ரியா கபூர்
ரியா கபூர் | |
|---|---|
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரியா கபூர் | |
| பிறப்பு | 5 மார்ச்சு 1987 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
| பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது வரை |
| பெற்றோர் | அனில் கபூர் (தந்தை) |
| வாழ்க்கைத் துணை | கரண் பூலானி (தி. 2021) |
ரியா கபூர் (Rhea Kapoor) (பிறப்பு மார்ச் 5,1987) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[1][2] இவர் தனது சகோதரி சோனம் கபூருடன் இணைந்து ரியாசன் என்ற ஆடைகலன் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[3]
இளமை வாழ்க்கை
[தொகு]ரியா கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் அவரது மனைவி சுனிதாவின் மகளாவார். நடிகை சோனம் கபூர் இவரது சகோதரியாவார். மேலும் இவருக்கு ஹர்ஷ்வர்தன் என்ற சகோதரர் உண்டு.[4][5] ரியா கபூர் நியூயார்க் பல்கலைக்கழக "நாடக இலக்கியத்தில்" பட்டம் பெற்றவர்.
12 ஆண்டுகாலமாக காதலித்து வந்த கரண் பூலானி என்பவரை 14 ஆகஸ்ட் 2021 அன்று திருமணம் செய்து கொண்டார்.[6]
தொழில் வாழ்க்கை
[தொகு]கபூர் 2010 ஆம் ஆண்டில் இராஜஸ்ரீ ஓஜா இயக்கிய ஆயிஷா என்றத் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக தனதுதிரை வாழ்க்கையைத் தொடங்கினார். இதில் அவரது சகோதரி சோனம் கபூர் மற்றும் அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பின்னர் 2014 ஆம் ஆண்டு சஷாங்கா கோஷ் இயக்கிய கூப் சூரத் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இது இருசிகேசு முகர்ச்சி இயக்கிய அதே பெயரில் 1980-இல் வெளியான படத்தின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் ஆகும்.[7] 2017 ஆம் ஆண்டில், தனது சகோதரி சோனம் கபூருடன் ரியாசன் என்ற ஆடைகலன் சங்கிலித் தொடர் நிறுவனத்தை தொடங்கினார்.[8]
ரியா கபூர் இணைந்து தயாரித்த வீரே தி வெட்டிங் என்றத் திரைப்படம் 1 ஜூன் 2018 அன்று வெளியிடப்பட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rhea Kapoor scouts for locations for next in Tampa Bay". Zeenews.india.com. 3 February 2014. Retrieved 10 March 2014.
- ↑ "Anil Kapoor unhappy with daughter Rhea's love story". Mumbai Mirror. 29 May 2013. Retrieved 10 March 2014.
- ↑ "Is 'Rheson' Sonam Kapoor's idea? Sister Rhea Kapoor says yes!". இந்தியன் எக்சுபிரசு. May 13, 2017.
- ↑ "My girls have grown up watching Disney movies: Anil". The Times of India. Timesofindia.indiatimes.com. 9 December 2013. Retrieved 10 March 2014.
- ↑ "When B-Town parents give their children a career boost - The Times of India". Timesofindia.indiatimes.com. 4 February 2014. Retrieved 10 March 2014.
- ↑ "Met On Set, I Tried To Bully Her: Karan Boolani's "True Story" Of Falling In Love With Rhea Kapoor". NDTV.com. Retrieved 2021-08-30.
- ↑ Apurva Singh (1 May 2014). "Apurva Singh". indianexpress. Retrieved 2 May 2014.
- ↑ Upala KBR (12 December 2013). "The original 'Khoobsurat' actress Rekha told Sonam Kapoor that she was the best choice for the remake". Daily News and Analysis. Retrieved 22 July 2014.
- ↑ "'Veere Di Wedding' will release on June 1 - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/veere-di-wedding-will-release-on-june-1/articleshow/62486885.cms.