உள்ளடக்கத்துக்குச் செல்

ரிவியர் டெஸ் புளூயிஸ் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிவியர் டெஸ் புளூயிஸ்
ஒரு பாலத்திலிருந்து பார்க்கும்போது ரிவியர் டெஸ் புளூயிஸ் ஆறு
Map
அமைவு
நாடுபிரான்சு
பிராந்தியம்ரீயூனியன்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்இந்தியப் பெருங்கடல்
  ஆள்கூறுகள்
20°52′58″S 55°30′8″E / 20.88278°S 55.50222°E / -20.88278; 55.50222
நீளம்18.5 km (11.5 mi)

ரிவியர் டெஸ் ப்ளூயிஸ் (Rivière des Pluies, பிரெஞ்சு மொழியில் "மழைகளின் ஆறு" என்று பொருள்) என்பது பிரான்சின் கடல்கடந்த பிரதேசமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவில் உள்ள ஒரு ஆறாகும். இது செயிண்ட்-டெனீ மற்றும் செயிண்ட்-மேரி கம்யூன்களுக்கு இடையில், தீவின் வடக்குக் கரையில் கடலில் கலக்கிறது. இதன் நீளம் 18.5 கிலோமீட்டர் (11.5 மைல்) ஆகும்.[1]

இந்த ஆற்றின் பெயர் செயிண்ட்-மேரி மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு வைக்கப்படுள்ளது.

ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள்

[தொகு]

ரிவியேர் டெஸ் ப்ளூயிஸ் ஆற்றின், நீரோட்டத்தின் மேல்பகுதியிலிருந்து கீழ்ப்பகுதி வரை ஐந்து பாலங்கள் கடக்கின்றன.

  • நீர் பகிர்மானத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு கால்வாயைக் கொண்டுள்ள தொட்டிப் பாலம்.
  • டெஸ்பாசின் பாலம், பிரதான சாலை 45 ஆற்றைக் கடந்து செல்ல அமைக்கபட்ட சாலைப் பாலம்.
  • பொன் நெஃப், 102 ஆம் நெடுஞ்சாலை கடக்க அமைக்கபட்ட ஒரு சாலைப் பாலம்.
  • தேசிய நெடுஞ்சாலை 6 ஆற்றைக் கடக்க அமைக்ககப்பட்ட ஒரு சாலைப் பாலம், இதுவே மிக அண்மையில் அமைக்கபட்டது.
  • நெடுஞ்சாலை 2 இல் இள்ள ஒரு சாலைப் பாலம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sandre. "Rivière des pluies [40310170] - Cours d'eau selon la version Carthage 2017". www.sandre.eaufrance.fr (in பிரெஞ்சு). Retrieved 2026-02-07.