ரூத் பேடர் கின்ஸ்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூத் பேடர் கின்ஸ்பர்க்
ரூத் பேடர் கின்ஸ்பர்க்
2016 இல் ரூத் பேடர் கின்ஸ்பர்க்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதி
பதவியில்
ஆகஸ்ட் 10, 1993 – செப்டம்பர் 18, 2020
பரிந்துரைப்புபில் கிளின்டன்
பதவியில்
ஜூன் 30, 1980 – ஆகஸ்ட் 9, 1993
பரிந்துரைப்புஜிம்மி கார்ட்டர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜோன் ரூத் பேடர்

(1933-03-15)மார்ச்சு 15, 1933
நியூயார்க்கு நகரம்,அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசெப்டம்பர் 18, 2020(2020-09-18) (அகவை 87)
வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
துணைவர்(s)
மார்ட்டின் டி. கின்ஸ்பர்க்
(தி. 1954; இற. 2010)
பிள்ளைகள்
  • ஜேன்]
  • ஜேம்ஸ்
கல்வி
கையெழுத்து

ஜோன் ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Joan Ruth Bader Ginsburg ; மார்ச் 15, 1933 – செப்டம்பர் 18, 2020) [1] ஒரு அமெரிக்க வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். 1993 முதல் 2020 இல் இறக்கும் வரை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதியாக பணியாற்றினார் [2] அப்போது நீதிபதியாக பணியாற்றிய பைரன் ஒயிட்டிற்கு பதிலாக அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அந்த நேரத்தில் பொதுவாக ஒரு மிதமான ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக கருதப்பட்டார். காலப்போக்கில் நீதிமன்றம் வலது பக்கம் மாறியதால் இவர் இறுதியில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் ஒரு பகுதியாக ஆனார். கின்ஸ்பர்க் சாண்ட்ரா டே ஓ'கானருக்குப் பிறகு நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் யூதப் பெண் மற்றும் இரண்டாவது பெண் ஆவார். தனது பதவிக்காலத்தில், கின்ஸ்பர்க் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை எழுதினார்.

பணிகள்[தொகு]

ரூத் பேடர், தனது சட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான வழக்கறிஞராக செலவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் முன் பல வாதங்களை வென்றார். அமெரிக்க பொது தாராளவாத ஒன்றியத்தின் தன்னார்வ வழக்கறிஞராக வாதிட்டார். மேலும், அதன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் 1970 களில் அதன் பொது ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார். 1980 ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் இவரை கொலம்பியா சர்க்யூட் மாவட்டத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமித்தார். 1993 இல் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் வரை அங்கு பணியாற்றினார். 2006 இல் ஓ'கானரின் ஓய்வு மற்றும் 2009 இல் சோனியா சோட்டோமேயர் நியமனத்திற்கு இடையில், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இவர் மட்டுமே இருந்தார். ரூத் பேடர் அமெரிக்க பிரபலமான கலாச்சாரத்தில் கவனத்தைப் பெற்றார். பல நிகழ்வுகளில் இவரது உணர்ச்சிமிக்க கருத்து வேறுபாடுகள், சட்டத்தின் முன்னுதாரணமான தாராளமயக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக பரவலாகக் காணப்பட்டது. இவர் " தி நோட்டரியஸ் ஆர்பிஜி ", [a] என்று அழைக்கப்பட்டார். [3]

இறப்பு[தொகு]

ரூத் பேடர் கின்ஸ்பர்க் வாசிங்டன். டி. சி.யில் உள்ள தனது வீட்டில் செப்டம்பர் 18, 2020 அன்று, தனது 87 வயதில், கணையப் புற்றுநோய் ( மாற்றிடம் புகல் ) காரணமாக இறந்தார் .

குறிப்புகள்[தொகு]

  1. A reference to the stage name of rapper நொடோரியஸ் பி.ஐ.ஜி

சான்றுகள்[தொகு]

  1. "Ruth Bader Ginsburg". National Women's History Museum. Archived from the original on August 11, 2021. பார்க்கப்பட்ட நாள் August 11, 2021.
  2. "Ruth Bader Ginsburg". HISTORY. Archived from the original on March 29, 2021. பார்க்கப்பட்ட நாள் September 21, 2020.
  3. Kelley, Lauren (October 27, 2015). "How Ruth Bader Ginsburg Became the 'Notorious RBG'". Rolling Stone. https://web.archive.org/web/20190125073309/https://www.rollingstone.com/culture/culture-features/how-ruth-bader-ginsburg-became-the-notorious-rbg-50388/ from the original on January 25, 2019. பார்க்கப்பட்ட நாள் January 24, 2019. {{cite magazine}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_பேடர்_கின்ஸ்பர்க்&oldid=3681676" இலிருந்து மீள்விக்கப்பட்டது