ரீட்டா ரத்நாயக்கே
ரீட்டா ரத்நாயகே | |
|---|---|
| රීටා රත්නායක | |
| தாய்மொழியில் பெயர் | රීටා රත්නායක |
| பிறப்பு | ரீட்டா பிலோமினா ரத்நாயகே பெப்ரவரி 18, 1934 மாத்தளை, இலங்கை |
| இறப்பு | நவம்பர் 6, 2006 (அகவை 72) கொழும்பு |
| கல்வி | புனித ஆக்னசு கல்லூரி, மாத்தளை |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1953–1988 |
| தந்தை | எமில் ரத்நாயகே |
| வாழ்க்கைத் துணை | டபிள்யூ. ஏ. வில்ஃபிரட் சில்வா (திருமணம் 1961) |
| பிள்ளைகள் | 2 |
ரீட்டா ரத்நாயக்கே (Rita Ratnayake)(ரீட்டா பிலோமினா ரத்நாயகே) (18 பிப்ரவரி 1934 – 6 நவம்பர் 2006) என்பவர் இலங்கைத் திரைப்படத்துறையில் ஒரு நடிகை ஆவாா்.[1] இவர் 1950இக்கள், 1960இக்கள் மற்றும் 1970இக்களின் ஆரம்பகால சிங்களத் திரைப்படங்களில், குறிப்பாக 1953இல் வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான 'கெலே ஹண்டா'வில் 'டெய்ஸி அத்தநாயக்க' என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1934ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பிறந்தார். இவரது தந்தை எமில் ரத்நாயக்க ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞா் ஆவார்.[3] இவர் தனது தாயின் சொந்த ஊரான மாத்தளையில் வளர்ந்து, மாத்தளையில் உள்ள புனித ஆக்னசு கல்லூரியில் (தற்போது புனித தோமசு பெண்கள் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது) கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்தில், இவர் 'தசுகோன்' என்ற மேடை நாடகத்தில் 'ராணி பிரமீளா' பாத்திரத்தில் நடித்தார். ஒரு பள்ளிப் பாடகியாகவும் அறியப்பட்ட அவர், 'கோ மம நந்தகே மாலே' என்ற பாடலைப் பாடியதற்காக மாத்தளை மாணவர்களிடையே பிரபலமானார். ரீட்டா சில காலம் இலங்கை தங்குமிடம் கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றினார்.[2]
ரீட்டா, டபிள்யூ.ஏ. வில்ஃபிரட் சில்வாவை பெப்ரவரி 18, 1960 அன்று திருமணம் செய்து கொண்டார். வில்ஃபிரட் ஒரு பாடலாசிரியர், கதைசொல்லி மற்றும் திரைப்பட இயக்குநராக நன்கு அறியப்பட்டவர். இந்தத் தம்பதியருக்கு சாதனா மற்றும் பந்துலா என்ற பெயரில் ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தனர். பிற்காலத்தில், இவர் ஒரு வேலைக்காக பிரான்சு சென்றார்.[2]
சிலுமின 'ரசதுன' செய்தித்தாளிலிருந்து கௌரவப் பரிசைப் பெற்ற இதே நாளில், 2006 நவம்பர் 6 அன்று ஜெயவர்தனபுர மருத்துவமனையில் இவர் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 72 வயது.[4] இவரது கடைசி வேண்டுகோளின்படி, இவரது தாயார் அடக்கம் செய்யப்பட்ட மாத்தளை மயானத்தில் இவரும் அடக்கம் செய்யப்பட்டார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் கலைத்துறையில் ஈடுபடுவதற்முன், இவரது இரண்டு மாமாக்கள் மேடை நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். இவர் ருக்மணி தேவியின் தீவிர ரசிகையாக இருந்தார், சிறுவயதிலிருந்தே இவரது எல்லா திரைப்படங்களையும் பார்த்தார், மேலும் ருக்மணி தேவியைப் பார்க்கவும் விரும்பினார். பிரபலமான நடிகை கிளாரிஸ் டி சில்வா இவரது நெருங்கிய தோழியாக இருந்தார்.[3]
