ருத்ரஹ்ருதய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ருத்ரஹ்ருதய உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 86வது உபநிஷத்து. 52 சுலோகங்கள் கொண்ட ஒரு சிறிய உபநிஷத்து. சுகருக்கு வியாசர் அருளிச்செய்தது.

கருத்துரை[தொகு]

எல்லா தேவர்களிடமும் எந்த தேவர் இருக்கிறார்? எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள்? மகன் சுகரின் இக்கேள்விகளுக்கு விடையாக தந்தை வியாசர் பகர்ந்தது தான் இவ்வுபநிஷத்து.

எல்லா தேவர்களும் சிவ உருவத்தில் அடக்கம். உமாவும் ருத்ரரும் இணைந்த வடிவம் தான் எல்லா உலக மக்களும், அசைவனவும் அசையாததுமாகிய இவ்வுலகமும். அந்த சிவ உருவமே இரண்டற்ற பரப்பிரம்மம். அனைத்துலகிற்கும் ஆதாரம். அது அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாகும்.

எவன் அங்ஙனம் பரப்பிரம்மத்தை அறிந்தவனோ அவன் தன்னிடம் விளங்கும் சச்சிதானந்த வடிவான பிரம்மமாகவே விளங்குவான்.

உபநிஷத்துப் பொன்மொழிகள்[தொகு]

எவர்கள் கோவிந்தரை வணங்குகிறார்களோ அவர்கள் சங்கரரை வணங்குபவராவர். எவர்கள் பக்தியுடன் ஹரியைப் பூஜிக்கிறார்களோ அவர்கள் காளைக்கொடியுடையனான ருத்ரரைப் பூஜிக்கிறார்கள். (6)

ஆண் வடிவமெல்லாம் சிவன். பெண் வடிவலெல்லாம் பகவதி உமாதேவி. (9)

வெளிப்படையான எல்லாம் உமாரூபம். வெளிப்படையாக இல்லாதது மகேசுவரர். உமாவும் சங்கரரும் இணைந்த வடிவம் மகாவிஷ்ணு.(10)

ஓம்காரம் வில், ஆன்மா அம்பு, மற்றும் பிரம்மம் குறிக்கோள் எனப்படுகின்றன. (38).

குடத்தின் வெளிக்கும் வெளியிலிருக்கும் வெளிக்கும் வேறுபாடு எங்ஙனம் கற்பனையோ அவ்விதமே ஈசனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு கற்பனையே.(43).

துணை நூல்கள்[தொகு]

  • S. Radhakrishnan.The Principal Upanishads.1969. George Allen & Unwin Ltd. London. SBN 04 294047 8
  • "அண்ணா". உபநிஷத்ஸாரம். 1989 ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்ரஹ்ருதய_உபநிடதம்&oldid=1762081" இலிருந்து மீள்விக்கப்பட்டது