ரித்விக் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரித்விக் ராஜா
Rithvik Raja at Svanubhava, 2012.jpg
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்ரித்விக்
பிறப்புமார்ச்சு 9, 1989 (1989-03-09) (அகவை 31)
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)கர்நாடக இசைப் பாடகர்
இசைத்துறையில்2001 முதல் தற்போதுவரை
இணையதளம்http://www.rithvikraja.in

ரித்விக் ராஜா (Rithvik Raja) (பிறப்பு: 1989 மார்ச் 9) இவர் இந்தியாவின் பாரம்பரியக் கருநாடக இசைக் கலைஞராவார். (தென்னிந்திய செம்மொழி இசை). இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரித்விக், பரதநாட்டியக் கலைஞர் சுவேதா பிரச்சண்டே என்பவரை 2016, ஜனவரி 30 அன்று திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ரித்விக் ராஜா இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தார். இவர் தனது 5ஆவது வயதில் கருநாடக இசையை கற்கத் தொடங்கினார். குரல் இசைக்காக தனது தாயார் சுதா ராஜாவின் கீழ் ஆரம்ப பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அடிப்படைகள் மற்றும் அடித்தளத்தைப் பற்றிய நல்ல புரிதலை வளர்த்துக் கொண்டபின், சுலோச்சனா பட்டாபிராமன் என்பவரிடம் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். தனது 13வது வயதில், டி. எம். கிருட்டிணாவிடமிருந்து இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார், [1] இவர் இன்று கருநாடக இசை வட்டத்தின் முன்னணி நபர்களில் ஒருவராக இருக்கிறார். கிருட்டிணாவின் கீழ் இவரது பயிற்சியானது ரித்விக்குக்கு இசையின் ஒரு பெரிய கண்ணோட்டத்தையும், பாரம்பரியத்தின் எல்லைகளுக்குள் புதுமைப்படுத்துவதற்கும் சிறந்து விளங்குவதற்கும் கடினமாக பாடுபடுவதற்கான ஆர்வத்தை அளித்துள்ளது. [2]

கல்வி[தொகு]

சென்னை, மயிலாப்பூரிலுள்ள வித்யா மந்திர் மூத்த மேல்நிலைப் பள்ளியில் இவரது பள்ளிப்படிப்பு இருந்தது. சென்னையில் உள்ள இராமகிருட்டிணா மிஷன் விவேகானந்தர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆழ்வார் பேட்டையில் இமேஜ் இன்ஃபோடெயின்மென்ட் என்ற நிறுவனத்தில் ஓராண்டு பல்லூடகம் சார்பான படிப்பையும் முடித்துள்ளார். இவர் தற்போது ஒலிப்பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒலிப்பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

ரித்விக் மிகச் சிறிய வயதிலிருந்தே பொது நிகழ்ச்சிகளையும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். இன்று, சென்னை மற்றும் மும்பை, கல்கத்தா, பெங்களூர், தில்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இவர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இசை நிகழ்ச்சிகளைத் தவிர, பாரம்பரிய இசைக் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே பரப்புவதைக் அசோசியேசன் ஃபார் கிளாசிக்கல் மியூசிக் (YACM)] என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். ரித்விக் தனது திடமான குரலுக்காக சரியான சுருதி, லயத்தின் மீது தேர்ச்சி மற்றும் பார்மபரியத்தைக் கடைப்பிடிப்பதில் பெயர் பெற்றவராவார். [3]

ரித்விக் இசை மற்றும் கலைப்படைப்பு மீதான இவரது அர்ப்பணிப்பும் இவரை உலகம் முழுவதும் மதிப்புமிக்க பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்யவும், நிகழ்த்தவும் வழிவகுக்கின்றன. இவர் சமீபத்தில் நியூசிலாந்து, அபுதாபி, மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணங்களை முடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

 • பால ரசிகர் விருது 2004 - கர்நாடிகா, சென்னை.
 • சிறந்த ஆண் பாடகர் விருது 2005 - இராஜா அண்ணாமலைபுரம் பக்த ஜனசபை, சென்னை
 • மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கலைஞர் விருது 2006 - கானமுகுந்தப்பிரியா, சென்னை
 • சிறந்த கச்சேரி விருது 2007 - விடிஎஸ் கலைகள் அகாதமி, சென்னை
 • சிறந்த இளம் பாடகர் விருது 2008 - நாரதா கானசபா, சென்னை
 • சிறந்த ஆண் பாடகர் விருது 2009 - பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை
 • சிறந்த ராகம் தானம் பல்லவி விருது 2011 - இசை மன்றம், சென்னை
 • சிறந்த ஆண் துணை மூத்த பாடகர் 2011 - பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை
 • மகாராஜபுரம் சந்தானம் விருது 2012 - கிருஷ்ண கானசபா, சென்னை
 • இசைச் சுடர் 2012 - கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை
 • யுவ கலா பாரதி 2012 - பாரத் கலாச்சார், சென்னை

குறிப்புகள்[தொகு]

 1. "YACM Turns 25". The Hindu. 20 August 2010. http://www.thehindu.com/arts/music/article584102.ece. பார்த்த நாள்: 21 July 2011. 
 2. "Music has shaped my thought process". http://www.carnaticdarbar.com/interviews/2009/interviews_Rithvik_Raja.asp. 
 3. "Perfect Control over Laya". The Hindu. 14 December 2009. http://www.thehindu.com/arts/music/article65077.ece. பார்த்த நாள்: 21 July 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்விக்_ராஜா&oldid=2943557" இருந்து மீள்விக்கப்பட்டது