1952இல் மது தேவாலயத்திற்கு புனித யாத்திரை சென்றபோது, திரைப்பட நடிகர்களான பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னே, ருக்மணி தேவி மற்றும் எட்டி ஜெயமன்னே ஆகியோரைச் சந்தித்தபோது ரத்நாயக்க முதன்முதலில் கவனிக்கப்பட்டார். இந்தச் சந்திப்பு இவரை 'கெலே ஹண்டா' திரைப்படத்தில் நடிக்க வைத்தது. 16 வயதான ரீட்டா, 'டெய்ஸி அத்தநாயக்க' என்ற வயது வந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது சிங்கள உச்சரிப்பு சரியாக இல்லை என்று பலர் கூறி, இவருக்கு சுமார் 6 மாதங்கள் பயிற்சி அளித்தனர்.[3] 'கெலே ஹண்டா' படத்திற்குப் பிறகு, ரீட்டா ஒரு அப்பாவி காதலியின் பாத்திரத்தில் நடித்தார். இவரது நடிப்புத் திறமையைக் கண்டு, கே. குணரத்தினம் 1954இல் வரத ககேடா திரைப்படத்தில் ரீட்டாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். பின்னர் இவர் ராம்யலதா (1956)இல் 'பிரபாவதி' பாத்திரத்தில் நடித்தார் மற்றும் ரடல பிலிருவா (1954), சுகுமாலி (1957) மற்றும் சிதக மஹிமா (1964) ஆகியவற்றில் முக்கிய வேடங்களில் நடித்தார்.[4]
அடுத்த 20 ஆண்டுகளில், ரத்நாயக்க, சுனீதா, செபாலி (1958), சுந்தர பிரிந்தா (1960), தருவா ககேதா (1961), சுஹதா சொஹோயுரோ (1963), சுபா சரண செபா சித்தே (1964), ஸ்வீப் டிக்கெட், சகாயா (1965), எதுஹான் அமௌகா (1965), எதுஹான் அமௌகா (1965), ஆகிய படங்களில் நடித்தார். (1967), டான் மாதகட (1970), சுஹதா பெத்துமா (1973), ஷீலா, சாந்தி, ஒன்னா பாபோ பில்லோ எனவா (1974), அவ சோயா அடாரே (1975), ஹரத ஹதர, தேவியங்கே தீந்துவா (1976), ஹிதுவோத் ஹிதுவாமை, எச்7 ரண்தா, எச் 9 ரன்தா (1979), தயாபர நிலு (1981), சமவென்ன (1981), வத்துர கரத்தய (1982), ரெயில் பரா (1982), போனிக்கா (1983), ஷிரானி, கோகில, நமல் ரேணு (1984) மற்றும் வன ரெஜினா (1988) ஆகிய படங்களில் நடித்தாா்.[4][5]
இவர் சக நடிகரான அசோக பொன்னம்பெருமாவுடன் நிறைய படங்களில் பெரும்பாலும் இவரது மனைவியாக நடித்தார். 1966ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது ஐக்கிய இலங்கை ரசிகர் சங்க விருது விழாவில், சிதக மஹிமா திரைப்படத்திற்காக ரீட்டா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 1985ஆம் ஆண்டு நடைபெற்ற சரசவியா விருது விழாவில், சிதக மஹிமா படத்திற்காக இவர் தகுதி விருதை வென்றார்.<ref name="sarasaviya" / 1997ஆம் ஆண்டு, 11ஆவது குடியரசுத்தலைவா் விருது விழாவில் "ஸ்வர்ண ஜெயந்தி" விருதை வென்றார். பின்னர் 1998ஆம் ஆண்டு, 25ஆவது சரசவியா விருது விழாவில் "நமஸ்கார பூஜை" சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் இவர் 'கஹலா நடயா' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actresses in Sinhala Cinema: Rita Rathnayake". Digital Identity of Sinhala Cinema. Archived from the original on 2021-02-08. Retrieved 2021-02-13.
- 1 2 3 4 "Here is Daisy Attanayake of Kele Handa". Sarasaviya. Retrieved 2021-02-13.
- 1 2 3 "Rita loses Lester's Rekava". Divaina. Archived from the original on 2019-09-08. Retrieved 2021-02-13.
- 1 2 3 Uvais, Ramesh (November 9, 2006). "Rita Ratnayake bids farewell to nation". Daily Mirror.
- ↑ "Farewell lovers of Sinhala cinema". lifie. Archived from the original on 2024-05-26. Retrieved 2021-02-13.