ரூபா கங்குலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூபா கங்குலி
ரூபா கங்குலி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மாளிகையில், பதவியேற்பு விழாவில்.
பிறப்பு25 நவம்பர் 1966 (1966-11-25) (அகவை 57)[1]
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
பாடகி
அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1985–2015
வாழ்க்கைத்
துணை
துருபா முகர்ஜி (1992–2006, மணமுறிவு)[2]
பிள்ளைகள்ஆகாஷ் முகர்ஜி[3]
விருதுகள்சிறந்த பாடகருக்கான தேசிய விருது (2011)
ரூபா கங்குலி
எம்.பி of மாநிலங்களவை (நியமிக்கப்பட்டார்) [4]
பதவியில் உள்ளார்
பதவியில்
4 October 2016
முன்னையவர்நவ்ஜோத் சிங் சித்து
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாஜக

ரூபா கங்குலி (பிறப்பு 25 நவம்பர் 1966) ஒரு இந்திய நடிகை, பின்னணி பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[5] பி.ஆர் சோப்ராவின் தொலைக்காட்சித் தொடரான மகாபாரதம் (1988) நாடகத்தில் திரௌபதியின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர் இவர். மர்னல் சென் , அபர்னா சென் , கௌதம் கோஸ் மற்றும் ரிருபருனோ கோஷ் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். இவர் முறையாக பயிற்சி பெற்ற பாடகர் மற்றும் நடனக்கலைஞர்.[6] தனது நடிப்புகாக தேசிய விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] அக்டோபர் மாதம், 2015, மாநிலங்களவையின் உறுப்பினராக , இந்தியாக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் .[7] மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் அணித்தலைவராக அவர் பணியாற்றினார்.[8]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ரூபா இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே கல்யாணி என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஓர் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார். கொல்கத்தாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரியான ஜோகமயா தேவி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[9]

தொழில்[தொகு]

வங்காள நாடகமான முக்தபந்தனாவில் (1985) நடித்ததன் மூலம் பரவலாக அனைவராலும் அறிப்பட்டு புகழ்பெற்றார்.[10] 1986இல் கணதேவதா என்ற இந்தி நாடகத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் அறிப்பட்டார். பின்னர் மகாபாரதம் என்ற நீண்ட கால இந்தி நாடகத்தில் திரௌபதியாக நடித்ததில் இந்திய அளவில் புகழ் பெற்றார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கங்குலி 1992 முதல் 2006 வரை துர்போ முகர்ஜி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்தார். அவர்கள் 1997 இல் ஒரு குழந்தை பெற்றனர்.[2] பின்னர் அவர்களுக்கிடையே மணமுறிவு ஏற்படும் வரை மும்பையில் வசித்துவந்தனர்.[12][13]

குறிப்புகள்[தொகு]

 1. "Roopa Ganguly". StarsFact.Com. Archived from the original on 2018-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
 2. 2.0 2.1 "I attempted suicide thrice:". The Times of India. 29 September 2009 இம் மூலத்தில் இருந்து 27 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130627160510/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-29/tv/28085294_1_marriage-kya-rupa-ganguly. பார்த்த நாள்: 5 November 2012. 
 3. "Roopa Ganguly". www.onenov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. BJP's Roopa Ganguly nominated for Sidhu's post in Rajya Sabha - The Economic Times
 5. "Roopa Ganguly movies, filmography, biography and songs - Cinestaan.com".
 6. 6.0 6.1 "Directorate of Film Festival". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
 7. "Actor Roopa Ganguly nominated to Rajya Sabha". http://indianexpress.com/article/india/india-news-india/roopa-ganguly-nominated-to-rajya-sabha/. 
 8. "'Mahabharat' Actress Rupa Ganguly To Head BJP's West Bengal Women's Wing".
 9. "கல்லூரி வரலாறு". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
 10. "10 Bengali Actresses Who Made It Big From The Small Screen To Cinema" (in en). pyckers இம் மூலத்தில் இருந்து 2018-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819182131/https://pycker.com/articles/10-tollywood-actresses-who-started-their-career-with-small-screen. 
 11. "Rupa Ganguly". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
 12. யாரும் ரூ 1 கோடி வெற்றி 'முழு உண்மை' கூறினார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் , பிரியங்கா ஸ்ரீவத்சவா, புது தில்லி, 20 செப்டம்பர் 2009.
 13. ரூபா கங்கூலி சச்சின் கா சாம்னா இறுதி நாள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா , டிவிய பிஏஎல், டிஎன்என் 18 செப்டம்பர் 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_கங்குலி&oldid=3791471" இலிருந்து மீள்விக்கப்பட்டது