ரி. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரி. கிருஷ்ணன் ஒரு இலங்கை மெல்லிசைப் பாடகர். அடிப்படையில் இவர் ஒரு பொறியியலாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் தர மெல்லிசைப் பாடகர்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ரி. கிருஷ்ணன் யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியில் பிறந்து மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து 'கதாகலாட்சேபம்' நிகழ்ச்சியினை இலங்கையின் பல பாகங்களில் மேடையேற்றினர். இந்நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்களை இவரே பாடியியருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின் நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'அழகான பாட்டொன்று பாடாய்...' என்ற பாடல் மூலம் மெல்லிசைப் பாடகராக அறிமுகமாகி, புகழ்பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'சந்தனமேடை', 'முற்றத்து மல்லிகை' போன்ற நிகழ்ச்சிகளில் இவரது பல பாடல்கள் நீங்கா இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 'சொல்லத்தான் நானும்' என்ற பாடல் பலரின் வரவேற்பை பெற்றிருந்நது.

பாடிய பாடல்கள்[தொகு]

 • பாடல்: அழகான பாட்டொன்று பாடாய்...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: மாவை நித்தியானந்தன்
 • பாடல்: புத்தொளி படர சித்திரை வருஷம்....
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஸ்வரன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: திருமலை மேலொருநாள் திருமணம் நடந்தது பார்...
 • பாடல்: சித்திரை மகளே தித்திக்கும் தமிழே
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: கண்ணன் நேசம்
 • பாடல்: இனியவள் வருகின்ற நேரம் என் இனியவள் வருகின்ற நேரம்
 • பாடல்: சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் மெல்லத்தான் வந்து வந்து சிரித்தேன்...
 • பாடல்: ஓயாமல் நான் பாடும் ஓராயிரம் பாடல்...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: ஆர். முத்துசாமி
  • பாடல்வரிகள்: அமிர்தகழி செ. குணரத்தினம்
 • பாடல்: நெஞ்சில் ஊறும் நேசம் அன்பின் ராகம் பாடும்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஸ்வரன்
  • இசை: எம். எஸ். செல்வராஜா
  • பாடல்வரிகள்: இரெட்டைப் பாதை சேகர்
 • பாடல்: சந்தனம் மணக்கும் பூங்காற்றே....
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: கண்ணன் நேசம்
 • பாடல்: காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: மட்டக்களப்பு நாட்டார் பாடல்
 • பாடல்: அவள் மார்கழி மாதத்துப் பனிக்காற்று...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: கண்ணன் நேசம்
  • பாடல்வரிகள்: கமலினி முத்துலிங்கம்
 • பாடல்: பூமகள் அவளோ நதி போலே...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்
 • பாடல்: பாரிது பாமழை நூராயிரம் தேன் சுளை...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்
 • பாடல்: நீதான் அன்பே நீதான் நிஜமாய் நானே நீதான்...
 • பாடல்: சண்முகன் அவதரித்த மாதம்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், சத்தியமூர்த்தி
  • இசை: முத்துசாமி
  • பாடல்வரிகள்: வீரமணி ஐயர்
 • பாடல்: பொட்டோடு பூச்சூட நாள்ளொன்று பார்த்தேன்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன்,ஜெகதேவி விக்னேஸ்வரன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்
 • பாடல்: பனிவிழும் இந்நாளில் பௌர்ணமி நன்நாளில்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன்,வனஜா சிறீனிவாசன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: வானத்து வெண்ணிலவில் எழில்வதனம் கண்டேன்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், வனஜா சிறீனிவாசன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: தென்றலே நீ ஒடிவா நாடிவா பாடிவா...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: பாலையூற்று அஷ்ரபா நூர்டின்
 • பாடல்: பூரணை நிலவு பொங்கிவர்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், வனஜா சிறீனிவாசன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: எருவில் மூர்த்தி
 • பாடல்: நிலவுப் பொய்கை வதனத்தில் ஓர்...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: எருவில் மூர்த்தி
 • பாடல்: வானத்திரையினிலே உன் வண்ணம் தெரிந்ததடி...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: கீழ்க்கரவை குலசேகரன்
 • பாடல்: கையைக் காலை ஆட்டிப் பாலன் கவலை மறக்கச் செய்கிறான்...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: முத்துசாமி, மோகன்ராஜ்
 • பாடல்: இறைவன் படைப்பினில் நான் ஒருவன்...
  • பாடியவர்: ரி.கிருஷ்னன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: இதயத்தில் உறங்கும் வீணையை கண்ணீர் விரலால் மீட்டினேன்...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: இளவேனிற் காலம் இளமாலை நேரம் ஒரு ஜோடி குயில் பாடுது...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், வனஜா சிறீனிவாசன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: கிளிவந்தது மொழி பேசுதோ...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: முழுநிலவு வதனம் காட்டி நின்றாள் முத்து நகை சிந்தி வந்தாள் சித்திரைப் பெண்ணாள்..
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: கண்ணன் நேசம்
  • பாடல்வரிகள்: கீழ்க் கரவை குலசேகரன்
 • பாடல்: பாய்ந்திடும் எங்கும் பனி நீரோடை...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்
 • பாடல்: மாதங்களிலே உயர் மார்கழி மாதமதாய்...
  • பாடியவர்கள்: ரி. கிருஷ்ணன், சத்தியமூர்த்தி, எஸ். கலாவதி
  • இசை: முத்துசாமி
  • பாடல்வரிகள்: வீரமணி ஐயர்
 • பாடல்: விழி பேசுது உந்தன் விழி பேசுது...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
 • பாடல்: சித்திரை நிலவோ செவ்வந்திப் பூவோ இத்தரை மீதினில் இறங்கிய எழிலோ...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்
 • பாடல்: முருகனைக் கண்டாயோ முல்லை மலரே...
  • பாடியவர்: ரி. கிருஷ்ணன்
  • இசை: மோகன்ராஜ்
  • பாடல்வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

மன ஓசை - ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் - வதிரி - சி. ரவீந்திரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._கிருஷ்ணன்&oldid=2752710" இருந்து மீள்விக்கப்பட்டது