ரூபா பாய் ஃபர்தூஞ்சி
ரூபா பாய் ஃபர்தூஞ்சி Rupa Bai Furdoonji | |
|---|---|
ரூபா பாய் ஃபர்தூஞ்சி சர் தாமஸ் லாடர் பிராண்டுடன் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார் | |
| பிறப்பு | ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
| இறப்பு | ஐதராபாத், இந்தியா |
| பணி | மயக்க மருந்து நிபுணர் |
ரூபா பாய் ஃபர்தூஞ்சி (Rupa Bai Furdoonji) ( ஃபிர்தூஞ்சி அல்லது ஃபரிதூஞ்சி என்றும் அழைக்கப்படுகிறார்) (also Firdounji or Faridounji) இவர் ஒரு இந்திய பார்சி மருத்துவர் ஆவார், அவர் உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணராவார்.[1] அவர் ஐதராபாத்தில் மருத்துவம் பயின்றார், மேலும் இந்தியாவில் மயக்க மருந்தாக குளோரோபாரமைப் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]1885 ஆம் ஆண்டு, ஃபர்டூன்ஜி தனது படிப்பைத் தொடங்கினார் மற்றும் ஐதராபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில சேர்ந்த ஐந்து பெண்களில் ஒருவராவர். [1] 1889 ஆம் ஆண்டில், மருத்துவர் பட்டத்திற்கு நிகரான ஹக்கீம் பட்டம் பெற்றார். பின்னர், பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்சு மருத்துவமனையில் மருத்துவப் பட்டம் பெற்றார். [2][1] [3]1909 ஆம் ஆண்டில், அன்னி பெசண்டின் ஊக்கத்துடன், ஃபர்டூன்ஜி மயக்கவியலில் அதிக அனுபவத்தையும் அறிவையும் பெறுவதற்கு ஸ்காட்லாந்தின் எடின்பர்க் சென்றார். அங்கு மயக்க மருந்தை வலியுறுத்தும் சிறப்புப் படிப்பு எதுவும் இல்லாததால், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியலில் பட்டயம் பெற்றார். மயக்க மருந்தைக் கையாளும் மருத்துவர்களுக்கு இந்தப் பாடங்களின் அறிவு பயனுள்ளதாக இருந்ததால், அவர் இயற்பியல் மற்றும் வேதியியலைப் படிக்கத் தேர்ந்தெடுத்தார்.
1888 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது ஐதராபாத் குளோரோபாரம் ஆணையங்களில் ஃபர்டூன்ஜி ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். 1889 முதல் 1917 வரை, அவர் பிரிட்டிஷ் ரெசிடென்சி மருத்துவமனை (தற்போதைய சுல்தான் பஜார் மருத்துவமனை), அப்சல்கன்ஸ் மருத்துவமனை (தற்போதைய உஸ்மானியா பொது மருத்துவமனை ) மற்றும் ஐதராபாத்தில் உள்ள விக்டோரியா ஜெனானா மகப்பேறு மருத்துவமனைளில் மயக்கவியல் மருத்துவராக பயிற்சிபெற்றுள்ளார். 1920 ஆம் ஆண்டில், ஐதராபாத்தில் உள்ள சதர்காட் மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றார்.[1][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Dr. (Miss) Rupa Bai Furdoonji: World's first qualified female anesthesiologist.". Indian Journal of Anaesthesia 54 (3): 259–61. May 2010. doi:10.4103/0019-5049.65371. பப்மெட்:20885878.
- ↑ Ali, Momin; Ramachari, A. "History of Anesthesia and Hyderabad Chloroform Commission". Bulletin of the Indian Institute of History of Medicine 19: 47–61. http://www.ccras.nic.in/sites/default/files/viewpdf/jimh/BIIHM_1989/47%20to%2061.pdf.
- ↑ Sir Asman Jah (1891). "Report of the Hyderabad Chloroform Commission".
- ↑ "This woman hakeem showed the way". Telangana Today.