ருசிரா பாண்டா
| ருசிரா பாண்டா | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 21 அக்டோபர் 1975 தேவ்கர், ஜார்கண்ட் |
| பிறப்பிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
| இசை வடிவங்கள் | இந்துத்தானி இசை |
| தொழில்(கள்) | இசைக் கலைஞர், இசையமைப்பாளர், வள்ளல் |
| இசைத்துறையில் | 1994–இன்று வரை |
| இணையதளம் | ruchirapanda |
ருசிரா பாண்டா [1] (வங்காளம்: রুচিরা পাণ্ডা; பிறப்பு: 21 அக்டோபர் 1975) வடஇந்திய செவ்வியல் வாய்ப்பாட்டுக் கலைஞரும், பண்டிட் மனசு சக்கரபர்த்தி அவர்களின் சீடருமாவார். தற்போது கோட்டாலி கரானா மரபின் முக்கிய வாரிசாக விளங்குகிறார்.[2][3][4][5][6][7]
கயால், தும்ரி, தப்பா, தப்-கயால், நிர்குணி பஜன் உள்ளிட்ட வடஇந்திய அரைச் செவ்வியல் இசை வடிவங்களிலும், ஜூலா, பிர்ஹா, சைதி, கஜ்ரி, பட்ஜார், ஜாட் கே கீத், பசார் கே கீத் போன்ற பல இசை வடிவங்களிலும் சிறந்து விளங்குபவரவார்.[8] இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் நடைபெறும் முக்கிய இந்திய செவ்வியல் இசை விழாக்களில் தனிப்பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்.[9][10][11]
பாண்டா, இந்திய பண்பாட்டு உறவுகள் பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகவும், ஸ்பிக் மெக்காய் அமைப்பின் கலைஞராகவும், இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வாளராகவும், அகில இந்திய வானொலியின் "முதல்" தரக் கலைஞராகவும் உள்ளார்.[12][13][14]
கல்வி
[தொகு]பாண்டா, கொல்கத்தாவில் உள்ள ஹோலி குழந்தைகள் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் சீமாட்டி பிராபர்ன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, ஜாதவ்பூர் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ruchira Panda". SwarGanga Music Foundation. Retrieved 30 January 2019.
- ↑ "Kotali Gharana". 20 August 2011. Retrieved 30 January 2019.
- ↑ "The master with a nose for music". The Telegraph Online Edition. 29 March 2009. Retrieved 30 January 2019.
- ↑ "The Great Heritage". Biswabrata Chakrabarti. 30 January 2019.
- ↑ "SaMaPa festival to blend styles". 19 November 2019.
- ↑ "Tribute to Late Pt AT Kanan". 17 February 2020.
- ↑ "A treat for music lovers". 18 December 2017.
- ↑ "TEDx Talks". YouTube. 3 January 2020.
- ↑ "YALE MACMILLAN CENTER". 28 September 2019.
- ↑ "Asian Magazine TV". YouTube. 5 October 2015.
- ↑ "Jashn-E-Deccan 2017: Interview with Smt. Ruchira Panda". YouTube. 20 June 2018.
- ↑ "TED.com". 6 December 2019.
- ↑ Madhira, Harini (2017-12-18). "A treat for music lovers". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-11-23.
- ↑ Khanna, Shailaja (2019-11-19). "SaMaPa festival to blend styles". The Asian Age. Retrieved 2020-11-23.