ருத்ர தாண்டவம் (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருத்ர தாண்டவம்
இயக்கம்மோகன் ஜி
தயாரிப்புமோகன் ஜி
கதைமோகன் ஜி
இசைஜுபின்
நடிப்புரிச்சர்ட் ரிசி
கௌதம் மேனன்
தர்சா குப்தா
ராதாரவி
தம்பி ராமையா
மனோபாலா
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுபரூக் ஜெ. பாட்சா
படத்தொகுப்புஎஸ். தேவராஜ்
தயாரிப்புGM Film Corporation and 7G Films
வெளியீடு1 அக்டோபர் 2021 (2021-10-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ருத்ர தாண்டவம் (Rudra Thandavam) பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி[1] திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜி என்பவர் இப்படத்தை தயாரித்தும், எழுதியும், இயக்கியுள்ள அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1 அக்டோபர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியானது.[2] இப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிசி [3] கதாநாயகியாக தர்சா குப்தா, ஜி. மாரிமுத்து மற்றும் எதிர்நாயகனாக கௌதம் மேனன் நடித்துள்ளனர்.[4][5] மேலும் ராதாரவி, தம்பி ராமையா, ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் மனோபாலா கௌரவத் தோற்றங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ஜுபின் என்பவரும்[6][7], படத்தொகுப்பை எஸ். தேவராஜும் மேற்கொண்டுள்ளனர்.

திரைப்படத்தின் மையக் கருத்து[தொகு]

இளைஞர்களிடம் போதை பொருட்கள் விநியோகித்தல், தவறானவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துதல், சாத்தான் பெயரால் இந்துக்களை மதமாற்றம் செய்வது தடுப்பதே இத்திரைப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.

திரைக் கதை சுருக்கம்[தொகு]

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட், சென்னைத் துறைமுக காவல் நிலையத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஆய்வாளராக பணிபுரிகிறார். தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கவுதம் மேனனுக்கும், நாயகன் ரிச்சர்டுக்கும் இடையே பகை உண்டாகிறது.

இதையடுத்து கஞ்சா கடத்தியதாக இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார் ரிச்சர்ட். பின் அவரிடமிருந்து நழுவ முயலும் அந்த இளைஞர்கள் வாகன விபத்தில் சிக்கியதால், அதில் ஒரு இளைஞர் இறந்து விடுகிறார். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் தான், அவரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து, அவரது மரணத்துக்கு ரிச்சர்ட் காரணமாகிவிட்டதாக சர்ச்சை எழுகிறது.

இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலையிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் ரிச்சர்ட், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதையடுத்து ரிச்சர்ட் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? இல்லையா? இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

மதிப்புரைகள்[தொகு]

பிபிசி நியூஸ் தமிழ் கூறுகையில், "இளைஞர்களின் போதை பழக்கத்தை மையமாக வைத்து மோகன் ஜி கதையை உருவாக்கியுள்ளார். ஆனால் அதை மட்டும் வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிப்பது உற்சாகமாக இருக்காது என்பதால், அவர் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட தகவல்களை தொகுத்து திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மோகன் ஜி மேலோட்டமான தகவல்களைக் கொண்டு தொடர்ந்து சமூகத்தின் சில பிரிவுகளை மோசமாக சித்தரிக்கிறார். அது அவரது பலம் என்று அவர் நினைப்பது துரதிர்ஷ்டவசமானது".[8]

சினிமா விகடன் சொன்னது "திரைப்படம் பேசும் அரசியலில் தெளிவு இல்லை. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டத்தை இயக்குநர் ஒரு பெரிய பிரச்சனையாகக் காட்டுகிறார். வெட்கக்கேடான கொலைகளும் சாதி வெறியும் தினசரி நடக்கும் போதும், ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கேள்வி கேட்பது ஒரு விஷ பிரச்சாரம் ஆகும். இந்த வகையான படங்கள் [[வாஸ்டாப் அனுப்பிய செய்திகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Richard Rishi in a political crime thriller". The Times of India (in ஆங்கிலம்). 2021-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Release date of Rudra Thandavam announced". CinemaExpress.com (in ஆங்கிலம்). 2021-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Rudra Thandavam: New age propaganda films promoting caste pride in Tamil cinema". The News Minute (in ஆங்கிலம்). 27 August 2021. 2021-08-31 அன்று பார்க்கப்பட்டது.
  4. https://www.thenewsminute.com/article/gautham-menon-roped-important-role-rudra-thandavam-143472. Missing or empty |title= (உதவி)
  5. "'Rudra Thandavam' trailer: Richard as cop battles against drug trafficking". The Times of India (in ஆங்கிலம்). 2021-08-27 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Rudra Thandavam: Trailer For Richard Rishi, Gautham Menon Starrer Is Jibes Galore". Movie Crow (in ஆங்கிலம்). 2021-08-31 அன்று பார்க்கப்பட்டது.
  7. "வெளியானது மோகன் ஜி-யின் 'ருத்ரதாண்டவம்' ட்ரைலர்". Nakkheeran. 24 August 2021. 2021-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  8. "பிபிசி திரை விமர்சனம்".
  9. டீம், விகடன். "வாட்ஸ்அப் பார்வேர்டுகளும், மோகன்ஜி கம்பி கட்டும் கதைகளும்! `ருத்ர தாண்டவம்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!". www.vikatan.com/. 2021-10-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]