உள்ளடக்கத்துக்குச் செல்

ரீட்டா கோத்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீட்டா கோத்தாரி
ரீட்டா கோத்தாரி, டிசம்பர் 2017
ரீட்டா கோத்தாரி, டிசம்பர் 2017
பிறப்பு30 சூலை 1969 (1969-07-30) (அகவை 57)
குஜராத்
தொழில்ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்புக் கோட்பாட்டாளர், பேராசிரியர்
மொழிகுஜராத்தி, ஆங்கிலம், சிந்தி
கல்வி நிலையம்
  • குஜராத் பல்கலைக்கழகம்
  • புனே பல்கலைக்கழகம் (சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • Translating India (2003)
  • The Burden of Refuge: The Sindhi Hindus of Gujarat (2007)
  • Unbordered Memories (2009)
  • Uneasy Translations (2022)
கல்விப் பின்னணி
ஆய்வுIndian Literature in English Translation: The Social Context (1999)
முனைவர் பட்ட நெறியாளர்சுகுணா ராமநாதன்
கல்விப் பணி
இணையதளம்
ittgn.academia.edu/RitaKothari

ரீட்டா கோத்தாரி(Rita Kothari) (பிறப்பு: 30 ஜூலை 1969) குஜராத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அறிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டாளர் ஆவார். சிந்தி இனத்தைச் சேர்ந்தவராகத் தனது அடையாளத்தையும் நினைவுகளையும் பாதுகாக்கும் முயற்சியாக, இந்தியப் பிரிவினை மற்றும் அதனால் மக்கள் மீது ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து கோத்தாரி பல நூல்களை எழுதியுள்ளார். இவர் பல குஜராத்தி படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

கோத்தாரி 1989-இல் அகமதாபாத்தில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டப்படிப்பை முடித்தார்; அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து புனே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை (M.A.) பட்டத்தைப் பெற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் படித்தார். The Cultural Politics of English' ஆகிய தலைப்புகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளுக்காக, 1995-இல் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்தையும், 2000-இல் முனைவர் (Ph.D.) பட்டத்தையும் பெற்றார்.[1]

கோத்தாரி சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் கற்பித்து வருகிறார். இவர் 2007 முதல் 2017 வரை காந்திநகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் பணியாற்றினார்.[2] 1992 முதல் 2007 வரை அகமதாபாத்தில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் ஆங்கிலத்திலான இந்திய இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய பாடங்களைக் கற்பித்தார்.[3] அதனைத் தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் பேராசிரியராக MICA நிறுவனத்தில் இணைந்தார்.

இலக்கியம், திரைப்படம், இனவரைவியல் , கலாச்சார வரலாறு ஆகியவை கோத்தாரியின் கற்பித்தல் ஆர்வத்திற்குரிய துறைகளாகும். மொழிகள், சூழல்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான நகர்வுகள் இவரது ஆர்வத்தின் மையமாக உள்ளன; இதனால், இந்தியச் சூழலை அணுகுவதற்கான ஒர் கண்ணாடியாக மொழிபெயர்ப்பை இவர் கருதுகிறார்.[4]

இவர் அகமதாபாத்தில் வசிக்கிறார்.[5]

படைப்புகள்

[தொகு]

சிந்தி இனத்தவராகத் தனது அடையாளத்தையும் நினைவுகளையும் பாதுகாக்கும் முயற்சியாக, கோத்தாரி பின்வரும் நூல்களை எழுதினார்: *Translating India: The Cultural Politics of English* (2003), *The Burden of Refuge: The Sindhi Hindus of Gujarat* (2007), *Unbordered Memories: Partition Stories from Sindh* (2009) மற்றும் *Memories and Movements* (2016).

