இரியாக்ட் இயக்குதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரியாக்ட் இயக்குதளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரியாக்ட் இயக்குதளம், ஒரு கட்டற்ற உரிமம் உள்ள இயக்குதளம் ஆகும். இது சி மற்றும் சி++ நிரல் மொழிமூலம் உருவாக்கபட்டது. 1998 ஆம் ஆண்டு இதன் முதல் பாதிப்பு வெளியானது. வரைகலை பயனர் இடைமுகம் கொண்ட இயக்குதளம் என்பதனால் விண்டோஸ் இயக்கு தளத்துக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.[1][2][3]

இரியாக்ட் இயக்குதளம் 0.4.7

1996-ஆம் ஆண்டு கட்டற்ற மென்பொருள் உருவாக்குனர் குழு பிரீவின் 95 என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் விண்டோசு 95 இயக்குதளத்திற்கு பதிலாக ஒருமாற்று கட்டற்ற இயக்குதளம் உருவாக்க விழைந்தனர்.

இரியாக்ட் இயக்குதளம் 0.3-5

விண்டோசு இயக்குதளத்தின் வலையமைப்பு சேவைகளை கட்டற்ற மென்பொருள் சாம்பா மூலம் பயன்படுத்தலாம்.

2015 ஆம் ஆண்டு இரசிய அரசின் தொடர்பியல் அமைச்சகம் ரியாக்ட் இயக்குதளம் தனிநபர் மேசைகணினியிலும், வழங்கி கணினியிலும் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயக்குதளத்திற்கு மாற்றாக இதனைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிய கட்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயங்குதளத்தில் சார்ந்து இருப்பதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளது.

வெளிஇனைப்புகள்[தொகு]

https://www.reactos.org/

மேற்கோள்கள்[தொகு]

  1. "ReactOS on Open Hub". openhub.net. Black Duck Open Hub. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  2. "ReactOS on GitHub". GitHub. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
  3. "Download | ReactOS Project". www.reactos.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியாக்ட்_இயக்குதளம்&oldid=3768987" இலிருந்து மீள்விக்கப்பட்டது