உள்ளடக்கத்துக்குச் செல்

ரூத் மனோரமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூத் மனோரமா (Ruth Manorama பிறப்பு 30 மே 1952) இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தலித் சமூக ஆர்வலர் ஆவார், இவர் தலித் பெண்களின் உரிமைகள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையில் உள்ளவர்கள் மற்றும் நகர்ப்புற குடிசைவாசிகளின் உரிமைகளுக்காக போராடுகிறார். 2006 இல், இவருக்கு ரைட் லவ்லிவுட் விருது வழங்கப்பட்டது. [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ரூத் மனோரமா 30 மே 1952 இல் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளில், தாய் டோரதி , தந்தை பால் தன்ராஜ் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் டோரதி தன்ராஜ், ஒரு ஆசிரியர்; மற்றும் பால் தனராஜ், தபால் ஊழியர். மோசமான சாதி ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க, இவருடைய பெற்றோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். [2] மனோரமா தனது பெற்றோர்கள் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்து வளர்ந்தார். இவரது தாயார் டோரதி தனது பழமைவாத குடும்பத்திற்கு எதிராக கல்வி பெறும் உரிமைக்காக போராடி இறுதியில் ஆசிரியராகி பெண்களின் கல்வி உரிமைக்காக பிரச்சாரம் செய்தார். பண்டிதா ரமாபாயின் தாக்கத்தால், டோரதி தனது மகளுக்கு மனோராமா என்று பெயரிடப்பட்ட பண்டிதா ரமாபாயின் இரண்டாவது மகளின் பெயரை சூட்டினார். [3] இவருடைய தந்தை பால் தன்ராஜ் அண்டை கிராமங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் நிலத்திற்கான உரிமைகளுக்காக போராட அணிதிரட்டினார். [3] [4] மனோரமாவின் பெற்றோர் இவரையும் இவருடைய சகோதரிகளையும் கல்வி மற்றும் சுயசார்புடன் இருக்க ஊக்குவித்தனர்.

இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவர் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார், பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார் . 2001 ஆம் ஆண்டில், மனோரமாவுக்கு எகுமெனிகல் இந்திய இறையியல் மற்றும் தேவாலய நிர்வாகத்தின் அகாதமியால் "தேவாலயத்திற்கும் சமுதாயத்திற்கும் சிறப்பான பங்களித்ததற்காக" கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [5]

தேசிய தொழிலாளர் மையத்தின் பொதுச் செயலாளராக உள்ள என்.பி.சாமியை மனோரமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தொழில்

[தொகு]

மனோரமா சாதி, பாலினம் மற்றும் வர்க்க படிநிலைகளிலிருந்து எழும் ஒடுக்குமுறைகள் தொடர்பான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வருகிறார். வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறை, குடிசைவாசிகள், தலித்துகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்களின் அதிகாரம் ஆகியவற்றுக்காகவும் இவர் போராடி வருகிறார். இவர் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்காகப் பணியாற்றுகிறார் மற்றும் சர்வதேச அளவில் வெகுஜன அணிதிரட்டல் மற்றும் வழக்காடல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்.

வகித்த பதவிகள்

[தொகு]

தலித்துகள், பெண்கள், குடிசைவாசிகள் மற்றும் அமைப்புசாரா துறைகளின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மனோரமா உள்ளார். இவற்றில் சில:

பொதுச் செயலாளர், மகளிர் குரல் கர்நாடகம் - 1985 இல் நிறுவப்பட்டது, இது பெண்கள் குடிசைவாசிகள் மற்றும் அமைப்புசாரா துறைகளின் உரிமைகளுக்காக வேலை செய்கிறது.

தலைவர், பெண்களின் தேசிய கூட்டணி - இது பெண்களுக்கான பொறுப்புகளில் அரசாங்கத்தின் செயல்திறனைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் 1995 இல் பெய்ஜிங்கில் நடந்த நான்காவது உலக மகளிர் மாநாட்டைத் தொடர்ந்து அமைக்கப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  1. "Right Livelihood Award Recipient Ruth Manorama". Right Livelihood Foundation. Archived from the original on 6 February 2007.
  2. https://web.archive.org/web/20070206173631/http://www.rightlivelihood.org/recip/2006/ruth-manorama.htm
  3. 3.0 3.1 "Ruth Manorama, voice of Dalits |" (in en). india together. 2006-02-24. http://www.indiatogether.org/ruthmano-society. 
  4. "JD(S) fields Right Livelihood awardee in Bangalore South |" (in en-US). Citizen Matters, Bengaluru. 2014-04-04. http://bengaluru.citizenmatters.in/jd-s-fields-right-livelihood-awardee-in-bangalore-south-6313. 
  5. "Ruth ManoramaThe Right Livelihood Award". www.rightlivelihoodaward.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2006-08-23. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_மனோரமா&oldid=3284193" இலிருந்து மீள்விக்கப்பட்டது