ரீமா லாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரீமா லாகு
Reema Lagoo (13th Nov 2015).jpg
2015இல் ரீமா லாகு
பிறப்புநயன் பத்பதே
சூன் 21, 1958(1958-06-21) [1]
மும்பை, மாம்பே ஸ்டேட், இந்தியா
இறப்பு18 மே 2017(2017-05-18) (அகவை 58)
மும்பை, மகாராட்டிரம், இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ரிமா
பணிநடிகர், விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979–2017
வாழ்க்கைத்
துணை
விவேக் லாகு (விவாகரத்து)
பிள்ளைகள்1

ரீமா லாகு (Reema Lagoo) நயன் பத்பதே என்ற இயற்பெயருடன்[2]) 1958 ஜூன் 21 அன்று பிறந்து 2017 மே 18 அன்று இறந்த இவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரை நடிகை ஆவார்[3] இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மராத்தி நாடக அரங்கிலலும் நடித்துள்ளார்.[4], 1990 களில் மற்றும் 2000 களின் முற்பகுதியில் தாயார் கதாபாத்திரங்களில் நடித்ததற்காக பெயர் பெற்றார்.

தொழில்[தொகு]

லாகுவின் நடிப்பு வாழ்க்கை மராத்திய நாடக நடிகை மற்றும் திரைப்பட நடிகையாக இருந்த அவரது தாயாரின் தாக்கத்தினால் ஏற்பட்டது. துர்கா கோட் இயக்கிய மாஸ்டர்ஜி உட்பட ஐந்து படங்களில் அவர் நடித்தார் குழந்தைக் கலைஞராக நீண்ட காலமாக நடித்து வந்த ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வாழ்க்கை மராத்தி நாடக அரங்கில் தொடர்ந்தது. அவர் மும்பை வந்து, பி..எல். தேஷ்பாண்டேவின் நாடகமான மை ஃபேர் லேடியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார்.[5] இருப்பினும், அவர் தொலைக்காட்சித் தொடர்கள், இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார். 1979 ஆம் ஆண்டில் அவர் மராத்தி திரைப்படமான சின்ஹசன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

திரைப்படம்[தொகு]

இந்தித் திரைப்பட துறையில் முன்னணி நடிகைகளுக்கு தாயாக அவர் நடிக்கிறார். இந்தி திரைப்படமான கயாமத் சே கயமத் தக் (1988) என்ற படத்தில் பிர்பல நடிகையான ஜூஹி சாவ்லாவிற்கு தாயாக முதன்முறையாக நடித்தார். மிகவும் பிரபலமாக, பாலிவுட் தொழில்துறையில் மிகப்பெரிய வெற்றிகளில் அவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பெரும்பாலும் நடுத்தர வயதான பாத்திரத்தில் நடித்துள்ள போதிலும், அவர் மற்ற வேடங்களிலும் நடித்தார்.

தொலைக்காட்சி[தொகு]

இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மிகவும் வெற்றிகரமாக ஒரு தொலைக்காட்சி நடிகராக லாகு நடித்திருந்தார்

சொந்த வாழ்க்கை[தொகு]

ரீமா லாகு 1958 ஜூன்21 அன்று ந்யன் பத்பதே என்ற இயற்பெயருடன் பிறந்துள்ளார்.[2] Her mother was Marathi stage actress இவரது தாயார் மந்தாகினி பத்பதே என்பவரும் ஒரு மராத்தி நாடக நடிகையாவார்.[6] புனே ஹுஸூர்பாஹா உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவராக இருந்தபோதே லாகுவின் நடிப்பு திறமைகள் வெளிப்பட்டன..[7] அவர் உயர்நிலைக்கல்வி முடிந்தபின் தொழில் ரீதியாக நடிக்க ஆரம்பித்தார். 1979 ஆம் ஆண்டு முதல், மும்பையில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கியில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தோன்றிக்கொண்டே, அவர் வங்கிக் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.[8] 1976 ஆம் ஆண்டில் வங்கி மற்றும் மேடை நாடக நடிகரான விவேக் லாகுவை சந்தித்து 1978 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[9] திருமணத்தின் போது, அவர் ரீமா லாகு என தனது பெயரை மாற்றிக் கொண்டார். விவேக் அவரது திருமணத்தை "எங்கள் வாழ்வை மறுகட்டமைப்பதற்கான ஒரு புரிதல்" என்று விவரித்தார், பின்னர் அவர்கள் விவாகரத்து செய்தனர். தம்பதியின் மகள் மவுன்மயி ஒரு நடிகை மற்றும் நாடக இயக்குனர் ஆவார்.[10][11][12]

