ருச்சி நாராயண்
ருச்சி நாராயண் (Ruchi Narain) ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர்]] மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கல்: எஸ்டர்டே அன்ட் டுமாரோ (2005), ஹனுமான்: டா தம்தார் (2017) மற்றும் நெற்ஃபிளிக்சின் அசல் திரைப்படமான கில்டி (2020) போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இவரது குடும்பம் புது தில்லியைச் சேர்ந்தது.. இருப்பினும், இவர் ஒருபோதும் அங்கு வசிக்கவில்லை. இவர் தனது ஆரம்ப ஆண்டுகளை கொல்கத்தா, துபாய், இலங்கை மற்றும் ஓமானின் மஸ்கட் ஆகிய இடங்களில் கழித்தார். அங்கு இவர் சுல்தான் பள்ளி, உட்ஸ்டாக் பள்ளி மற்றும் கத்தார் ஆகியவற்றில் பயின்றார். இவர் கல்லூரிக் கல்விகாக மும்பைக்கு குடிபெயர்ந்தார், அன்றிலிருந்து அங்கு வசித்து வருகிறார்.
தொழில்
[தொகு]இஸ் ராத் கி சுபா நஹீன் (1996) என்ற படத்தில் சுதிர் மிஸ்ராவின் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, இணை இயக்குனர், இரண்டாம் பிரிவு இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருந்தார். ஹசாரோன் குவைஷெய்ன் ஐசி படத்தைத் தொகுத்தார். இதற்காக இவர் சிறந்த கதை பிலிம்பேர் விருது, ஜீ சினி விருது மற்றும் ஸ்டார் ஸ்கிரீன் விருது போன்றவற்றை வென்றார். இது 1970-களில் இந்தியாவின் அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு காதல் கதை.
இவர் கல்: எஸ்டர்டே அன்ட் டொமாரோ என்ற படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இவருக்கு ஓசியானின் சினிஃபேன் திரைப்பட விழா விமர்சகர்கள் விருதையும் வென்றது.[1] இவர் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்கியதன் மூலமும், 14 முதலீட்டாளர்களைக் கொண்ட கூட்டமைப்பை ஒன்றிணைப்பதன் மூலமும் இப் படத்திற்கான நிதியை திரட்டினார்.
அதைத் தொடர்ந்து, அசுதோஷ் ஷா மற்றும் தாஹர் ஷபீர் ஆகிய இரண்டு கூட்டாளர்களுடன் ஆர்.ஏ.டி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இது பல்வேறு தயாரிப்புகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களைச் செய்துள்ளது. இதைத்தவிர ஹனுமான்: டா தம்தார் (2017) என்ற இயங்குபடத்தைத் தயாரித்துள்ளார். சல்மான் கான் ரவீணா டாண்டன், ஜாவேத் அக்தர், குணால் கெமு, வினய் பதக், சங்கி பாண்டே, சவுரப் சுக்லா]] மற்றும் மக்ரந்த் தேஷ்பாண்டே போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்திற்கு பின்னணி குரல் அளித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய இயங்குபடம் இதுவாகும்.
இவரது இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்த கில்டி (2020) திரைப்படம் நெற்ஃபிளிக்ஸில்[[2] நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இது தில்லியின் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மி டு இயக்கத்தின் போது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டை மையமாகக் கொண்டுள்ளது.
இவரும் அவரது கூட்டாளர்களும் உருவாக்கி, எழுதி தயாரித்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 2020 ஆம் ஆண்டின் ஹண்ட்ரெட் என்றா நகைச்சுவைத் தொடரின் இயக்குனராகவும் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நரேன் தனது மகள் வீராவின் ஒற்றைத் தாயார் ஆவார். இவர் 2019-இல் அவரைத் தத்தெடுத்தார்.[3]
விருதுகள்
[தொகு]- பிலிம்பேர் விருது
- சிறந்த கதையாசிரியருக்கான பிலிம்பேர் விருது: ஹசாரோன் குவைஷெய்ன் ஐசி[4]
- ஆசிய மற்றும் அரபு சினிமா விமர்சகர்களின் ஓசியன் சினிஃபான் திரைப்பட விழா விருது
- வைல்ட்ஸ்கிரீன் விருதுகள் 2008 இல் பிங்க் ஃபைனலிஸ்டில்
- வைல்ட்ஸ்கிரீன் விருதுகள் 2008 இல் கடைசி நடன இறுதிப் போட்டியாளர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tomorrow full of promise". Business Line. 30 September 2005. http://www.thehindubusinessline.com/life/2005/09/30/stories/2005093000170400.htm.
- ↑ Diksha Madhok. "Netflix and Amazon gave daring Indian filmmakers hope. Now that's turning to fear". CNN. Retrieved 2021-04-06.
- ↑ "Filmmaker and single mum Ruchi Narain discusses how adopting her four-year-old daughter made her the woman she is today". Vogue India (in Indian English). 2021-01-25. Retrieved 2021-04-06.
- ↑ Awards IMDb.
வெளி இணைப்புகள்
[தொகு]