ரூதர்போர்டு சிதறல்
ரூதர்போர்டு சிதறல் (Rutherford scattering) என்பது மின்னூட்டம் பெற்ற துகள்கள் இடையே கூலூம் இடைவினை மூலம் நடைபெறும் ஒரு மீள்தன்மையுடைய சிதறல் ஆகும். இது ஏனெசட் ரூதர்போர்டால் (Ernest Rutherford) 1911 ஆம் ஆண்டு விளக்கப்பட்ட[1] ஒரு இயற்பியல் நிகழ்வு ஆகும். மேலும் இது கிரக அமைப்பு போன்ற ரூதர்போர்டு அணுமாதிரி மற்றும் போர் அணு மாதிரி ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது. ரூதர்போர்டு சிதறல் முதலில் கூலூம் சிதறல் எனக் குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது மின்னூட்டத் துகள்களுக்கிடையேயான நிலை மின் விசையைச் (கூலூம் விசை) சார்ந்துள்ளது. ஆல்பா துகள்களைத் தங்கத்தின் அணுக்கருவின் மீது மோதுவதால் உருவாகும் ரூதர்போர்டு சிதறல் மீள் தன்மையுடைய சிதறலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும், ஏனெனில் மோதலுக்கு முன்னும் பின்னும் ஆல்பா துகள்களின் ஆற்றலும் திசைவேகமும் மாறாமல் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ E. Rutherford , "The Scattering of α and β rays by Matter and the Structure of the Atom",Philos. Mag., vol 6, ppioi.21, 1911
வெளி இணைப்புகள்
[தொகு]- E. Rutherford, The Scattering of α and β Particles by Matter and the Structure of the Atom, Philosophical Magazine. Series 6, vol. 21. May 1911