ரூத் பெனடிக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூத் புல்டன் பெனடிக்ட்
1937 இல் ரூத் பெனடிக்ட்
பிறப்புரூத் புல்டன்
(1887-06-05)சூன் 5, 1887
நியூயார்க் நகரம், New York, U.S.
இறப்புசெப்டம்பர் 17, 1948(1948-09-17) (அகவை 61)
நியூயார்க் நகரம், நியூ யார்க்,ஐக்கிய அமெரிக்கா
கல்விவாசர் கல்லூரி (இளங்கலை)
சமூக ஆய்வுகளுக்கான புதிய பள்ளி
கொலம்பியா பல்கலைக்கழகம் (PhD)
பணிமானிடவியல்
பெற்றோர்பிரடெரிக் புல்டன், பீட்டரிஸ் புல்டன்
வாழ்க்கைத்
துணை
ஸ்டான்லி ரோசிட்டர் பெனடிக்ட்

ரூத் ஃபுல்டன் பெனடிக்ட் (ஜூன் 5, 1887  – செப்டம்பர் 17, 1948) ஒரு அமெரிக்க மானிடவியலாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் ஆவார் .

இளமையும் கல்வியும்[தொகு]

அவர் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார். 1909 இல் வஸார் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். புதிய சமூகப் பள்ளி என்ற பள்லியில் எல்ஸி க்ளீஸ் பார்சன்ஸ் என்பவரின் கீழ் மானுடவியல் படிப்பைப் படித்த பிறகு, அவர் 1921 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிப்புகளை மேற்கொண்டார், அங்கே அவர் பிரான்சு போஸ் என்பவரின் கீழ் படித்தார். அவர் தனது முனைவர் பட்டத்தைப் பெற்று 1923 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணியில் சேர்ந்தார். அங்கு சக ஊழியராக மார்கரெட் மீட்( இவருடன் தன்னுடைய காதல் நினைவுகளைப் பெனடிக்ட் பகிர்ந்து கொண்டார்).[1] தனது மாணவரும் சக ஆசிரியருமான மார்வின் ஒப்ளர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்..

அமெரிக்க மானுடவியலின் தந்தை என அழைக்கப்படும்[2][3] பிரான்சு போஸ் இவரது ஆசிரியர் மற்றும் வழிகாட்டி ஆவார். அவரது போதனைகள் மற்றும் கண்ணோட்டத்தை பெனடிக்ட் படைப்பில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெனடிக்ட் அமெரிக்க மானுடவியல் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார், மேலும் அமெரிக்கநாட்டுப்புறவியல் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.[4] கற்ற கல்வியின் மூலம் முக்கியத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணி பெனடிக்ட் ஆவார்.[4] இவருடைய துறையில் இவர் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டு தனித்து விளங்கினார். ஆளுமை, கலை, மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் தொடர்புகளை இவர் ஆய்வு செய்தார். 1934 இல் தனது கலாச்சார வடிவங்கள் என்ற தான் பறைசாற்றிய கோட்பாடுகளைக் கொண்ட நூலில், தனிமை அல்லது தன்னிறைவு என்பதை வெளிப்படுத்தும் எந்தவொரு பண்பும் இல்லை என இவர் வலியுறுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Modell 1984: 145–157
  2. Holloway, M. (1997) The Paradoxical Legacy of Franz Boas—father of American anthropology. Natural History. November 1997.[1]
  3. Stocking. George W., Jr. 1960.Franz Boas and the Founding of the American Anthropological Association. AmericanAnthropologist62: 1–17.
  4. 4.0 4.1 Bailey, Martha J. (1994). American Women in Science:A Biographical Dictionary. ABC-CLIO, Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87436-740-9. https://archive.org/details/americanwomenins00bail_0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_பெனடிக்ட்&oldid=3583327" இலிருந்து மீள்விக்கப்பட்டது