ரிலா ஹோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிலா ஹோட்டா
பிறப்பு24 ஏப்ரல் 1974 (அகவை 47)
பாலேஸ்வர்

ரிலா ஹோட்டா (ஒடியா : ରୀଲା ହୋତା) என்பவர் ஒரு ஒடிசி நடன கலைஞர், கல்வியாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் இவர் பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [1] [2] இவர் யோகா குரு, பிஜோய்லக்ஸ்மி ஹோட்டா மற்றும் பூர்ணா சந்திர ஹோட்டா ஆகியோரின் மகள் ஆவார். ரிலா சிறுவயதிலிருந்தே நடனம், யோகா போன்றவற்றை ஆசிரம வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். இவர் ஒடிசி நடனத்தை குரு கங்காதர் பிரதான், ஸ்ரீமதி மாதவி முட்கல் மற்றும் குரு கேளுச்சரண மகோபாத்திரா ஆகிய மூன்று ஆசான்களின் கீழ் பயிற்சி பெற்றார். இவருக்கு சரியான தாளம், நுட்பம், பாவம் மற்றும் பாவனைத் திறன்களைப் பயிற்றுவித்தனர். ரிலா ஹோட்டா, இந்திய ஆன்மீக தத்துவங்களான யோகா, குண்டலினி மற்றும் சமசுகிருதம் போன்றவற்றை இவரது ஆற்றுகையின் கருப்பொருளாக மாற்றுவதில் முன்னோடியாக இருந்தார். மேலும் ஆன்மீக அம்சமான ஒடிசி நடனத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்த பெருமைக்குரியவர் இவராவார்.

பின்னணி[தொகு]

இவர் ஸ்ரீ பூர்ண சந்திர ஹோட்டா, ஐ. ஏ. எஸ் மற்றும் பிஜோய்லக்ஸ்மி ஹோட்டா ஆகியோரின் இளைய மகள் ஆவார். பூர்ணா ஹோட்டா 1962 ஆண்டைய குடிமைப் பணிக் குழுவில் முதல் தகுதி நிலையைப் பெற்றார். குடிமைப் பணிக்குத் தேர்வானபிறகு யுபிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிஜோய்லட்சுமி ஹோட்டா [3] ஒரு சிறந்த யோகா ஆசிரியர் ஆவார். பிஜோய்லட்சுமி 'யோகா மற்றும் உணவு' என்ற பிரிவில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். [4] இவருக்கு ரீமா சிங், ஐஆர்எஸ் என்ற அக்காவும், பிரசென்ஜீத் ஹோட்டா என்ற அண்ணனும் உள்ளனர்.

தொழில்[தொகு]

இவர் தனது எட்டு வயதில் குரு கங்காதர் பிரதனின் கீழ் தன் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் குர்வி மாதவி முட்கல் மற்றும் புகழ்பெற்ற குரு கேளுச்சரண மகோபாத்திரா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது நடனத் திறனை மேம்படுத்தினார். [5] ஒரு சிறந்த ஆன்மீக குருவான பரமஹம்சா சுவாமி சத்யானந்த சரஸ்வதியுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பானது, இந்திய ஆன்மீக தத்துவத்தை இவரது நடன ஆற்றுகையின் கருப்பொருளாக மாற்ற ரீலாவை ஊக்கப்படுத்தியது. ரீலா ஹோட்டா, ரேஸ் ஆஃப் விஸ்டம் சொசைட்டி என்ற அமைப்பை நிறுவினார். இது பாரம்பரிய குணப்படுத்தும் முறைகளில் இசை, நடனம் மற்றும் முக்கிய சிகிச்சை முறைகளில் இன்றைய வாழ்க்கை முறையின் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துக்காட்டுகிறது. முதல் தரக் கலைஞரான இவருக்கு இந்திய கலைகளில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக சனதன் நிருத்ய புராஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. [6] இந்தியாவின் புது தில்லியில் இருந்து ரீலா செயல்பட்டுவருகிறார்.

தொலைக்காட்சி[தொகு]

தூர்தர்ஷன் பாரதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற இளைய பிரபல மற்றும் ஒரே ஒடிசி நடனக் கலைஞர் ரிலா ஹோட்டா ஆவார்: ‘பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்’ (What Celebrities Say)[7] என்ற நிகழ்ச்சியில் பத்ம பூசண் டாக்டர் ராஜா ரெட்டி, பண்டிட் பிர்ஜு மகாராஜ் மற்றும் பத்ம பூஷண் பண்டிட் தேபு சவுதாரி போன்ற முக்கிய கலைவல்லவர்களை. இவர் தூர்தர்ஷனில் செவ்வி கண்டார்.[8] இவர் ராஜ்யசபா தொலைக்காட்சிக்காக கலர்ஸ் ஆப் இந்தியா என்ற தொடருக்கான கூட்டணி நடன நிகழ்ச்சியை தயாரித்து ஆடினார்.[9] இந்த நிகழ்ச்சியில் கலைஞர்களான போக்டன் கனிலா, கிறிஸ்டினா டிஜ்மாரு, லிப்சா தாஸ் மற்றும் பலர் இடம்பெற்றனர். முன்னதாக இவர் மக்களவை தொலைக்காட்சித் தொடரான "State of Culture" என்ற நிகழ்ச்சியிலும் ஆடியிருந்தார்.

விருதுகள்[தொகு]

  1. இந்திய கலைகளுக்கு சிறந்த பங்களிப்பு செததற்காக ராய் அறக்கட்டளையின் சனாதன சங்கீத சமஸ்கிருதியின் சனாதன நிருத்ய புராஸ்கர் விருது (20007) [10]
  2. சென்னை, உத்சவ் மியூசிகால், உத்சவ் நிருத்ய ரத்னா விருது (2012)
  3. பி. எச். டி. சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரியால் கலை மற்றும் கலாச்சார பாராட்டு விருது (2018)
  4. ஆசிய கலை அகாடமி மற்றும் சர்வதேச ஊடக தொழில்துறை கழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அடல் பிஹாரி வாச்பாய் விருது (2018)

[11]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிலா_ஹோட்டா&oldid=2975537" இருந்து மீள்விக்கப்பட்டது