உள்ளடக்கத்துக்குச் செல்

ரிஷி தவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிஷி தவான் (Rishi Dhawan (பிறப்பு:19 பெப்ரவரி ,1990) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2008 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 73 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3401 ஓட்டங்களையும் , 96 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1777 ஓட்டங்களையும் ,3 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 12 ஓட்டங்களையும் 89 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1666 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.[2] 2017 ஆம் ஆண்டின் ஐபிஎல்லில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.[3]

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்

[தொகு]

இவர் 2009 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.நவம்பர் 24, தர்மசாலா துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் தாதவுன் துடுப்பாட்ட அரங்கத்தில் கேரளா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இமச்சல பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ

[தொகு]

2008 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். பெப்ரவை 26 தில்லி துடுப்பாட்ட அரங்கத்தில் சர்வீசச் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 17 வதோதரா துடுப்பாட்ட அரங்கத்தில் தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

இருபது20

[தொகு]

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 3 தில்லி துடுப்பாட்ட அரங்கத்தில் தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் நவமபர் 18, சண்டிகார் துடுப்பாட்ட அரங்கத்தில் இரயில்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2016 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். [4]சனவரி 17 மெல்போர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். 2016 ஆம் ஆண்டில் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் சனவரி 17 அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.

2016 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சூன் 18, அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பன்னாட்டு இருபது 20 பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.espncricinfo.com/ci/content/player/290727.html Rishi Dhawan
  2. "Rishi Dhawan". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  3. "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  4. "India tour of Australia, 3rd ODI: Australia v India at Melbourne, Jan 17, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 17 January 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/895811.html. பார்த்த நாள்: 17 January 2016. 
  5. "India tour of Zimbabwe, 1st T20I: Zimbabwe v India at Harare, Jun 18, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷி_தவான்&oldid=2870171" இலிருந்து மீள்விக்கப்பட்டது