உருத்திராட்சம்
இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. |
உருத்திராக்கம் (Elacocarpus Ganitrus Roxb, Rudraksha) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன.[1] இந்த விதைகளை சைவர்கள் சிவசின்னங்களில் ஒன்றாக கருதுகின்றனர். இவை இந்துக்கள், சைவர்கள் மற்றும் பௌத்தர்களால் ஜெபமாலைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. [2]
இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. நேபாளத்தில் அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன. இதநன் பழங்கள் பழுத்தவுடன், ருத்ராட்சக் கற்கள் நீல நிற வெளிப்புறப் பழத்தால் மூடப்பட்டிருக்கும், எனவே அவை சில நேரங்களில் "புளுபெர்ரி மணிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
உருத்திராக்கம் பெயர் காரணம்
[தொகு]
உருத்திராட்சம் என்பது உருத்திர + அட்சம். ருத்ரன் என்றால் சிவன், அட்சம் என்றால் கண். [3] சிவபெருமானின் கண்ணிலிருந்து தோன்றிய கண்ணீரைக் குறிக்கிறது. சிவபுராணம் நூல் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என கூறுகிறது.
உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. இவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன என்பது நம்பிக்கையாகும்.
வேறு பெயர்கள்
[தொகு]கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி, தெள்தொளி, சிவமணி, அக்கமணி, நாயகன் விழிமணி என்பன மறு பெயர்கள் ஆகும். [3]
இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை. கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே. கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும்.
- கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
- கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை.
மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.
வகைகள்
[தொகு]
ருத்ராட்சம் அதன் முக எண்ணிக்கை, அளவு கொண்டு வகை செய்யப்படுகிறது. ஒரு முக ருத்ராட்சம், இரு முக ருத்ராட்சம் என பல வகை முக ருத்ராட்சங்கள் உள்ளன. அரிதாக ஒட்டிக் கிடைக்கும் இரட்டை ருத்ராட்சம் கௌரி சங்கர் ருத்ராட்சம் என்றழைக்கப்படுகிறது. [3]

உருத்திராக்கம் குறித்த சில பாடல் கருத்துக்கள்
[தொகு]- "தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" - திருப்புகழ் 475
- அள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அகு.
- வெள் --> வெள்கு -->வெகு = விரும்பு, மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.
- அகு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
- "உருப்புலக்கை அணிந்தவர் " - திருவானைக் கோச் செங். 4
- அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
- விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.
மந்திரமும் எண்ணும்
[தொகு]- "ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,
- தற்புற மந்திரத்தால் ' செவியொன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;
- கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;
- உரத்தில் [மார்பில்] 49 அணிக;
- தோள்களில் 16ம் அணிக ;
- மதரத்து 12 ம் அணிக;
- பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்
- மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;
- இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]
மணி அளவு
[தொகு]பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
- நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;
- இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
- கடலை அளவுடையது அதமம்.
இதனைப் பின்வரும் வெண்பா ;
- "உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
- மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
- இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
- பாசவிதம் பாற்ற நினைப் பார். "
செபமாலைக்குரிய மணிகள்
[தொகு]இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.
இதனைக் கூறும் பாடல்:
- இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
- இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே
- பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
- மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
செபத்துக்குரிய விரல்
[தொகு]அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . [அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.]
சிவ புண்ணியம்
[தொகு]சிவபக்தருக்குக் உருத்திராக்க தானம் செய்வது சிறப்புடையது. உருத்திராக்கம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம். [6]
அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். தன் பொருள் "மும்மை " என்பது உருத்திராக்கம், ஜடை, திருநீறு .இந்த மூன்றையே உண்மைப் பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.
உருத்திராக்க விதானம்
[தொகு]பல்லவ அரசன் பரமேசுவரவர்மன் மகாபலிபுரத்தில் 'கணேசர்' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்துள்ளார். இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது.
கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் உத்திராட்சம் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.
உசாத்துணை
[தொகு]- ↑ Bhattacharyya, Bharati (2015). Golden Greens: The Amazing World of Plants (in ஆங்கிலம்). The Energy and Resources Institute (TERI). pp. 21–25. ISBN 978-81-7993-441-8.
- ↑ Singh, B; Chopra, A; Ishar, MP; Sharma, A; Raj, T (2010). "Pharmacognostic and antifungal investigations of Elaeocarpus ganitrus (Rudrakasha)". Indian J Pharm Sci 72 (2): 261–5. doi:10.4103/0250-474X.65021. பப்மெட்:20838538.
- ↑ 3.0 3.1 3.2 "ருத்ராட்சம் என்னும் மாமருந்து!". Hindu Tamil Thisai. 3 டிச., 2016.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ Meet, Vedic (2024-01-19). "20 Reasons why you need Panch Mukhi Rudraksh in 2024". Vedic Meet (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-15.
- ↑ For the five-division type as signifying Shiva's five faces and terminology pañcānana, see: Stutley, p. 119.
- ↑ உருத்திராக்க விசிட்டம் - சிதம்பரம் மறையான சம்பந்தர்- திருவாடுவடுதுறை ஆதீனம் 1954- வெளியீடு.