இறப்பு[தொகு]

ரீமா லாகு நாம்கர்ன் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது 2017 மே17 அன்று இரவு 7 மணிக்கு இதயவலி ஏற்பட்டு பின்னர் அந்த இரவு மும்பை [1] கேகில்பென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.[13] மரணத்தின் போது, அவர் தனக்கு எல்லாம் நன்றாகப்போகிறது என்றும் தனக்கு சுகாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை" என்றும் விவரித்தார்.[14][15] மும்பையில் ஓஷ்வார்ரா என்ற இடத்தில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்த்தப்பட்டது[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Birthday celebrations make Reema Lagoo awkward". The Times of India. பார்த்த நாள் 18 May 2018.
 2. 2.0 2.1 "Reema Lagoo dead after suffering cardiac arrest, she was 59". Indian Express. 18 May 2017. http://indianexpress.com/article/entertainment/bollywood/reema-lagoo-dead-after-cardiac-arrest-reema-lagoo-dead-4661509/. பார்த்த நாள்: 18 May 2017. 
 3. "Remma Lagoo's Popular Works, as we remember the Senior Actress". ChaaiPani. பார்த்த நாள் 18 May 2017.
 4. "Game for negative shades" (23 September 2016). பார்த்த நாள் 18 May 2017.
 5. "Waiting For The Complete Role". indiatimes.com. மூல முகவரியிலிருந்து 19 August 2000 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 November 2018.
 6. "ज्येष्ठ अभिनेत्री मंदाकिनी भडभडे यांचे निधन" (Marathi). Sakal (3 May 2011). பார்த்த நாள் 9 Jan 2012. "ज्येष्ठ अभिनेत्री रिमा लागू यांच्या त्या मातोश्री होत."
 7. "फोटो आणि रिमा लागूंची पुण्यातली एक आठवण" (Marathi). Zee News (18 May 2017). பார்த்த நாள் 18 May 2017. "ज्येष्ठ अभिनेत्री रिमा लागू १९७० ते १९७४ या कालावधीत हुजुरपागा शाळेत शिकत होत्या"
 8. "Reema Lagoo dead, filmdom remembers its fond 'Ma' (Third Lead)". Indo-Asian News Service (Business Standard). 18 May 2017. http://www.business-standard.com/article/news-ians/reema-lagoo-dead-filmdom-remembers-its-fond-ma-third-lead-117051801200_1.html. பார்த்த நாள்: 20 May 2017. 
 9. "Reema Lagoo's Ex-Husband Vivek Talks: We Thought It's Acidity. She Started Snoring. And Suddenly... It Was All Over!". Spotbye.com. in.style.yahoo.com. மூல முகவரியிலிருந்து 3 June 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 June 2017.
 10. "Hello Direction!". பார்த்த நாள் 9 Jan 2012.
 11. "Reema Lagoo's Daughter, Mrunmayee Turns Theatre Director". மூல முகவரியிலிருந்து 15 April 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 November 2008.
 12. "BOLLYWOOD VETERAN ACTRESS REEMA LAGOO PASSES AWAY AFTER CARDIAC ARREST". Mumbai Mirror. மூல முகவரியிலிருந்து 18 May 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 May 2017.
 13. "Popular TV actress Reema Lagoo dies of cardiac arrest at 59". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/popular-tv-actrhiess-reema-lagoo-dies-of-cardiac-arrest-at-59/articleshow/58727760.cms. பார்த்த நாள்: 8 July 2017. 
 14. "Actor Reema Lagoo passes away". The Hindu. 18 May 2017. http://www.thehindu.com/entertainment/actress-reema-lagoo-passes-away/article18478738.ece. பார்த்த நாள்: 18 May 2017. 
 15. "Reema Lagoo: Bollywood's 'favourite mother' dies" (in en-GB). BBC News. 2017-05-18. https://www.bbc.co.uk/news/39958153. 
 16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Actor Reema Lagoo passes away என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_லாகு&oldid=2812282" இருந்து மீள்விக்கப்பட்டது