கோத்தாரி *Modern Gujarati Poetry* மற்றும் *Coral Island: The Poetry of Niranjan Bhagat* ஆகிய நூல்களை இணைந்து மொழிபெயர்த்துள்ளார். இவர் ஜோசப் மக்வானின் குஜராத்தி நாவலான 'அங்கலியாத்' (Angaliayat) என்பதை 'தி ஸ்டெப்சில்ட்' என்றும், இலா மேத்தாவின் 'வாத்' என்பதை 'ஃபென்ஸ்' (Fence - 2015) என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜூடி வகபயாஷியுடன் இணைந்து 'டீசென்டரிங் டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ்: இந்தியா அண்ட் பியான்ட்' (Decentring Translation Studies: India and Beyond - 2009) நூலையும், ரூபர்ட் ஸ்நெல்லுடன் இணைந்து 'சட்னிஃபையிங் இங்கிலிஷ்: தி ஃபினாமினன் ஆஃப் ஹிங்லிஷ்' நூலையும் இவர் தொகுத்தார். 'ஸ்பீச் அண்ட் சைலன்ஸ்: லிட்டரரி ஜர்னீஸ் பை குஜராத்தி விமன்' (Speech and Silence: Literary Journeys by Gujarati Women) என்ற நூலின் தொகுப்பாசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.[6][7][8] தனது கணவர் அபிஜித் கோதாரியுடன் இணைந்து, கே. எம். முன்ஷியின் 'பட்டன்' (Patan) முத்தொகுப்பு நாவல்களையும் இவர் மொழிபெயர்த்தார்: 'பட்டன் நி பிரபுதா' (Patan Ni Prabhuta) - 'தி குளோரி ஆஃப் பட்டன்' (The Glory of Patan - 2017), 'குஜராத் நோ நாத்' (Gujarat No Nath) - 'தி லார்ட் அண்ட் மாஸ்டர் ஆஃப் குஜராத்' (The Lord and Master of Gujarat - 2018)[9][10]மற்றும் 'ராஜாதி-ராஜ்' (Rajadhiraj) - 'கிங் ஆஃப் கிங்ஸ்' (King of Kings - 2019).

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

[தொகு]

ரீட்டா கோத்தாரி (8 ஏப்ரல் 2014). Translating India. Routledge. ISBN 978-1-317-64216-9.

ரீட்டா கோத்தாரி; ரூபர்ட் ஸ்நெல் (2011). Chutnefying English: The Phenomenon of Hinglish. Penguin Books India. ISBN 978-0-14-341639-5.

ரீட்டா கோத்தாரி (1 பிப்ரவரி 2007). The Burden of Refuge: the Sindhi Hindus of Gujarat. Orient Longman. ISBN 978-81-250-3157-4.

ரீட்டா கோத்தாரி (30 செப்டம்பர் 1999). Indian literature in english translation the social context. Gujarat University. hdl:10603/46404.

கோத்தாரி, ரீட்டா, தொகுப்பாசிரியர் (2022). The Greatest Gujarati Stories Ever Told. New Delhi: Aleph Book Company. ISBN 978-93-91047-48-1.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rita Kothari - Indian Institute of Technology Gandhinagar". Academia.edu (in ஆஃப்ரிகான்ஸ்). 2015-08-03. Retrieved 2016-11-24. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Adhyaru-Majithia, Priya (3 February 2013). "Dr Rita Kothari explores Idea of border and trauma of Partition". dna. Archived from the original on 27 November 2015. Retrieved 3 December 2016.
  3. Indian Review of Books. Acme Books Pvt. Limited. 1998. p. 22. Archived from the original on 2016-12-21. Retrieved 2016-12-03.
  4. "Faculty/Staff Ashoka University". Ashoka University (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-11. Retrieved 2018-02-20.
  5. "Faculty/Staff Ashoka University". Ashoka University (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-11. Retrieved 2018-02-20.
  6. "Rita Kothari". The Re:Enlightenment Project. Archived from the original on 2016-11-24. Retrieved 2016-11-24.
  7. "Is Multilingualism a 'new' discovery?, Rita Kothari – Multilingualism". Multilingualism – Boğaziçi University. 2016-03-02. Archived from the original on 2016-11-24. Retrieved 2016-11-24.
  8. "Rita Kothari". Jaipur Literature Festival. 2016-11-04. Archived from the original on 2016-11-24. Retrieved 2016-11-24.
  9. Deb, Sandipan (11 June 2017). "Freedom fighter KM Munshi's first novel is now available in English". India Today. Archived from the original on 27 May 2019. Retrieved 27 May 2019.
  10. Deb, Sandipan (11 June 2017). "Freedom fighter KM Munshi's first novel is now available in English". India Today. Archived from the original on 27 May 2019. Retrieved 27 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_கோத்தாரி&oldid=4613596" இலிருந்து மீள்விக்கப்பட்டது