் பாந்திரா-வொர்லி கடற்பாலத்திலிருந்து காட்சி

பீங்கான், கண்ணாடி, டைல் மொசைக்ஸ், வெண்கலம், கறை படிந்த கண்ணாடி, வண்ணம், உலோக நிவாரணம் (பித்தளை, தாமிரம், அலுமினியம்) பீங்கான் ஓடுகள், பளிங்கு, இழை உள்ளிட்ட 33 வெவ்வேறு ஊடகங்களில் ரூபிள் நாகி செயல்படுகிறார். இவரது முக்கிய படைப்புகளில் சுவரோவியம் மற்றும் சிற்ப வேலை ஆகியவையும் அடங்கும். தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அரசு மற்றும் பொது கலைத் திட்டங்களுக்காக 800க்கும் மேற்பட்ட கலைத் திட்டங்களை இவர் செய்துள்ளார்.

ரூபிள் நாகி கலை அறக்கட்டளை

[தொகு]

குழந்தைகள் பள்ளிக்கு வரவழைக்கத் தொடங்குவதற்காக மும்பை சேரிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் பால்வாடிகளை நடத்தும் ரூபிள் நாகி ஆரம்பித்த சமூக முயற்சிகளில் ஒன்று ரூபிள் நாகி கலை அறக்கட்டளை என்பதாகும். கலை மற்றும் கல்வி மூலம் சமூகத்தை மாற்றுவதை இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. [4]

சமூகத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சமூக தளத்தை வழங்குவதற்காக வறியவர்களுக்கு கலை முகாம்களை ஏற்பாடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளை பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், சோஹைல் கான், சோனம் கபூர், இம்ரான் ஹாஷ்மி, சுஷ்மிதா சென் [5] மற்றும் சயீத் கான் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ளது.

ரூபிள் நாகி கலை அறக்கட்டளை ஒரு முழுமையான தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. அபியாஸ் கல்லி மீது வண்ணம் தீட்டியுள்ளது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வீடுகளில் மின்சார பிரச்சினை காரணமாக படிக்க வருகிறார்கள். இந்த திட்டத்தில் மாணவர்களும் உதவினார்கள். இவரது சமீபத்திய முயற்சி "மிசால் மும்பை" என்று அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம் மும்பை முழுவதிலும் உள்ள சேரிகளின் மீது வண்ணம் தீட்டுவதும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் வண்ணத்தைக் கொண்டு வருவதும் ஆகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Transforming the community through art" (in en). Deccan Chronicle. 2018-03-29. https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/290318/transforming-the-community-through-art.html. 
  2. "Walls of learning get splash of colour from students". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mumbai/walls-of-learning-get-splash-of-colour-from-students/articleshow/64626805.cms. 
  3. "The artist painting Mumbai's slums" (in en-AU). ABC News. 2018-05-21. http://www.abc.net.au/news/2018-05-21/the-artist-painting-mumbais-slums/9720894. 
  4. "Mumbai setting a misaal". http://www.asianage.com/. 2018-02-22. http://www.asianage.com/life/more-features/220218/mumbai-setting-a-misaal.html. 
  5. "Sonam Kapoor shines at event to support street kids". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபிள்_நாகி&oldid=3093615" இலிருந்து மீள்விக்கப்பட்டது